Horoscope

வியாழன், டிசம்பர் 25

கப்பல் விமர்சனம்


கப்பல் விமர்சனம்
வைபவ்,கருணாகரன்,குண்டு அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம் ஆனால் நட்பு போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே முடிவெடுக்கின்றனர்.ஆனால் வைபவுக்கு லவ் பண்ணனும்ன்னு ஆசை.
அதனால் நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னை வந்து VTV கணேஷுடன் தங்குகிறார் . சென்னையில் உள்ள ஒரு பப்பில் ஹீரோயின் சரக்கடிக்க போக வைபவ் அந்த பொண்ணிடம் காதல் வய படுகிறார்.
இவரை தேடி சென்னை வரும் நண்பர்கள் இவர் லவ் பண்ணுவதை அறிந்து காதலை   பிரிக்க முயற்சிக்கிறார்கள். பின்னர் மனம் திருந்தி காதலை சேர்த்து வைக்கிறார்கள். இதுதான் கதை.
ஆனால் கொட்டாவி வர வைக்கும் காட்சி அமைப்புகள்.  கொஞ்ச நேரம் போரடிக்காமல் காமடியாக இருக்கிறது. ஊரு விட்டு ஊரு வந்து ரீமிக் பாடலும் சாக்லேட் பாடலும் அருமை.
ஹீரோ கதை சொல்லி அறிமுகம் ஆகும் காட்சி மட்டும் கொஞ்சம் சுவாரஷ்யம். ஹீரோயின் நல்ல அழகு. எப்போதும் சரக்கடித்து விட்டு பெண்களை மட்டமாக பேசும்  காட்சிகளும் அதிகம்.
ஒவ்வொரு தடவையும் வைபவுக்கு பதில் VTV கணேஷ் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சி நல்ல காமடி.

 இந்த கதை ஷங்கருக்கு எப்படி பிடித்ததோ தெரியவில்லை.

வெள்ளி, அக்டோபர் 24

கத்தி - மில்லியன் டாலர் கேள்விகள்


1. ப்ளூ பிரிண்ட் வச்சி ஜெயிலரால கண்டு பிடிக்க முடியாதத  ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறாரோ ?
2. அது ஏன் மேப் பார்க்கும்போது டேபிளுக்கு கீழ பார்க்கிறாரோ(உள்ளத்தை அள்ளித்தா பட பாட்டுக்கு பன்னிக்குட்டி ராமசாமி திரைக்கு கீழ போயி பார்த்த மாதிரி)
3. எந்த ஏர்போர்ட்ல இமிக்கிரேஷன் பாரம் பில் பண்ற இடம் வரைக்கு விசிட்டர்ஸ அலவ் பண்றாங்க? சதீஷும் சமந்தாவும் எப்படி அங்க போனாங்க?
4.  வில்லன் ஜீவா விஜய் தப்பிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணி அவனோட ஆளுக ரெண்டு பேரையும் கூட அனுப்புறான். அட மாங்கா மண்டையா அதுக்கு நீயே தப்பிக்கலாமே.
5. கூட  வந்த ரெண்டு பெரும் என்ன ஆனாங்க? அவனுக ஏன் கத்தி விஜய்யை கொலை பண்ண கடைசி வரைக்கும் வரல?
6. அந்த வில்லன் என்ன ஆனான்?
7. 3 நாளா போலீஸ் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கல?
8. எல்லோருக்கும் குளிக்கிறப்ப தண்ணி நிக்கிற மாதிரி காட்டுறாங்க. இங்க எல்லோருமே போர் தண்ணிலதான்  குளிக்கிறாங்க. பிறகு எப்படி தண்ணி நிக்கும்?
மீதி கேள்விகளை யாரும் கேட்கலாம்



புதன், ஆகஸ்ட் 28

கர். தூ. இதெல்லாம் ஜோக்கா?

Terror Pandian : மச்சி ஜந்து ஜந்து ஜந்து அப்டின்னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்காமே?
Pannikkutti : மூதேவி அது ஜந்து ஜந்து ஜந்து இல்லை. ஐந்து ஐந்து ஐந்து. எப்பபார்த்தாலும் உன்ன பத்தியே நினைப்பு.
===================
Terror Pandiyan : மச்சி பழைய காரை கொடுத்து புது கார் வாங்கினா ஒரு லட்ச ரூபாய் டிஸ்கவுன்ட் தர்ரானாம்.
Pannikkutti : சரி வாங்கித் தொலைய வேண்டிதான
Terror Pandian : என்கிட்டத்தான் பழைய கார் இல்லியே
Pannikkutti : அப்போ ஒன்னு செய். முதல்ல ஒரு புது கார் வாங்கி மரத்துல சுவர்ல போயி முட்டி டேமேஜ் பண்ணு. அப்புறம் அது பழைய கார் ஆகிடும். அப்புறம் அத போயி கொடுத்து ஒரு லட்ச ரூபாய் டிஸ்கவுன்ட் வாங்கி புது கார் வாங்கு.

Terror Pandian : !!!!!
=======================
நான்: இந்தவாட்டி என் பர்த்டே ஜாம் ஜாம்ன்னு கொண்டாடனும்.
என் மனைவி: ஏன் எப்ப பார்த்தாலும் ஜாம் ஜாம்ன்னு கொண்டாடுறீங்க. இந்த வாட்டி பிரட் பிரட்ன்னு கொண்டாடுங்க.
நான்: !!!
====================
நான்: ச்சே என்ன வெயில் என்ன வெயில். ஒரே கச கசன்னு இருக்கு.
என் மனைவி: அப்படியா. கச கசவ வச்சி பிரியாணி பண்ணிடலாம்.
நான்: !!!
=======================
நேத்து கொஞ்சம் அசதியா இருக்கேன்னு சேர்ல உக்காந்து தூங்கிட்டேன்.

என் மனைவி: எந்திரிச்சு கட்டில்ல போயி தூங்குங்க

நான்: பரவாயில்லை. இங்கே வசதியாத்தான் இருக்கு.

என் மனைவி: சேர்ல தூங்குனா வசதியா இருக்கீங்களா?

நான்: ஆமா..

என் மனைவி: அப்போ எனக்கு ஒரு டயமண்ட் நெக்லஸ் வாங்கித்தாங்க.

நான்: அவ் எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!!!

============================
டிஸ்கி: இதெல்லாம் ஒரு ஜோக்கான்னு மொக்கை மற்றும் டெரர்  கும்மி பாய்ஸ் காரி துப்புவாங்க. அதனால நானே என்னை துப்பிக்கிட்டேன். ஏன்னா என்னை யாரும் காரி துப்ப முடியாது. நானே துப்பிக்கிவேன். !!!

ஞாயிறு, ஜூன் 16

சோஹி தானி





சென்னை பூந்தமல்லி ஹைரோட்டில் க்வின்ஸ்லேண்ட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராஜஸ்தான் ரெசார்ட்தான் சோஹி தானி. உள்ளே நுழைந்ததும் ராஜஸ்தானி பெண்மணி நெற்றியில் குங்குமம் வைத்து வணக்கம் சொல்கிறார். வாசலில் இரு சிறுவர்கள் மேளம் வாசிக்க ஒரு உயர்ந்த மனிதன் வணக்கம் வைத்து வரவேற்கின்றனர். நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 550 ரூபாய். குழந்தைகளுக்கு 350 ரூபாய்.










உள்ளே நுழைந்ததும் பிரமாண்டமான அரண்மனை போல கட்டிடங்கள். அதில் ஒரு இடத்தில் போட்டிங் இருக்கிறது. அந்த ஏரியாமுழுவதும் அரிக்கேன் லைட் மாட்டி அதில் 0 வாட்ச் குண்டு பல்பை மாட்டி வைத்துள்ளனர். இரவில் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. அதற்க்கு பின் ராஜஸ்தான் வில்லேஜ் அழகாக செட் போட்டிருக்கின்றனர். ஆங்காங்கே ராஜஸ்தான் மக்கள் உற்காந்து கொண்டு டான்ஸ், மியூசிக், மேஜிக் என அமர்க்களப் படுத்துகின்றனர்.




அதன் பின் ஒரு குகைக்குள் ஷீரடி பாபா கோவில் இருக்கிறது. ஜெயின்ட் வில், குதிரை வண்டி சவாரி, ஒட்டக சவாரி என ராஜஸ்தானையே கண்முன் கொண்டு வருகின்றனர். ஒட்டக சவாரி பயங்கர த்ரில். எப்ப கீழே விழுவமொன்னு பயமாகவே இருந்தது. அதன்பின் பலூன் சுடுதல், வளையத்தை போட்டு பொருளை எடுப்பது, வில் அம்பு என நிறைய Skill Games இருக்கிறது.


அதற்க்கப்புறம் ராஜஸ்தான் ஸ்டைல் கோவில்கள்(பிள்ளையார் கோவில், கிருஷ்ணன் கோவில்) என இருக்கிறது. குழந்தைகளுக்காக சிங்கம் புலி, முதலை, மான் போன்ற மிருகங்களின் சிலைகளும், அரசர் கால மணி, பவுண்டைன், சறுக்கு எல்லாம் இருக்கிறது. கயிறு மேல் நடக்கும் சாகசம், தலையில் தீச்சட்டி வைத்து ஆடும் பெண், பொம்மலாட்டம், அருவி என அட்டகாச செட்டிங்க்ஸ்ஸும் உண்டு.





அதன் பிறகு கடைசியில் சாப்பாட்டு ஏரியா. தரையில் குஷன் சீட் அதற்க்கு முன் கணக்குப்பிள்ளை வைத்திருப்பது போல சின்ன சைஸ் டேபிள். தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். ராஜஸ்தானி ஸ்டைல் அன்லிமிட்டெட் சாப்பாடு(நிறைய உணவுகளின் பெயர் தெரியவில்லை. அவ்). எது வேணாம்னு சொன்னாலும் சார் எங்க ஊர் சாப்பாடு நல்லா இருக்கும் தயவு செஞ்சு டெஸ்ட் பண்ணி பாருங்க என அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்கள் அன்புக்காகவே அனைத்து உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் பார்த்தேன். சாப்பிட்டு முடிந்தவுடன் சார் சாப்பாடு நல்லா இருந்ததா எங்கள் சர்வீஸ் பிடித்திருந்ததா என மிகவும் அன்புடன் கேட்கின்றனர்.

எல்லா இடத்திலும் டான்ஸ், மேஜிக், கயிறு மேல் நடப்பவர்கள் இவர்களுக்கு நாம் விருப்பப்பட்டால் காசு கொடுக்கலாம். அன்புடன் பெற்றுக்கொள்கின்றனர். மொத்தத்தில் 550 ரூபாய்க்கு திருப்தியான இடம். குழந்தைகளுடம் போய் என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம். ஆனால் யாருக்கும் தமிழோ,இங்கிலிசோ தெரியவில்லை. ஹிந்தி மட்டுமே தெரிகிறது. எதையும் அவர்களிடம் சொல்லி புரியவைக்க முடியவில்லை என் மனைவிக்கு ஹிந்தி தெரியும். அதனால் சமாளிக்க முடிந்தது. ஆனால் வந்திருந்த பார்வையாளர்களில் 90% நார்த் இந்தியன்ஸ் மட்டும்தான். நம்ம ஊர் பேமிலி ஒரு 50 பேர்தான் இருந்திருப்போம். ஒரு தடவை போய்  வாருங்கள். கண்டிப்பாக பிடிக்கும்.

வெள்ளி, மார்ச் 8

ரெண்டாவது படம் ஆடியோ ரிலீஸ்

உதவி இயக்குனர் சந்தோஷ் அவர்களின் அழைப்பின் பெயரில் இன்று காலை 8.30 மணிக்கு சத்தியம் தியேட்டரில் நடைபெற்ற சி.எஸ் அமுதனின் ரெண்டாவது படம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். சினிமா பிரபலங்கள் நிறைய பேர் வந்திருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் மதன் கார்க்கி டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். இன்னொருபக்கம் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் பேசிக்கொண்டிருந்தார்.  

















இடையில் நடிகை கஸ்தூரி கோட் சூட் போட்டு பக்காவாக வந்தார். போட்டோ எடுப்பதற்குள் மாயமாக மறைந்து போனார். சிவாஜி சந்தானம், சிங்கர் ஸ்ரீராம்,வேல்முருகன் வந்திருந்தனர்.

இமான் அண்ணாச்சி பேசுகையில் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி, மிகவும் அழகான இளைஞன் வருவதாக சொல்லி,அப்படி யாருமே இல்லாததால் நானே தொகுத்து வழங்குறேன்னு சொல்லி இமான் அண்ணாச்சியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏம்பா கைதட்டுங்கப்பா அப்பத்தான் எனக்கு சம்பளம் கிடைக்கும்ன்னு சொல்லிகொண்டிருந்தார். சுத்தமான தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.


நிகச்சியில் சில துளிகள்:

முதலில் trailer அப்புறம் ஒரு பாட்டு விஷுவல் அப்புறம் ஒரு பாட்டு ஆடியோ மட்டும் போட்டாங்க

கே.வி ஆனந்த்:

AGS ல ரொம்ப கேள்வி கேட்டா துரத்திடுவாங்க. இல்லைன்னா அங்கையே பெரிய ஆளா வருவாங்க. சி.எஸ். அமுதன் நிறைய கேள்வி கேப்பார். அதனால அங்கிருந்து துரத்தி விட்டுட்டாங்க. பெரியாளாவும் ஆகிட்டார். தமிழ்படம் போல இந்த படமும் மிகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்த படத்தின் கேமிராமென் முதல்வன் படத்தில் என்னுடன் பணியாற்றியவர்.

சித்தார்த்:

சி.எஸ்.அமுதன் என்னோட நல்ல நண்பன். சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணு அமுதன். படத்துக்காக காக்க வைக்காதே. ஆல் தி பெஸ்ட்.

அருண் விஜய்:

என் படத்துக்கு பேர் வச்சோம் தடையற தாக்கன்னு . நிறைய பேருக்கு படம் பேரே சொல்லத் தெரியலை. ஆனா அமுதனுக்கு தமிழ் படம், ரெண்டாவது படம் அப்படின்னு ஈசியா பேர் வச்சிடுறார். அடுத்த படத்துக்கு அடுத்த படம் இல்லைன்னா மூணாவது படம்ன்னு பேர் வைப்பாரு போல.

ரம்யா நம்பீசன்:(இவரை அழைக்கும்போது இமான் அண்ணாச்சி திரு.ரம்யா என அழைக்க அரங்கம் முழுதும் சிரிப்பு)

படத்தை தியேட்டர்ல பாருங்க ஆடியோ சீடி வாங்கி பாருங்க. சாரி பாட்டு கேளுங்க. (இங்கிலீஷ் ல கொஞ்சம் பேசினாங்க)


சின்மயி:

அமுதன் பயங்கரமா கலாய்ப்பார் என் கம்பனிக்கு பேர் வச்சு கொடுத்து லோகோ செஞ்சு கொடுத்தது அவர்தான். அவர் நல்லா பாட்டு பாடுவார். விடாதீங்க.

ராதாமோகன்:

தமிழ்படம் பார்க்கும்போது என் படத்தை கலாய்க்கலையே அப்டின்னு நினைச்சேன். என் படத்தை கலாய்ச்ச பிறகுதான் அப்பாடி அவர் கலாய்க்கிற அளவுக்கு நாமளும் படம் எடுத்திருக்கொம்ன்னு தோனுச்சு.

விமல்:

எல்லோருக்கும் வணக்கம்(இவர் சொன்ன டோன்ல எல்லோரும் சிரிச்சிட்டாங்க). இந்த படத்துல கதை இருக்கு. மெசேஜ் இருக்கு. இந்த மெசேஜ் உங்களுக்கு தேவையானதா இருக்கும். நன்றி வணக்கம்.( உடனே பேசிட்டு போயிட்டதாலே போட்டோ எடுக்க முடியல)

ரவிந்த் ஆகாஷ்:(படத்துல மளிகை கடைகாரர் வேஷம் அதே கெட்டப்லதான் வந்தார். இமான் அண்ணாச்சி கூப்ட்டு தம்பி கேண்டீன் மேல அங்க போப்பான்னு கலாய்ச்சார்)

இந்த படத்துல கதையே இல்லை. சும்மா என்ஜாய் பண்ணிட்டு வரலாம் மிச்ச படம் போல நாங்க மெசேஜ் எதுவும் சொல்லலை.

சி.எஸ்.அமுதன்(விமல் மற்றும் அரவிந்த் ஆகாஷை பார்த்து)

என்னடா ஒருத்தன் படத்துல கதை இருக்கு,மெசேஜ் இருக்குன்னு சொல்றான். ஒருத்தன் படத்துல கதையும் இல்லை,ஒரு மெசேஜ் இல்லைன்னு சொல்றான். ரெண்டு பெரும் பேசி வச்சிட்டு வர மாட்டீங்களா? ஜனங்க என்ன நினைப்பாங்க? மூணு வருசத்துக்கு முன்னாடி சினிமான்னா அப்புறம் நானே சினிமா டைரெக்டர் ஆகிட்டேன்.  அதனால யார் வேணாலும் சினிமா டைரெக்டர் .ஆகலாம். முயற்சி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மதன் கார்க்கி:

எனக்கு சின்ன வயசுல இருந்து அமுதனை பிடிக்காவே பிடிக்காது. என்னோட ஹிஸ்டரி மிஸ்சொட பையன் அவரு. அந்த மிஸ் என்னை திட்டிக்கிட்டே இருக்கிறதால எனக்கு அமுதனையும் பிடிக்காது. இந்த படத்துல 80 ல உள்ள மாதிரி பாட்டு வேணும்ன்னு கேட்டாங்க அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். பழைய பாடல்கள் நிறைய கேட்டேன். கண்ணன் நல்ல இசையமைப்பாளர். ஓமகசியா பாட்டில் ஸ்பூப் பாட்டுன்னாலும் அந்த மியூசிக் அருமையா இருக்கும்.

நான் யாருக்காவது சிபாரிசு செஞ்சான்னா கண்ணனை சொன்னா அவரு ஸ்பூப் இசையமைப்பாளர் ஆச்சேன்னு சொல்லுவாங்க. ஆனா அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர். (கார்க்கி ஒரு பாடல் வரிக்கு அர்த்தம் சொன்னா என் சம்பளைத்தை தரேன்னு இமான் அண்ணாச்சி சொன்னார். அந்த பாடல் வரிகளுக்கு கார்க்கி மேடையிலையே விளக்கம் அளித்துவிட்டார். கொஞ்சம் அதிகமாகவும், போரடிக்காமலும் பேசியவர் இவர் மட்டும்தான்). 80 ல வர்ற மாதிரி உள்ள பாட்டை இளையராஜா சார் மற்றும் அப்பாக்கு டெடிக்கேட் பண்றேன்.

கண்ணன்(இசையமைப்பாளர்)

இதுல 80ல வர மாதிரி ஒரு பாடல் வருது. ஓமகசியா மாதிரி இந்த பாடலும் எனக்கு பேர் வாங்கித்தரும். இதை இளையராஜா சார்க்கு டெடிக்கேட் பண்றேன். நன்றி.

கார்த்திக் சுப்புராஜ்:

தமிழ்படம் ரொம்ப நல்ல படம். அது போல இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஆடியோ சிடியை கேவி.ஆனந்த் வெளியிட சித்தார் பெற்றுக்கொண்டார்.




பிறகு இமான் அண்ணாச்சியை சத்யம் தியேட்டர் Restroom வாசலில் மடக்கி பிடித்தேன். எலேய் பாத்ரூம் வாசல்லையா மடக்கி பிடிப்பீங்கன்னு அவருக்கே உரிய கிண்டலோடு நன்றாக பேசிக்கொண்டிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது என்னையவாலே போட்டோ எடுக்குரீக. நான் போட்ட வெள்ளை வேட்டி சட்டை மட்டும்தாம்லே தெரியபோவுது. வீணா ஏம்லே போட்டோ எடுக்குரீகன்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். (அடுத்த குட்டிச் சுட்டீஸ்ல என்னையும் ஒரு குட்டிச் சுட்டியா சேர்த்து ப்ரோக்ராம் பண்றதா சொல்லிருக்கார்). அப்புறம் அவருடன் பேசிவிட்டு கீழே வந்தேன்.



கீழே என்னை அழைத்த உதவி இயக்குனர் சந்தோஷ் அவர்களிடம் சொல்லிவிட்டு அவர் புதிதாய் இயக்க போகும் முதல் படத்திற்கு வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.


உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது