Horoscope

வெள்ளி, டிசம்பர் 31

2011-புத்தாண்டு வாழ்த்துக்கள்


பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருசமாவது சில கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வோம். விட்டொழிக்க வேண்டிய சில நல்ல பழக்கங்கள்:

இந்த பிளாக் எல்லாம் படிக்கிறதை நிப்பாடினாலே போதும்.

பன்னிக்குட்டி: இந்த பிளாக் படித்தால் அடுத்தவங்க சொத்தை திருட ஆசை வரும். மாட்டிக்கொண்டு அடி வாங்க சாத்தியம் உண்டு.


மங்குனி அமைச்சர்: பக்கத்து வீட்டுல கரண்ட் இருந்து உங்க வீட்டுல கரண்ட் இல்லைனா அங்க போய் கரண்டை xerox எடுக்கனும்கிற கேவலமான ஐடியா எல்லாம் வரும்.

வெறும்பய: கேவலமா கவிதை எழுதி பிகர்கள் கிட்ட அடிவாங்க வேண்டிதிருக்கும்..

செல்வா: மொக்கை போட்டு தர்ம அடி வாங்க வேண்டிதிருக்கும்.

இன்னும் நிறைய இருக்கு. புது வருஷம் அன்னிக்கு நீங்க பயந்துட கூடாதுன்னு இதோட நிறுத்திக்கிறேன். சரக்கடிச்சுட்டு வேகமா வண்டி ஓட்டி போலீஸ்ல மாட்டாம புத்தாண்டை கொண்டாட வாழ்த்துக்கள். ஹிஹி ..
.....

திங்கள், டிசம்பர் 27

பிரபல பதிவர்(!!!!) வெங்கட் கடத்தலா-திடுக்கிடும் தகவல்

சனிக்கிழமை வரை ஏன் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது. ஒரு பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு சந்தோசமும் ஒரு பயங்கரமும் நடந்தது போன வாரத்துலதான்.

ஆமா. கோகுலத்தில் சூரியன் வெங்கட் சென்னைக்கு வந்துட்டார். அதனால சேலம் மக்களுக்கு சந்தோசம். சென்னை மக்கள் பீதி. உயிர்பயம். சரி மக்களுக்கு ஏதாச்சும் பண்ணனுமே. மங்குனி அமைச்சர்க்கு போன் பண்ணினேன். வெங்கட்டை வண்டலூர் ஜூவில் அடைத்து வைத்திருப்பதாகவும் மக்கள் நலன் கருதி அவரை கடத்தி கொண்டு போய் விடலாம் என ஐடியா கொடுத்தார்.

ஆன அதுக்கு முன்னால வெங்கட் அண்ணா நகரில் தங்கி இருப்பதாக எண்ணி மங்குனி அண்ணா நகரில் உள்ள எல்லா ஹோட்டல் வாசலிலும் கர்சிப் போட்டு இடம் பிடித்து வைத்திருந்தார். (காரணம்: 
மங்குனி அமைச்சர் சொன்னது… 67
அடப்பாவி , டீ,.வடை அப்புறம் டிபன் வேறையா ????? )மங்கு நீ எங்கையோ தப்பு பண்ற கண்டுபுடி, இனிமே யாராவது வெளியூர் பதிவர்கள் வந்தா முதல்நாளே அவுங்க தன்குற ஹோட்டல் வாசல்ல போயி படுத்துக்க , இந்த போலீஸ் பயபுள்ளை உன்னைய ஏமாத்திடுறான் )

சரின்னு வெங்கட்டை வண்டலூரில் இருந்து கடத்தி மெரினாவில் மங்குனி இருக்குமிடத்துக்கு கொண்டு போனேன். வெங்கட் பஜ்ஜி வேணும்னு கேட்டார். சரின்னு வாங்கி கொடுத்தேன்(யார் காசா? என்ன கேள்வி.?என்னை அவமான படுத்துரீங்க்களா? வெளியூர்ல இருந்து யாராச்சும் வந்தா என்னோட பர்சை வெளில எடுத்துடுவனா? வெங்கட் தான் காசு கொடுத்தாரு.ஹிஹி)

அப்புறம் எங்கள் டெரர் கும்மியின் போர்ப்படை தளபதி சௌந்தர் கிட்ட இவரை ஒப்படைத்து விடலாம் என  நினைத்தோம். ஆனால் அவர் வீடு அந்தமான் பார்டரில் இருப்பதால் அவ்ளோ தூரம் போக முடியவில்லை.

அதனால் எங்கள் டெரர் கும்மியின் போர்வாள் எஸ்.கே அவர்களிடம் ஒப்படைத்து விடலாம் என எண்ணி அவர் வீட்டிற்கு போனோம்(மறுபடியும் ஓசி டீயா). அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அந்த பிளானும் கேன்சல்.

செல்வாவுக்கு போன் பண்ணி உங்க தலைவரை கடத்தி இருக்கோம். ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து மீட்டுடு போ அப்டின்னு சொன்னா,  அட போங்கப்பா நானே அவர் வடை வாங்க காசு தர்ரான்னுதான் அவருக்கு ஜால்ரா அடிக்கிறேன். அஞ்சு லட்சத்துக்கெல்லாம் அவர் வொர்த் இல்லை அப்டின்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான்.(இனிமே VAS ஆளுங்க சவுண்டு கொடுப்பீங்க?)

வெங்கட்டுக்கு பசிக்குதுன்னு சொன்னதால KFC போய் ரெண்டு பேரும் சாப்பிட்டோம். வழக்கம் போல வெங்கட் தான் பில்லுக்கு பணம் கொடுத்தார்(எப்படியும் நான் செலவழிக்க மாட்டேன். நம்மளை கட்ட சொல்லிடுவாங்களோன்னு மங்குனி மெரீனாவிலிருந்தே  எஸ்கேப்பு). அப்புறம் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

நீதி: ரமேஷை நம்பி யார் வந்தாலும் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்காம அனுப்ப மாட்டான். வர்றவங்ககிட்ட காசு வாங்கியாவது சாப்பாடு வாங்கி கொடுப்பான். ஏன்னா சத்தியமா ரொம்ப நல்லவன். அடுத்து யாருப்பா சென்னை வர்றது?

மெயின் டிஸ்கி: காதல் கடலில் மூழ்க இங்க வாங்கோ!!!
......

ஞாயிறு, டிசம்பர் 26

பதிவர்களுக்கு மிகப்பெரிய ஆபர்!!

என்னங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இன்னுக்கு சரியான வேலை. அது சரி எல்லோரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஓ விசயமே தெரியாதா? ஒரு பிரபல பதிவருடைய காவியம் இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம்ல வரப்போகுதாம். நிறைய பேரு லீவ் போட்டு படிக்க போறாங்களாம்.

வெங்கட் கூட ஒருவாரம் அவர் பிளாக்குக்கு லீவ் விட்டுட்டு வலைச்சரம் படிக்க போறார்னா பாத்துக்கோங்க. போனா வராது. வந்தா போகாது. சீக்கிரம் வலைச்சரத்துல வந்து நல்ல விசயங்களை இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கத்துக்கிட்டு போங்க. நானும் கூட ஒரு வாரத்துக்கு அங்க படிக்க போயிடுவேன். நானும் முடிஞ்சா இந்த பக்கம் வரேன். எல்லாரும் சீக்கிரம் வலைச்சரத்துக்கு ஒடுங்க..

முக்கிய தகவல்: 

2006 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சுனாமி
2010 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: வெங்கட்டின் சென்னை வருகை.
....

வியாழன், டிசம்பர் 23

பதிவு எழுதுவது எப்படி?

ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே. என்ன பண்ணலாம்? மக்களுக்கு உருப்படியா ஏதாச்சும் பண்ணலாமா? 2011 வேற வர போகுது. இந்த வருசத்துல மக்களுக்கு நல்லது பண்ணனுமேன்னு யோசிச்சேன்(!!!).

1. சினிமா விமர்சனம் எழுதலாமா? 

வேணாம். முதல்நாள் முதல் ஷோ வேலையெல்லாம் விட்டுட்டு படத்துக்கு போகணும். இல்லைனா ஹிட்ஸ் கிடைக்காது. வேலைதான் முக்கியம்(என்ன வேலைன்னு யாராவது கேட்டா காதுல கட்டெறும்பை விட்டுடுவேன்)

2. அரசியல் பதிவு?

வேணாம். அதுக்கு தினமும் நியூஸ் பாக்கணும். பேப்பர் படிக்கணும். நமக்குதான் அந்த ரெண்டு பழக்கமும் கிடையாதே. அப்புறம் விஜய் படம் ரிலீஸ் பண்ணவிடாம பண்ற மாதிரி என்னை பதிவு எழுத விடாம பண்ணிடாங்கன்னா?(சந்தோஷமா? ஆசை தோசை அப்பளம் வடை)

3. புனைவு?

வேணாம். எனக்கு இளகின மனசு. சம்மந்த பட்டவங்க அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமாயிடும். அப்புறம் எதிர் பதிவு எழுதுரதுக்குன்னே டெரரா ஒருத்தன் பிளாக் ஓபன் பண்ணி வச்சிருக்கான். ஹிஹி

4. கவிதை?

வேணாம். அப்புறம் காதலிக்கிறவன் எல்லாம் வரிசைல நின்னுக்கிட்டு கவிதை எழுதி தர சொல்லுவான். அப்புறம் எங்க அண்ணன் தேவாக்கு போட்டியா நானா? நோ நோ...

5. கதை?

க்கும். ஏற்கனவே ஆரமிச்ச கதைக்கு ரெண்டாவது பாகம் எழுதி கிழிக்க முடியலை. இது வேறையா?(அந்த புக் வேற தொலைஞ்சு போச்சு. அவ்)

சரி என்ன பண்ணலாம். புது பதிவர்களுக்கு பதிவு எழுதுவதெப்படின்னு சொல்லி கொடுக்கலாமா? சரி எல்லோரும் நோட், பென்சில், பேனா எடுத்துட்டு(சிபி கிட்ட எல்லாம் போய் கேட்க கூடாது. அவர் நம்பர் 1 பதிவர்) வாங்க பதிவு எழுதுவதெப்படின்னு சொல்லி தரேன்.

1. முதல்ல | இப்படி ஒரு கோடு போடுங்க.
2. அப்புறம் | கோட்டுக்கு கீழ  அதோட சேருவது போல இடமிருந்து வலம் _ இப்படி ஒரு கோடு போடவும்.  
3. அப்புறம் அது முடியும் இடத்தில் | இப்படி ஒரு கோடு போடுங்க. இப்போ உங்களுக்கு ப ரெடி.
4. அப்புறம் தமிழ் பாண்ட் Use பண்ணி தி டைப் பண்ணுங்க. 
5. அதுக்கப்புறம் தமிழ் பாண்ட் Use பண்ணி வு டைப் பண்ணுங்க. 
6. இப்போ உங்களுக்கு பதிவு ரெடி.


என்ன காறி துப்பனும்னு முடிவு பண்ணிடீங்க. துப்பிட்டு போங்க. மனிதருள் மாணிக்கம், தெய்வப் பிறவி, தெய்வத்துள் தெய்வத்தை காறி துப்பினால் 2011-வது வருடம் சிறப்பாக அமையும்னு காரமடை ஜோசியர் சொல்லிருக்காரு. வாழ்க வளமுடன். ஹிஹி...
.....

புதன், டிசம்பர் 22

நான் பதிவுலகுக்கு வராமல் இருந்திருந்தால்

நம்ம சினிமாகாரங்ககிட்ட நீங்க நடிக்க வராமல் இருந்த என்ன ஆயிருப்பீங்கன்னு கேட்டா வண்டி வண்டியா கதை சொல்லுவாங்க. நானும் சரி நம்ம பிரபல பதிவர்கள் கிட்ட நீங்க பதிவுலகுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பீங்கன்னு கேட்டேன். அவங்க என்ன சொன்னாங்கன்னு நீங்களே கேளுங்க:


பன்னிகுட்டி ராம்சாமி:அடிங்கோன்னியா. இது இப்போ ரொம்ப முக்கியமா. எல்லா பயலுகளும் ஒன் ஸ்டேப் பேக் மேன். டாக்டர் கட்சில சேர்ந்து கொ.ப.சே ஆயிருப்பேன். நம்ம திறமையை பத்தி தரித்திரத்துல சீ சரித்திரத்துல வரும். குழந்தைங்க பாடத்துல படிப்பாங்க. அப்படியே காவலன் படத்துக்கு ஆள் தேத்திக்கிட்டு இருந்திருப்பேன்.
=============================================
ப்ரியமுடன் வசந்த்: நான் முதல்ல வேலைல இருந்து ரிடையர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் 75 வயசுல வேலைக்கு போவேன்.

நான்: இப்போ ரிடயர்டு ஆகி என்னது 75 வயசுல வேலைக்கு போவீங்களா?

ப்ரியமுடன் வசந்த்: வித்தியாசமா யோசிக்கணும் மாப்பு. எல்லோரும் பண்றமாதிரி நாமளும் பண்ணினா நமக்கு மரியாதை இருக்காது. அப்புறம் காதலர்களுக்கெல்லாம் லவ் லெட்டர் எழுதி தருவேன்.
=============================================
பனங்காட்டு நரி: தெரியலையே மச்சி. என்ன ஆகணும்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சிருந்தேன். அததான் தேடிக்கிட்டு இருக்கேன். கிடைச்சதும் போன் பண்ணி சொல்றேன். ஆமா யாருக்கு போன் பண்ணனும்?
=============================================
பட்டாப்பட்டி: அடிங் ^%$^$%^. எங்க வந்து என்ன கேள்வி. நான் ஜெர்மன் மொழில PHD வாங்கலாம்னு இத்தாலி போயிருப்பேன். தலைவர் ராகுல் வாழ்க. அன்னை வாழ்க.
=============================================
மங்குனி அமைச்சர்: வெங்காயம்.

நான்: என்ன சார் திட்டுறீங்க.

மங்குனி:யோவ் நான் உன்னை சொல்லலை. வெங்காயம் விலை கூடிபோச்சு. அதை குறைந்த விலையில் மக்களுக்கு விற்பேன். அப்புறம் கேபிள் கடை வைப்பேன். யாராவது ஊருக்கு போனா அவங்க பின்னாடியே கேபிளை தூக்கிட்டு ஓடுவேன். அப்புறம் எதுவும் தொலைந்து போகாமல் இருக்க ஐடியா கொடுப்பேன்(நரி ஓடிவாடா செல்லம்) ஹிஹி
=============================================
ஜெய்லானி: ஆமா. வேலைக்கு ஏன் சார் போகணும்? என்ன வேலைல நிறைய சம்பளம் கிடைக்கும்? பிகர் எல்லாம் வருமா?

நான்: அட பாவி இவர்கிட்ட கேள்வி கேட்டா, இவ்ளோ சந்தேகம் கேக்குறாரே. அடப்பாவி...
=============================================
வெங்கட்: என்ன பண்றதுங்க. எதிர்கட்சி தலைவர் ஆகி ஆளுங்கட்சி காரங்ககிட்ட அடி வாங்கிகிட்டு இருந்திருப்பேன்.

நான்: ஏன் ஆளுங்கட்சி ஆக மாட்டேங்களா?

வெங்கட்: நான் என்ன பண்றது. என் கட்சில உள்ள ஆளுங்க அப்படி. ஒரு ஆள் என்னன்னா யாராவது அடிக்க வந்தா கூட "me the first" அப்டின்னு சொல்லுது. ஒரு ஆளு தானா கேட்டு அடி வாங்கிட்டு வருது. ஒண்ணு மொக்கை போட்டு கொல்லுது. இவங்கள வச்சிக்கிட்டு நானாவது ஆளும் கட்சி ஆகிறதாவது.

=============================================
உண்மைத்தமிழன்: நான் வந்து................

நான்: சார் நான் வந்து ஒரு மாசம் ஆச்சு. எப்ப சார் முடிப்பீங்க?

உண்மைத்தமிழன்: !!!!!
=============================================
இம்சை பாபு: வேலை இல்லாமல் காக்கா ஓட்டிட்டு இருந்திருப்பேன்.
=============================================
டெரர்: என்னையும் ஒரு மனுசனா மதிச்சு என்னையும் ஒரு பதிவர்னு நம்பி கேள்வி கேட்ட பாரு. மச்சி உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. யார்கிட்ட கேக்குற எங்கிட்டதான கேட்குற. கேளு மச்சி கேளு..
(கடைசி வரைக்கும் பதிலே சொல்லல பயபுள்ள)
=============================================
அருண் பிரசாத்: நானே சொந்தமா டீ கடை வச்சிருப்பேன். அதுவும் ஹாஸ்பிடல் பக்கத்துல. அப்பதான டீ குடிச்சிட்டு அங்க அட்மிட் ஆக வசதியா இருக்கும்.
=============================================
தேவா: நான் பேசுறது எவனுக்கும் புரியாது. அதனால பொதிகைல மாற்று திறனாளிகளுக்கு செய்திகள் வாசிச்சு காட்ட போயிடுவேன். மொழி பிரச்சனையே இல்லை. 
  =============================================

செவ்வாய், டிசம்பர் 21

பதிப்பு...!


மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!


டிஸ்கி 1: நீ எல்லாம் என்னடா பதிவர்? நீ எழுதுறதெல்லாம் பதிவா. நீ என் மாப்ஸ் தேவா மாதிரி எழுத முடியுமா அப்டின்னு எனக்கு டெரரா ஒரு மிரட்டல் வந்தது. தேவா மாதிரி என்னடா தேவா, தேவாவோட பதிவையே எழுதுறேன்னு சூளுரைத்து இந்த பதிவை எழுதினேன். 


டிஸ்கி 2: இது சத்தியமாக தேவா பிளாக்கில் இருந்து காப்பி & பேஸ்ட் பண்ணியதில்லை. அதை பார்த்து அப்படியே நானே சொந்தமாக டைப் பண்ணியதாக்கும். ஹிஹி...
....

திங்கள், டிசம்பர் 20

வீடு...!

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பாரு சொல்லுவாங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல ஊர்ல வீட்டை கட்டிக்கிட்டு இருக்கோம். கல்யாணம்(நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்).
(நானும் என் வீடும்)

மேல உள்ள வீடு எங்க சொந்த வீடு. அம்மா வேலை பார்த்த ஊர்ல கட்டினது. இந்த வீட்டுக்கும் எனக்கும் ஒரே வயசு. நான் பிறந்த நாலாவது நாள் இந்த வீட்டுக்கு குடி வந்தததா அம்மா சொல்லுவாங்க.

எங்க ஊர்லையே எங்க வீட்லதான் முதன் முதல்ல டேப்ரிக்கார்டர் வாங்கினோம். அதனால் எப்பவுமே எங்க வீட்டுல கூட்டம் இருக்கும். அப்போ எல்லாம் தினமும் ரேடியோவில் நாடகம் ஒலிபரப்பாகும். பாட்டு கேட்க, நாடகம் கேட்க, செய்திகள் கேட்கன்னு ஒரு கூட்டம் எங்க வீட்ல இருக்கும். எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டுல எப்பவுமே ஆளுங்க இருப்பாங்க.

மழை நேரத்துல வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு கத்திக்கப்பல் விடுவோம். கோவில் திருவிழான்னா ஊர்ல உள்ள சொந்த காரங்க எல்லாம் வீட்டுக்கு வந்திடுவாங்க. ஊர் ஆரமிக்கிற இடத்துல வீடு இருக்குறதால, பக்கத்து ஊர்ல பஸ் வரும்போதே எங்க வீட்டுல இருந்து பார்த்தா தெரிஞ்சிடும். கடைசி வீட்டுல இருந்து யாராவது ஊருக்கு போனா எங்க வீட்டுல உக்காந்து பேசிகிட்டு இருந்துட்டு, பஸ் ஊருக்குள்ள வரும்போது பஸ் ஸ்டாப் போயிடுவாங்க.
(நான் படிச்ச பள்ளிக்கூடம்)

வீட்டை விட்டு போனாலும் எங்க வீட்டை பூட்டுறதே இல்லை. எங்க ஊர்ல அப்பெல்லாம் திருட்டு பயமே இல்லை. அப்புறம் ஹாஸ்டல் போய் விட்டதால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில்தான் வீட்டுக்கு வர முடிந்தது.

அம்மா டீச்சர் அப்டிங்கிறதால சாயங்காலம் ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் எங்க வீட்டுக்கு படிக்க வந்திடுவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து படிக்கணும்.
(எங்க ஊர் நேசனல் ஹைவே)

ஒரு நல்ல நண்பனாய், தோழனாய், பாதுகாவலனாய் எனக்கும் என் குடும்பத்திற்கும் மட்டும் முப்பது வருடங்களாக உழைத்து கொண்டிருந்த இந்த வீடு இன்னைல இருந்து அடுத்தவர்க்காக உழைக்க போகிறது. ஆம் அம்மா ரிடையர் ஆகி ஊருக்கு வந்துவிட்டதால் இந்த வீட்டை விற்று விட்டு இன்னிக்குதான் பத்திரம் முடிக்கிறோம்.

எத்தனையோ நண்பர்களோட வீடு விற்கிறபோது கூட இருந்திருக்கிறேன். ஒன்னும் தோணியதில்லை. எங்க வீட்டை விற்கும்போதும் ஒன்னும் தோணலை. ஆனால் இன்னைக்கு எங்க வீட்டு சாவியை அடுத்தவங்ககிட்ட கொடுத்திட்டு இனிமே இந்த வீடு நமக்கில்லை என யோசிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது.

என் முப்பது வருட உயிர் நண்பன் இனி எனக்கில்லை. இன்று முதல் அவன் வேறு யாருக்கோ நண்பன். என்னை குழந்தைல இருந்து பத்திரமா பாத்துக்கிட்டே மாதிரி புதுசா வர்றவங்களையும் பத்திரமா பாத்துக்கோ நண்பா.
...

ஞாயிறு, டிசம்பர் 19

பிரபல பதிவருக்கு உதவுங்கள்


இந்த பதிவரை உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். மிகப் பெரிய பிரபல பதிவர். நாடு விட்டு நாடு இருந்தாலும் தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் மாறா(தாரா இல்லை) பற்று கொண்டவர்.

ஆனாலும் பாருங்க அவருக்கு குழந்தை மனசு. உலகத்தை தெரிந்த அளவுக்கு பதிவுலகம் பத்தி தெரியாது. அதனால ஓசில படத்துக்கு போகும்போது கூட அவரை யாரும் கூப்பிடுறதில்லை. அதனால் அவருக்கு மனக்குறைகள் இருந்தாலும் யாரிடமும் உதவி கேட்டதில்லை(இவ்ளோ ஏன் கம்ப்யூட்டர்ல கூட உதவிக்கு F1 button Press பண்ண மாட்டார்னா பாத்துக்கோங்க) .

ஆனால் விதி வலியதாச்சே. நல்லவங்களுக்கு சோதனை கட்டாயம் வரும். அது போல இந்த பதிவருக்கும் சோதனை காலம் வந்தது.

தமிழ்மணம் வாரா வாரம் Top-20 பதிவர்கள் லிஸ்ட் வெளியிடுறாங்க. இவருக்கு அதை பத்தி ஒண்ணுமே தெரியாது. இந்த அவார்டை வீட்டுல எங்க வைக்கனும்னு கூட தெரியாது. அவ்ளோ அப்பாவி இவரு.

ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நான் அவரை பாராட்டி இப்படி ஒரு கமெண்ட் போட்டேன் "இந்த வாரம் தமிழ்மணத்துல top-20 க்குள் வர வாழ்த்துக்கள். நானும் தமிழ்மணத்துல ஒட்டு போட்டுடேன். நான் கரெக்டாதான பேசுறேன். ஹிஹி".

ஆனா நம்ம பதிவர்தான் அப்பாவி ஆச்சே. இந்த அவார்டை என்ன பண்ணனும்னு தெரியாம ஒரு கேள்வி கேட்டார் பாருங்க "ஓய்.. எனக்கேவா?..ஆமா.. இந்த Top-20 வாங்கி, எங்கே செருகனுமுனு சொல்லீட்டு போ மச்சி.. உபயோகமாயிருக்கமில்ல. அதான்.."

எப்பவுமே நல்லவங்க வாக்கு பலிக்கும்ல. அதான் என் வாக்கு பலிச்சிடுச்சு. இந்த வாரம் தமிழ்மணம் மகுடம்ல நம்ம பதிவர் பெயர் வந்திடுச்சு.
இதனால எல்லா பதிவர்களுக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, நம்ம பிரபல பதிவருக்கு இந்த அவார்டை என்ன பண்ணனும், எங்க வைக்கனும்னு சொன்னா கொஞ்சம் உபயோகமா இருக்கும். ப்ளீஸ்.
...

வெள்ளி, டிசம்பர் 17

ஈசன்-திரை விமர்சனம்


குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு..
குடிப்பழக்கம் குடியை அழித்துவிடும்...

நம்ம எஸ்.ஏ.சந்திரசேகர் பலவருடமா பிழிய பிழிய எடுத்த கதையை நம்ம சசிகுமார் அவர்கள் 10455676788 வது தடைவையா தடவையா திரும்பி எடுத்திருக்காரு. அதுக்காகவே அவரை பாராட்டலாம். ஆமாங்க எஸ்.ஏ.சி படத்துல தங்கச்சியை ரேப் பண்ணினவங்கள அண்ணன் பழி வாங்குவாரு. சசிகுமார் கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சு அக்காவை ரேப் பண்ணினவங்களை தம்பி பழி வாங்குற மாதிரி கதை பண்ணிருக்காரு.

சரி திரைக்கதையாவது வித்தியாசமா இருக்கான்னா அதுவும் இல்லை. முதல் காட்சி காலேஜ் பசங்க பப்ல தண்ணி அடிக்கிறாங்க. ஹீரோயின்னும்(அபர்ணா பாஜ்பாய்) சேர்ந்து தண்ணி அடிக்கிறாப்பா(வித்தியாசமா யோசிக்கிறாரோ?). அடுத்த காட்சில போலீஸ், அரசியல்வாதி விசாரணை அப்டின்னு ஓடுது. மறுபடியும் காலேஜ் பசங்க பப்ல தண்ணி அடிக்கிறாங்க. ஹீரோயின்(அபர்ணா பாஜ்பாய்) போலீஸ் ரைடுல மாட்டுறா(நல்ல குடும்பத்து பொண்ணு). ஹீரோ அரசியல்வாதி பையன். ஹீரோயின்ன(அபர்ணா பாஜ்பாய்) போலீஸ்ல இருந்து தள்ளிக்கிட்டு வரான். உடனே லவ் வந்திடுது.
அரசியல்வாதி அப்பா இதுக்காக பையன அடிச்சிடுறாரு. பப்புக்கு போற பையன் கோவிச்சிக்கிட்டு கொஞ்சம் வித்தியாசமா சுண்டக்கஞ்சி சாப்பிட போறான். 

அப்பாகிட்ட ஹீரோயின்(அபர்ணா பாஜ்பாய்) லவ் சொல்றா. அப்பா ஒத்துக்கலை. அப்பா முன்னாடியே அவர் வச்சிருந்த சரக்கை எடுத்து குடிச்சிட்டு கோவமா போயிடுறா(சோசியலிசமோ?.என்ன கொடுமை சசி சார்?). மறுபடியும் பப். சரக்கு. எவனாவது ஒருத்தன் கூட இருக்குற பொண்ணை தள்ளிட்டு போறான். இடைவேளை வரை இதாங்க(பணத்த தண்ணியா செலவழிக்கிறதுங்கிறது  இதுதானா?). இடைவேளையின் போது ஹீரோவின் தலைல யாரோ இரும்பால அடிக்கிறாங்க(நம்ம தலையிலையும்தான்).

ஹீரோ மற்றும் அவரோட நண்பனையும் கொலை செஞ்சிடுறாங்க. அப்புறம் போலீஸ் விசாரணை எல்லாம் பண்ணி கொலையாளி யாருன்னு கண்டு பிடிக்கிறாங்க. அதான் சொன்னனே ஹீரோயினை(அபிநயா) அவள் கூட படிச்ச(சீனியர்) பசங்க ரெண்டு பேர் ரேப் பண்ணிடுறாங்க. இந்த ஹீரோயினையாவது(அபிநயா) நல்லவளா காட்டுனாங்களா. அதுவும் இல்லை. அவளும்  பசங்களோட பப்புக்கு போய் தண்ணி அடிக்கிறா(பின்ன ரேப் பண்ணாம என்ன பண்ணுவாங்க).அதுக்கு ஸ்கூல் படிக்கிற தம்பி பழி வாங்குறான்(தம்பி உனக்கு நல்ல எதிகாலம் இருக்கு).
 
கடைசில போலீஸ் என்ன பண்ணினாங்க அப்டிங்கிறது மைனா கிளைமேக்ஸ்.

ரசிக்கவைத்தவை:

1. சமுத்திரக்கனியின் நடிப்பு(போலீஸ் கெட்டப் மற்றும் நடிப்பு பிரமாதம்)

2. அபிநயா(சில நேரமே வந்தாலும் கலக்கல் நடிப்பு)

3. நாடோடிகள் படத்துல அரசியல்வாதியா வந்து போஸ்டர் அடிச்சு விளம்பரம் பண்ணுவாரே அவரோட நடிப்பு சூப்பர்.

4. வைபவ்க்கு ஜோடியாக வரும் பிகர். செம க்யூட். அந்த பிகர் பேர் அபர்ணா பாஜ்பாய்.

5. கிளைமேக்ஸ்(அதான் படம் முடிஞ்சதே)


கொடுமை:

1. வில்லனாக வரும் தயாரிப்பாளர் அழகப்பனின் நடிப்பு. நோ ரியாக்ஷன். ஒரே மாதிரி பாவனைகள்.

2. சசிகுமார் படம்னா குடும்பத்தோட பாக்கலாம். ஆனா இதுல பப், ரேப், ஒருத்தன் ஒருத்திய தள்ளிகிட்டு போறது இது மட்டும்தான் இருக்கு. குடும்பத்தோட சத்தியமா பாக்க முடியாது.

3. ஸ்கூல் பையன் பழி வாங்குற மாதிரி காட்டினது(ஏற்கனவே ஒரு நியூஸ் பாத்தேன். ஒரு 8th படிக்கிற பொண்ணு லவ் பெயிலியர்ல கையை வெட்டிக்கிட்டா. அந்த பொண்ணு சொன்ன காரணம் சீரியல்ல அப்படி ஒரு காட்சி வருதாம். படத்துல குழந்தைலையே லவ் பண்றாங்களாம்). சசிகுமார் சார் இந்த மாதிரி கெட்ட விசயங்களுக்கு நீங்கள் உதாரணமாக இருக்க வேண்டாம். 

4. அந்த பையனுக்கு அந்த இரும்பை தூக்கவே சக்திஇல்லை. அதை தூக்கி சர்வ சாதாரணமா சுத்துறான். வில்லன்கள் அதே இரும்பை தூக்கி அவனை அடி பின்றாங்க. தமிழ் சினிமா இலக்கணப்படி பையன் உயிரோட இருக்கான்.

5. நடிகர் விக்ரம் ஏன் பாதில விலகிட்டாருன்னு இப்பதான் தெரியுது.

டிஸ்கி டு சசிகுமார்: சார், உங்களுக்காகத்தான் மக்கள் இந்த படத்துக்கு வந்தாங்கன்னு தியேட்டர்ல எல்லோரும் பேசும்போது நல்லா தெரிஞ்சது. இந்த மாதிரி படம் எடுக்க நிறைய பேர் இருக்காங்க. இந்த படத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் போகலாம்னு தியேட்டர்ல கமெண்ட் வேற.(அவ்ளோ சரக்கிருக்கு இந்த படத்துல). சாரி சசிகுமார் சார். அடுத்த படத்துல பாக்கலாம்...
..
டிஸ்கி டு மக்கள்: குடிக்கிறது பிடிக்கும்னா போகலாம். நிறைய பப் சரக்கு, சுண்டக்கஞ்சி எல்லாமுமே இங்க இருக்கு. ஹிஹி..
....

வியாழன், டிசம்பர் 16

கமல்ஹாசன் ரஜினியிடம் சொன்ன சீக்ரட் - உடனிருந்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார்

தமிழ் திரையுலகில் பரப்பரப்பு. கமல்ஹாசன் ரஜினியிடம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லி இருக்கிறார். இது அவசர அவசரமாக நடிகர் சங்கத்தில் நடந்துள்ளது. உடன் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் இருந்துள்ளார். அரசியலாக இருக்குமோ என சந்தேகம்.

பத்திரிக்கையாளர்கள் கேட்டதுக்கு சீக்ரட் விஷயம் என சொல்லி இருக்கிறார்கள். அந்த போட்டோ நெட்டில் வெளியாகி உள்ளது. நல்லா பாருங்க. கமல் ஏதோ ரஜினியிடம் சொல்கிறார். அதற்கு சாட்சி நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவர்கள்.

அது என்ன மேட்டர்ன்னு தெரிந்து கொள்ள ஆசையா? அட வெட்கமா இல்லை. அதான் சீக்ரட்டுன்னு சொன்னனே. பின்ன என்ன? அடுத்தவங்க சீக்ரட் நமக்கெதுக்கு. வேணும்னா அதை சொன்ன கமல்கிட்டயோ, கேட்ட ரஜினி அல்லது சரத்குமார்கிட்டையோ போய் கேட்டு தெரிஞ்சிக்கோங்க.

போங்க பாஸ். போயி வீட்டுல ஏதாச்சும் உருப்படியான வேலை இருந்தா பாருங்க.

அப்புறம் கமல் சூர்யாகிட்ட சொன்ன சீக்ரட் என்னன்னு தெரியனுமா? நம்ம பன்னிகுட்டி சார் அக்கவுண்ட்ல Rs.1999 கட்டிடுங்க. உங்களுக்கு வீடியோ டேப் அனுப்புறோம்.


யாருப்பா அங்க கல்லை எடுக்குறது? இந்த சீக்ரட் மேட்டரை என்கிட்டே சொன்னது நம்ம எதிர்க்கட்சி தலைவர் வெங்கட் தான். அவர்கிட்ட கேட்டுக்கோங்க.
.....

புதன், டிசம்பர் 15

நந்தினி-பாகம் 1

இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல்லலாம்னு இருக்கேன். யாராச்சும் என் கதைன்னு கேஸ் போட வேண்டாம். எனக்கு கோர்ட்டுக்கு வர நேரம் இல்லை(சிபி மன்னிக்க).

பாகம் 1 : 

அதிகாலை நாலு மணி. ஊரெல்லாம் அமைதி. பஞ்சு மில்லின் மிசின் சத்தமும், மழை பெய்த குட்டையிலிருந்து தவளையின் சத்தமும் இரவின் அமைதியை குறைத்துக் கொண்டிருந்தது. ஆற்காட்டாரின் புண்ணியத்தில் நான்கு நாட்களாக எரியாமல் இருந்த மின் விளக்குகள் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிய ஆரமித்திருந்தது.

அந்த ஏரியா முழுவதும் அபார்ட்மென்ட் வீடுகளாலும், கார்களாலும் நிறைந்து அந்த ஏரியாவை பணக்காரர்கள் வாழும் ஏரியா என அடையாள படுத்தி இருந்தது. குப்பை மேட்டில் படுத்திருந்த சேவல் எழுந்து எதிரில் உள்ள மணிக்கூண்டை பார்த்து விட்டு இன்னும் கூவ நேரம் வரவில்லை என நினைத்து மறுபடியும் படுத்துக் கொண்டது.

இந்த இரவை கலைப்பதுபோல வீல் என ஒரு அலறல் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு வந்தது. மின்மினிப் பூச்சிகள் போல ஒவ்வொரு வீடாக விளக்குகள் எரிய ஆரமித்தது. இரண்டு பேர் சேர்ந்து ஒருவனை தரதரவென இழுத்து வந்தனர். பொது ஏரியாவில் உள்ள விளக்கினடியில் அவனை கொண்டு வந்தனர்.

எவனோ திருடன் போல என இரண்டு கிழவிகள் பேசிக் கொண்டனர். விளக்கு வெளிச்சத்தில் பிடிபட்டவனின் முகம் நன்றாக தெரிந்தது. ஷேவ் செய்யாத முகம். கிழிந்த பேன்ட். உடம்பு முழுவதும் சுற்றிய சால்வை. அப்படியே செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரியான தோற்றம்.

ஒருவர் வந்து அவனை யாரடா நீ என கேட்க ஆரமித்தார். பின்னல் இருந்து இளசுகள் ஆர்வகோளாரில் அடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் இது C Block-கில் உள்ள நந்தினியின் கணவர் செல்வாவாச்சே என கூற கூட்டத்தில் சலசலப்பு. சரி யாராவது போய் நந்தினியை கூட்டி வாங்க என சொல்ல நந்தினியை கூப்பிட ஒரு கூட்டம் போயிற்று.

நந்தினி. இந்த கதையின் நாயகி. தூங்கி எழுந்ததால் முகம் வாடி போய் அவள் அழகியா இல்லையா என கணிக்க முடியாதது போல இருந்தது. வயது ஒரு 30 இருக்கும். அங்கிருந்த பெருசு ஒண்ணு "ஏம்மா உன் பைத்தியகார புருசனால எவ்ளோ தொல்லை. நாங்கெல்லாம் தூங்க வேணாமா. ஒழுங்கா உன் புருஷனை மெண்டல் ஹாஸ்பிடல்ல சேரு. இல்லைனா வீட்ட காலி பண்ணிட்டு போங்க" என நந்தினியை மிரட்ட ஆரமித்தது.

நாய் வேறு சம்மந்தம் இல்லாமல் குரைத்துக் கொண்டிருந்தது. 

நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.
....

செவ்வாய், டிசம்பர் 14

சென்னை பதிவரை காக்க வைத்த நம்பர் 1 ஈரோடு பதிவரின் அராஜகம்

நேத்து காலைல நம்பர் 1 ஈரோடு பதிவர் சிபி செந்தில்குமார் எனக்கு போன் பண்ணி ஆபீஸ் புரமொசனுக்காக(அவருக்காக இல்லியாம்) சென்னை வந்திருப்பதாகவும் மாலை மூணு மணிக்கு வந்து சந்திக்குமாறும் சொல்லி மிரட்டி இருந்தார்.

நானும் ஓசி டீக்காக மூணு மணிக்கே அவர் சொன்ன இடத்திற்கே போய் விட்டேன்(விட்றா விட்றா இதெல்லாம் நமக்கு ஜகஜம்). ஆனால் ஆறு மணி வரை அவர் வரவே இல்லை. இதனால் மூணு மணி நேரம் எனது முக்கியமான வேலை கெட்டு போய் விட்டது(ப்ளாக் படிக்கிறது,கமெண்ட் போடுறது).

ஏதோ எக்ஸாம்க்காக வந்திருக்கார். எல்லோரும் நாலு மணிக்கே எக்ஸாம் முடிச்சிட்டு போயிட்டாங்க. அனா இவர் மட்டும் ஆறு மணி வரை வரலையே ஏன் அப்டின்னு கேட்டா, 
வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு  விமர்சனம் எழுதிருக்கார்.

பின்ன இவரை மறுபடியும் எக்ஸாம் எழுத சொல்லிருக்காங்க. அதான் லேட்டாம். எக்ஸாம் முடிந்ததும் எல்லோருக்கும் ஓசி டீயும், ஓசி வடையும் கொடுத்தாங்க. எனக்கும் வடை கிடைத்தது(செல்வா பிம்பிளிக்கி பிளாப்பி. நான் வடை வாங்கிட்டேன்). அப்புறம் ரெண்டு பேரும் அவர் தங்கி இருந்த ரூமுக்கு போனோம்.

எப்பவுமே 11 மணிக்கு சாப்பிடுற நானு, சிபி ஓசில சாப்பாடு வாங்கி கொடுக்குறாரு அப்டிங்கிறதால என் கொள்கைகளை(அப்டின்னு ஒண்ணு இருக்கா?) ஓரங்கட்டிவிட்டு ஏழு மணிக்கே  எனது இரவு உணவை முடித்துவிட்டேன்(ஹிஹி). அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன். கிடைக்கலை. அப்புறம் அவருக்கு டாட்டா காட்டிட்டு வீடு வந்து சேந்தேன். (அடுத்து எந்த பதிவர்ப்பா ஊர்ல இருந்து சென்னைக்கு வரீங்க?)



முக்கிய குறிப்பு: வர்ற பதிவர்கள் எல்லாம் பிரபல பதிவர் மங்குனி கிட்ட பேசணும். நீங்க அவரோட நண்பர்தான போன் பண்ணி கொடுங்க அப்டின்னு டார்ச்சர் கொடுக்குறாங்க. மங்குனி இதோட நிறுத்திகிடுவோம் சொல்லிட்டேன்(எனக்கில்லை போன் பில் ஏறுது...)
...............................

திங்கள், டிசம்பர் 13

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

போன வாரம் பாயும் புலி, பதிவுலக சிங்கம், மொரிசியஸ் வாட்ச்மேன் சீ காவலன் அருண் பிரசாத்(சார் நீங்க சொன்ன மாதிரியே கூவிட்டேன்) பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் பற்றி தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தார். சரி சும்மா வழ வழ கொழ கொழன்னு எழுதாம கருத்து செறிவு மிக்க பாடல்கள் எழுதலாமேன்னு இவ்ளோ நாள் எடுத்துகிட்டேன்.

1. சரக்கு வச்சிருக்கேன், இறக்கி வச்சிருக்கேன். வறுத்த கோழி  மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

இது ஷாஜகான் படத்தில் வரும் பாடல்.அசைவம் சாப்பிடலாம். அது தப்பில்லை. ஆனால் அதில் கொஞ்சம் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது இல்லாவிட்டால் சரியாக செரிமானம் ஆகாது என்பதை வலியுறித்திய பாடல்.

2. போதை ஏறி போச்சு, புத்தி மாறி போச்சு, சுத்தும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு

இது ஜெய்ஹிந்த் படத்தில் வரும் பெண்குரல் பாடல். தண்ணி அடித்தால் ஏற்படும் விளைவுகளை பற்றிய பாடல். தண்ணி அடித்தால் புத்தி மாறி எல்லாம் நமக்கு சொந்தம் போல தெரியும் என சொன்ன பாடல். தண்ணி அடித்தால் தப்பு செய்ய தோணும் என்பதை  ஆணித்தனமாக சொன்ன பாட்டு இது.

3. பஸ்சுதான் KTC, உள்ளதான் QMC பாரு 

இது வீட்டுல விசேசங்க படத்துல வரும் பாடல். பஸ்ஸில் போகும் பெண்கள் எவ்ளோ கஷ்டப் படுறாங்கன்னு உலக்குக்கு எடுத்து சொன்ன பாடல் இது. பெண்கள் பஸ்ஸில் போகும்போது ஏகப்பட்ட கஷ்டங்கள். அதை எடுத்து சொன்ன அருமையான பாடல்.

4. ஊத்தட்டுமா, ஊத்தட்டுமா நீதான் பொண்ணு சீக்ரட்

இதுவும் ஜெய்ஹிந்த் படத்தில் வரும் பாடல்தான். பெண்கள் மனது சீக்ரட் ஆனது. அதை புரிந்துகொள்வது கஷ்டம் என்று பெண்கள் மனதை பற்றி சொன்ன பாடல் இது.

5. சந்த பஜாரு, மாமா கொஞ்சம் உஷாரு, அல்டாப்பு ராணி 

இது அமரன் படத்திற்காக ஸ்ரீவித்யா பாடியது. சந்தைக்கு போகும்போது உஷாரா இல்லன்னா நிஜார உருவிடுவாங்க. அல்டாப்பு ராணி மாதிரி ஆடம்பரமா போய் சந்தைல ஏமாற கூடாது என்று கூறும் பாடம் இது.

6. இந்திய பொண்ணுதாங்க, இத்தாலி கண்ணுதாங்க.

இது கந்தசாமி படத்தில் வரும் பாடல். இந்திய கலாச்சாரத்தையும், இந்தியாவை கண் போல் காப்பது இத்தாலிகாரங்க என்று அரசியலையும் கூறும் பாடல். மொத்தத்தில் நம் நாட்டுபற்றை கூறும் பாடல் இது. இந்த பாட்டை பட்டாபட்டிக்கு டெடிகேட் பண்றேன். ஹிஹி.

7. வாடா வாடா பைய்யா என் வாசல் வந்து போயா..

இது கச்சேரி ஆரம்பம் படத்தில் வரும் பாடல். வீட்டுக்கு வருபவர்களை வாசல் வந்து(வீட்டுக்கு) சாப்பிட்டுவிட்டு போய்யா என வரவேற்கும் பாடல். தமிழர் பண்பாடு வந்தவரை வரவேற்ப்பதுதான.

8. கட்டிப்புடி கட்டிபுடிடா..

இது குஷி படத்தில் வரும் பாடல். வசூல்ராஜா படத்தில் சொல்வது போல, கட்டிபுடி வைத்தியத்தால் மனித நேயம் வளரும் என சொல்லும் பாடல்.

9. ஆட்டமா தேரோட்டமா, நோட்டமா சதிராட்டமா வெகுநாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் வாழுறேன். 

தங்கதலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாடல் இது. எவ்ளோ சதி செய்தாலும் தன காதலனுக்காக காத்திருக்கும் காதலி ஏக்கத்தோடு பாடும் பாடல் இது.

10. வந்தனமா வந்தானாம, அஞ்சு பொண்ண பெத்தா அரசன் கூட ஆண்டிதான்..

ஈசன் படத்தில் வரும் பாடல். வரதட்சணை கொடுமையை அழகாக சொன்ன பாடல். அஞ்சு பொண்ண பெத்தா அரசன் கூட ஆண்டிதான். வரதட்சனை அப்டிங்கிற பேர்ல  புடிங்கிடுவாங்க என்று சொன்ன கருத்து செறிவுள்ள பாடல்.

டிஸ்கி 1:  இனி எவனாவது என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க?

டிஸ்கி 2: இம்சை அரசன் பாபு ரொம்ப கெஞ்சி கேட்டதால் அவரை தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். வாடி செல்லம். 
.....

வெள்ளி, டிசம்பர் 10

சிந்தனை சிற்பி

ஹாய் மக்கள்ஸ், வலைச்சரத்துல 1321 Comments போட்ட டெரர் கும்மி க்ரூப்ஸ் மற்றும் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிச்சிக்கிறேன்.

அப்புறம் எல்லாரும் விருதகிரி பாத்தாச்சா? ரொம்ப சந்தோஷம். உங்க நல்ல நேரம் 2010 ல ஒரு நல்ல படம் ரிலீஸ் ஆயிருக்கு. படம் பாத்துட்டு பிறவி பயனை அடைஞ்சிட்டீங்க. ஓகே. கூல்.


அத விடுங்க.இவர யாருன்னு தெரியுமா?
அய்யயோ போட்டோ தலைகீழா போயிடுச்சா. நேராத்தாங்க போட்டேன். நேர்லதான் இந்த ஆளு தொல்லை தாங்க முடியலை அப்டின்னு பாத்தா போட்டோவுல கூட தலைகீழா மாறி உக்காந்துட்டாரு.

கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான் இவரு. ஸ்கூல்ல படிக்கிற காலத்தில் இருந்தே(சத்தியமா படிச்சாரு) ரொம்ப சேட்டைங்க. ஒரு நாள் வாத்தியார் மணி அடி(school bell) அப்டின்னு சொன்னதுக்கு பக்கத்துல உள்ள மணி என்கிற பையனை போட்டு அடிச்சாரு. ஏன்னு கேட்டா வித்தியாசமா சிந்திக்கிறாராம்.

இவ்ளோ ஏங்க எப்ப பாத்தாலும் காலாண்டு, அரையாண்டு அதுக்கப்புறம் முழு ஆண்டு தேர்வு வருதே. கொஞ்சம் வித்தியாசமா முழு ஆண்டு, அரையாண்டு அப்புறம் காலாண்டு தேர்வு வைக்கலாமேன்னு ஸ்கூல்ல கேட்டு தர்ம அடி வாங்கினாரு.

காலேஜ் படிக்கும் போது எல்லோரும் ஈவ் டீசிங் பண்ணும்போது இவர் பொண்ணுங்க கூட சேர்ந்துகிட்டு பசங்களை கிண்டல் பண்ணினாரு (வித்தியாசம் வித்தியாசம்).

வேலைக்கு போன இடத்துல சும்மா இருந்தாரா? வித்தியாசமா செய்யிறேன்னு சொல்லி  அங்க வேலை பாக்குற ஆயாவுக்கு கோட்டு, டை கட்டி விட்டு மேனேஜர் கிட்ட செம திட்டு வாங்கினாரு.

பொண்ணு பாக்க போன இடத்துலையும் இதே கதைதான். கவிதை, கடிதம்னு எழுதி தள்ளுறாரு. ஆனா இந்த சிந்தனை சிற்பிக்கு ஏற்ற இலியானா மாதிரி தேவதைதான் கிடைக்கலை. சீக்கிரம் கிடைக்க வாழ்த்துவோம்.

இன்று(டிசம்பர்-11) பிறந்தநாள் காணும் இந்த சிந்தனை சிற்பி, வித்தியாச வேந்தன் எங்கள் மாப்பு "ப்ரியமுடன் வசந்த்" அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் பிறந்தநாளை "Different thinking Day" என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.




......

வியாழன், டிசம்பர் 9

கடவுள் தரிசனம்

கோவில் இல்லாத ஊர்ல குடியிருக்க வேணாம்னு சொல்லுவாங்க. சின்ன வயசுல இருந்து எனக்கு கடவுள் பக்தி அதிகம். டெய்லி கோவிலுக்கு போவேன்(சுண்டல் எல்லாம் இல்லைங்க. பக்திங்க பக்தி). ஸ்கூல் படிக்கும்போது இருந்த பக்தி இப்ப ரொம்ப குறைஞ்சிடுச்சு.

வேலை பளுவின் காரணமாக கோவிலுக்கு அடிக்கடி போக முடியலை. ரெண்டு நாளைக்கு முன்னாடி அப்பா கூட சொன்னாரு. கோவிலுக்கு போயிட்டு வான்னு. சரி அப்டின்னு இன்னிக்கு காலைல எழுந்து குளிச்சிட்டு(என்ன சிரிப்பு ராஸ்கல்) 7 மணிக்கு கோவிலுக்கு கிளம்பினேன்.


எனக்கு பிடித்த கடவுள் எங்க இருக்காரோ அந்த கோயிலுக்குதான போகணும். சரி அப்டின்னு அந்த கோவிலுக்கு கிளம்பி போனேன். வெள்ளிக் கிழமை அப்டிங்கிறதால காலைல 7 மணிக்கே கோவில் வாசல்ல சரியான கூட்டம். உள்ள நுழைய முடியலை. சின்ன பசங்கள்ள இருந்து பெருசுக வரைக்கும் வரிசைல நிக்கிறாங்க.

இன்னிக்கு கடவுளுக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம் எல்லாம் இருக்குன்னு சொன்னாங்க. சரி அதையும் பாத்திடலாம்னா கோவில் வாசல்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் வரைக்கும் வரிசை நிக்குது. ஒரு பெரியவர் சொன்னாரு நேத்து இரவில் இருந்தே வரிசை நிக்க ஆரமித்து விட்டது என்று. சரி இன்னிக்கு தரிசனம் அவ்ளோதானா அப்டின்னு மனதில் கவலை அரிக்க ஆரமித்தது.

இன்னிக்கு யார் முகத்துல முழிச்சனோ. கடவுளை கோவில்ல தரிசனம் முடியலை. இன்னிக்கு ஆபீஸ்ல போய் நான் எப்படி நிம்மதியா வேலை செய்வேன். மனதில் லேசாக கவலை. ஏன் கோவிலில் இவ்வளவு கூட்டம்? ரொம்ப சக்தியான கடவுள் அவர்.

அது சரி அது எந்த கோவில், என்ன கடவுள்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
.


இவர்தான் அந்த கடவுள். இன்னிக்கு காலைல பத்து மணியில் இருந்து இவர் அவதரிக்க போகும் எல்லா தியேட்டர்களும் கோவில்கள்தான். ஹிஹி..

விருதகிரி ரிலீஸ் நாளை உலக சந்தோஷ தினமாக கொண்டாட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு(அட அரசாங்கம் கூட புரட்சிக் கலைஞரின் படம்தான?) பரிந்துரைக்கிறேன்.

சத்யம் தியேட்டர்ல இன்னிக்கு ரிலீஸ் ஆகிற சித்து +2 மற்றும் அய்யனார் படங்களுக்கு டிக்கெட் இருக்கு. ஆனா விருதகிரிக்கு டிக்கெட் இல்லை. இப்ப தெரியுதா எங்க ஆள் பவர்.

# கடவுளின் தரிசனத்திற்க்காக தியேட்டர் ச்சே கோவில் வாசலில் காத்திருக்கும் உண்மையான பக்தன்
.....
.....

புதன், டிசம்பர் 8

உஷாரா இருக்கணும்!!!

பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு நல்லது பண்ணணும்ல(என்னது பிளாக் எழுதுறத நிறுத்தனுமா. நோ நெவெர்). அதான் மக்களுக்கு சில பயனுள்ள தகவல்கள் சொல்லு அவங்களை உஷார் படுத்தலாம் அப்டின்னு இந்த பதிவை எழுதுறேன். ஏதோ என்னால முடிஞ்சது.

உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)

ஆம்புலன்சுக்கு - 108 (1800-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)

சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்(நோ நோ நான் ரொம்ப பிஸி. நான் தரிசனம் தர மாட்டேன்)

துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்(அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது)

படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)

நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க(யோசிச்சா வர முடியாதில்ல. இல்லன்னா வலைச்சரத்துல பன்னிக்குட்டி சார் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)

வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும்(என்னை மாதிரி நேர்மையான போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும்)

கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும்(நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)

டிஸ்கி 1: "மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு.

டிஸ்கி 2: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது. அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.

டிஸ்கி 3:  இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...........
.........

செவ்வாய், டிசம்பர் 7

டாப் 10 படங்கள்-2010

 2011 வரப்போகுது. 2010 ல எனக்கு பிடித்த 10 படங்களின் லிஸ்ட் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பிடித்தவர்கள் இதை தொடரலாம்.

1. நாணயம்

பிரசன்னா, சிபி நடித்த படம். பேங்க் கொள்ளையை பற்றிய படம். விறுவிறுப்பான படம். சரியான விளம்பரம் இல்லாமல் சரியாக ஓடவில்லை. "நான் போகிறேன் மேலே" பாடல் எனக்கு பிடிக்கும்.

2. காதல் சொல்ல வந்தேன்

பாலாஜி, மேக்னா சுந்தர் நடித்தது. படம் முழுவதும் இயல்பான காமடி. யுவன்ஷங்கர் இசையில் எல்லா பாடல்களும் அருமை. கிளைமேக்ஸ் சரியில்லாததால் படம் பப்படம் ஆயிடுச்சு.

3. பையா

சிங்கப்பூரில் முதன் முதலாக பார்த்த படம். எல்லா பாடல்களுமே ஹிட். படமும் ஒரு பயணக் கதை. கொஞ்ச நேரம் வந்தாலும் ஜெகன் காமடி கலக்கல். கார்த்திக், தமன்னா ஜோடி எனக்கு பிடிக்கவில்லை. சிறுத்தையிலும் இதே கூட்டனிதானாம்.

4. கோரிப்பாளையம்

ராசு மதுரவன் இயக்கிய படம். நாலைந்து பேர் நடித்திருப்பார்கள். மயில்சாமி, சிங்கம் புலி கூட்டணியில் காமடி கலக்கல். நான் ரிடையர்டு ஆயிட்டேன் என்ற மயில்சாமி காமடி ஹிட். நான்கு இளைஞர்கள் தேவையில்லாமல் ஒரு பிரச்சனையில் சிக்கி உயிரை விடுவார்கள். தம்பிக்கு பயந்து நகையை ஒழித்து வைத்துவிட்டு அதற்க்கப்புறம் அந்த நகையே தம்பி போட்டதுதான் என கண்கலங்கும் காட்சி சூப்பர்.

5. சிங்கம்

சூர்யா, அனுஷ்கா, ஹரி கூட்டணியில் அதிரடி ஆக்க்ஷன் படம்.  விறுவிறுப்பான திரைக்கதை. சன் டிவியின் உண்மையான இரண்டாவது ஹிட் படம்(அயன் முதல் படம்). விவேக் மொக்கை காமடி. பிரகாஷ்ராஜும் கலக்கி இருப்பார்.

6. களவாணி

சாதாரண கதை. போரடிக்காத திரைக்கதை. இயல்பான காமடி. விமல், ஓவியாவின் நடிப்பில் மனதை தொட்ட படம். அனைவரின் பாராட்டையும் பெற்ற படம்.

7. நான் மகான் அல்ல


கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த படம். முதல் பாதி காதலும் இரண்டாவது பாதி ஆக்ஷனும் கலந்த படம். கல்லூரி இளைஞர்கள் நடிப்பு அருமை. கார்த்தியின் அம்மா அப்பா நடிப்பும் நல்ல இருக்கும். போரடிக்காத திரைக்கதை.

8. மதராசப் பட்டினம்

ஆர்யா, எமியின் நடிப்பில் அந்தக் காலை சென்னையை கண்முன் கொண்டு வந்த படம். எல்லா பாடல்களும் மிகவும் நல்லா இருக்கும். சுததிரதிற்கு முன்னால் காதலித்த ஒரு ஜோடியின் கதை. 

9. பாஸ் என்கிற பாஸ்கரன்

ஆர்யா,சந்தானம் நடித்த படம். சந்தானம் காமடி செம கலக்கல் . நன்பேண்டா  வசனத்தை மறக்க முடியுமா? மதராசப் பட்டினம் படத்துக்கு அப்புறம் அடுத்த ஹிட் ஆர்யாவுக்கு.

10. மைனா

காதல் கதை. அருமையான பாடல்கள். தம்பி ராமையாவின் இயல்பான காமடி. மனதை கணக்க செய்யும் கிளைமேக்ஸ். இந்த வருட இறுதியில் வந்த அருமையான படம். ஒளிப்பதிவும் அருமையாக இருக்கும். 

இது போக கொசுறாக பிடித்த சில நல்ல படங்கள்:

- வம்சம்
- தமிழ்படம்
- விண்ணைத்தாண்டி வருவாயா
- நந்தலாலா
- அங்காடி தெரு
- அவள் பெயர் தமிழரசி

எதிர்பார்க்கும் படங்கள்:

- மன்மதன் அம்பு
- ஈசன்
- விருதகிரி

இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...
.......................

திங்கள், டிசம்பர் 6

மழையே மழையே

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேணாம்
ஒரு கருப்பு கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு

இப்படிதான் கவிதை எழுதி இனிமே ப்ளாக் எழுதனும்னு பன்னிக்குட்டியும் குட்டி பன்..சீ குட்டி பணக்காரன் அருணும் சொன்னங்க. அதான் இப்படி. ஹிஹி.

ரெண்டு நாளா சென்னைல நல்ல மழை. இன்னிக்கு சென்னைல ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ். கடைகள் அடைப்பு. பஸ், டாக்ஸி ஓடவில்லை. ரோடெல்லாம் தண்ணீர். சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 

வெயில்காலத்தில் மழை எப்ப வரும் என காத்திருப்பது, மழை காலத்தில் ஏண்டா மழை பெய்ஞ்சு உயிரை எடுக்குதுன்னு புலம்பிகிட்டே போட் சர்வீஸ்க்கு மாறுவது. வருட வருடம் நமக்கு இதே வேலைதான். ஏன் இப்படி மழைக்காலத்தில் நிவாரணம் அப்டின்னு புலம்புறதுக்கு பதில் வெயில் காலத்திலையே முன் ஏற்பாடு செஞ்சா என்ன?

இதில் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை. அவங்களா மேல இருந்து தண்ணியை கொட்டுறாங்க. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவந்தாங்க. அது இல்லைனா வீட்டுக்கு ரேசன் கார்டு எல்லாம் ரத்துன்னு சொன்னாங்க. இது நமக்காகத்தான் சொல்றாங்கன்னு எத்தனை பேர் செஞ்சாங்க.

நான் தங்கி இருந்த வீட்டு ஓனர் கணக்கெடுக்க வந்தவங்களுக்கு காசு கொடுத்து சரி கட்டிட்டாரு. அவங்களும் காசு வாங்கிகிட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்குன்னு எழுதிட்டு போயிட்டாங்க.  "இதனால யாருக்கு நஷ்டம். உன் பஸ்  கண்ணாடிதான உடைஞ்சது" அப்டின்னு வடிவேலு சொன்ன மாதிரி யாருக்கு நஷ்டம் இப்போ. அரசுக்கா நமக்கா. 

வருஷ வருஷம் சப்-வே ல உள்ள தண்ணியை மோட்டார் வச்சு எடுக்குற செலவுல ஒரு பாலமே கட்டிடலாம். சப்-வே ல கீழ தண்ணி போற மாதிரி ஓபன் ஏரியா கட்டினால் பிரச்சனையே வராது.

மழைகாலத்தில் வீட்டுக்குள்ள தண்ணி வந்திடுச்சு அரசாங்கம் நிதி கொடுக்கலைன்னு புலம்புறதுக்கு பதில் கோடை காலத்துல நாம ஏன் அதற்கான முன் ஏற்பாடுகள் செய்ய கூடாது? எனக்கு தெரிந்த சில ஐடியா சொல்றேன். நீங்களும் உங்கள் கருத்துகளை கூறலாம்.

- மழைநீர் சேகரிப்பு தொட்டி எல்லார் வீட்டுலையும் கண்டிப்பா இருக்கணும். இதை நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட கண்டிப்பா சொல்லணும். ஒண்ணு ரெண்டாகும் .ரெண்டு நாளாகும். நிறைய பேருக்கு போய் சேரும். 

- ஒரு ஏரியா இருந்தா அந்த ஏரியாவுல எல்லோரும் சேர்ந்து பொதுவா ஒரு பெரிய குளம் அமைக்கலாம். தெருவில் தேங்கும் நீரை அங்க கொண்டு சேர்க்கலாம். 

- ஏரியாவுல உள்ள எல்லோரும் அங்க வசிக்கிற மக்கள்கிட்ட கோடை காலத்துல கொஞ்சம் கொஞ்சம் காசு வசூல் பண்ணி மழை நேரத்துல உபயோகப் படுத்திக்கலாம்.

- முக்கியமா ஏரில வீடு கட்ட மாட்டேன்னு மக்கள் முடிவு எடுக்க வேண்டும். அது போல் குளம் இல்லாத இடத்திலும் வீடு கட்ட கூடாது.

- குப்பையை குப்பை தொட்டியில் மட்டும்தான் கொட்ட வேண்டும்(அட யாருப்பா அது டெரர் ப்ளாக் பக்கம் போறது?)

இது அரசுக்கு:

- வருஷம் வருஷம் நிவாரண நிதிக்கு செலவு செய்றதுக்கு பதிலா இதற்கு மாற்று திட்டம் என்னன்னு யோசிக்கலாம். டெண்டர் கூட விடலாம். இன்றைய இளைஞர்கள் நிறைய ஐடியாவோட வருவாங்க. நல்ல ப்ராஜெக்ட்க்கு நீங்க ஆபர் கொடுக்கலாம்.

- மழை நீர் சேகரிப்பு தொட்டி இல்லாத வீட்டுக்கு எல்லாத்தையும் கட் பண்ணுங்க. இதை காசு வாங்கிட்டு சரியா கணக்கு எடுக்காதவங்களை வேலையை விட்டு தூக்குங்க. அபராதம் போடுங்க.

-  மழை நீர் சேகரிப்பு தொட்டிகட்டுறதுக்கு காசு செலவாகும்னுதான் எவனும் கட்ட மாட்டேங்கிறான். இலவச டிவி க்கு பதிலா இலவசமா மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி கொடுக்கலாம்.

- உங்க டிவில பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை சினிமா விளம்பரம் போடுவது போல, இதுக்கும் விளம்பரம் போடலாம்.

- கேரளாவுல மழைநீர் பத்தி எல்லா நடிகர்களும் சேர்ந்து நடித்து ஒரு குறும்படம் எடுத்த மாதிரி இங்க வேணா ஒரு விளம்பர படம் எடுத்து டிவி, தியேட்டர்ல போட சொல்லலாம். 

முக்கியமா நாம நிம்மதியா வாழணுன்னு மக்கள்தான் இதையெல்லாம் சிந்தித்து மழை காலத்துல வாயிலும் வயித்திலும் அடிச்சிக்காம முன் ஏற்பாடுகளை செய்து அரசாங்கத்துக்கும் உதவி செய்யணும். இதை தொடர் பதிவாக யார் வேணும்னாலும் தொடரலாம்.
..........

சனி, டிசம்பர் 4

அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க

நான் வடிவேலு மாதிரி. சவுண்டு பலமா கொடுப்பேன். ஆனா ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன். அதனால என்னை தேடி யாராவது வந்தா நான் எங்க இருக்கேன்னு சொல்லிடாதீங்க. அடிச்சு கூட கேட்பாங்க. சொல்லிடாதீங்க. கொஞ்சப் பேரு ரொம்ப கொலை வெறில தேடிக்கிட்டு இருக்காங்க.

நீங்க எல்லோரும் என் நண்பர்கள் இல்லியா? (எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டிதிருக்கு). தயவு செஞ்சு என்னை காட்டி கொடுத்துடாதீங்க. உங்க பதிவுக்கு கள்ள ஓட்டாவது போடுறேன். ப்ளீஸ். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நீங்க சொல்றத செய்யுறேன்(பிளாக் எழுதுறத நிறுத்துன்னு சொல்லிடாதீங்க. பிளாக்தான் என் மூச்சு. அதுதான் என் பேச்சு.). ப்ளீஸ் ப்ளீஸ் நான் இருக்குற இடத்தை எவ்ளோ அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க.

யாரு தேடி வர்றாங்களா? நியூஸ் பாத்தீங்களா இல்லியா? டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய  தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன். அதான் கட்சிகாரங்க என்னை டிக்கட்டோட தேடிக்கிட்டு இருக்காங்க. அது போக 50 டிக்கெட் வித்து கொடுக்கணுமாம். நான் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன். நான் எப்படி போக முடியும்?

50 டிக்கெட் நான் எங்க போய் விப்பேன். எனக்கு யாரைத்தெரியும். டெரர் கிட்ட கேட்டா வீட்டு பக்கம் வந்தா காசு வெட்டி போட்டு உறவை முறிச்சுகிடுவேன்னு சொல்றான். அதனால மறுபடியும் சொல்றேன் யாராவது தேடிவந்தா அடிச்சு கேட்டா கூட நான் இல்லைன்னு சொல்லிடுங்க. சரியா படம் ஓடி முடிஞ்சதும் தகவல் கொடுங்க. இப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா...(காட்டிக்கொடுத்து கொலைகேசுல உள்ள போயிடாதீங்க பாவிகளா)

டிஸ்கி: எங்க ஒளியிறதுன்னு யாராச்சும் ஐடியா கொடுங்களேன். நம்ம டெரர் பிளாக் ஆள் நடமாட்டம் இல்லாம சும்மாதான இருக்கு. அங்க ஒளியலாமா?
......

வெள்ளி, டிசம்பர் 3

பிரபல பதிவர்கள் மீது வழக்கு- அதிரடி தகவல்கள்


எதாவது ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆகிட்டா உடனே அந்த கதை என்னுதுன்னு கேஸ் போடறது, என் ஜாதிய சொல்லி திட்டிடாங்க, என் ஊர தப்பா சொல்லிடாங்கன்னு ஆளாளுக்கு கோர்ட்டுல போய் கேஸ் போட்டுடுறாங்க.

So, சப்ப மேட்டர்கெல்லாம் ஆளாளுக்கு கேஸ் போட்டு பப்ளிசிட்டு தேடிக்கறாங்க.. உங்களுக்கும் பப்ளிசிட்டி வேணுமா..?

அப்ப இங்க கொள்ளப் பேரு பிரபல பதிவர்ன்னு சொல்லி கொலையா கொன்னுக்கிட்டு இருக்காங்க. அவங்க மேல எல்லாம் கேஸ் போடுங்கப்பா.. இதோ யார் யார் மேல என்ன கேஸ் போடணும்னு நான் ஐடியா சொல்றேன். வழக்கு ஜெயிச்சு ஏதாச்சும் பணம் தேறுச்சுன்னா எனக்கு கொஞ்சம் கமிசன் கொடுத்துடுங்க. ஹிஹி



மங்குனி அமைச்சர்:

1. பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க என மக்களிடம் தவறான தகவல் பரப்புவதால் தேர்தல் ஆணையம் இவர் மீது வழக்கு போடலாம்.

2. இன்டர்நெட் உபயோகபடுத்த வயர்தான் வேணும் என்று தப்பு தப்பா சொல்வதால் Data Card company, Wireless service இவர் மீது வழக்கு போடலாம்.

பாத்து சார். கோர்ட்டுக்கு போறது நல்லதா கெட்டதான்னு கேள்வி கேப்பாரு. ஜாமீன் வாங்க மார்கெட்டுக்கு போய் உங்க உயிரை எடுப்பாரு.

அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும் வழில இவர்கிட்ட பேச்சு கொடுக்காதீங்க. புதிர் போடுறேன்னு சொல்லி உங்கள குழப்பி விட்டுடுவாரு.

வெங்கட்:

மாதா பிதா குரு தெய்வம். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்று தரும் ஆசிரியர் தெய்வத்துள் தெய்வம். அவரையே கலாய்த்ததால் தமிழ் ஆசிரியர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம். ஆனா ஒரு கண்டிசன். கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க வக்கீல் என்ன பேச போறார்ன்னு லிஸ்ட் கொடுத்துடணும். அதை இவர் மாடரேட் பண்ணி கொடுப்பாரு. அதுக்கப்புறம்தான் நீங்க பேசணும். இன்டீசண்டா பேசினா ரிஜக்ட் பண்ணிடுவாரு.

கேபிள் சங்கர்:

சாப்பாட்டுக்கடைக்கு மட்டும் விளம்பரம் பண்ணுவதால் மளிகை கடை, பாத்திரக்கடை, பெட்டிக்கடை முதலாளிகள் இவ்ளோ ஏன் சாக்கடை கூட இவர் மேல வழக்குபோடலாம். கோர்டில் வாதாடும் போது மானே தேனே மாதிரி என்டர் கவிதைகள் சொல்லணும்.

சிபி செந்தில்குமார்:

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.

என்ன ஆனாலும் சரி இரவு 7 மணிக்கு மேல் வழக்கு போடவும். காலையில் வழக்கு போட்டால் கோர்ட்டுக்கு வர இவரது மேனேஜர் பெர்மிசன் தர மாட்டார்.

பனங்காட்டு நரி:

அடிக்கடி எதையாச்சும் மறந்து தொலைப்பதால் மெமரி பிளஸ் கம்பனி ஏன் எங்கள் லேகியத்தை சாப்பிடவில்லை என வழக்கு போடலாம். ஆனா கோர்ட்டுக்கு வர மறந்துட்டாருன்னா என்ன பண்றது? நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க.

நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. அதை பதிவாக எழுதி டைரியின் மதிப்பை குறைத்ததாக டைரி கம்பெனி இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு வராம அல்வா கொடுக்க சான்ஸ் உண்டு. பி கேர்புல்..

கோமாளி செல்வா:

வெளியூர்க்கு போறேன் அப்டின்னு சொன்னதுக்காக உள்ளூர்னா இளப்பமா என உள்ளூர் மக்கள் இவர் மீது வழக்கு போடலாம். யார் யார் எந்த எந்த ஊர்ல இருந்தாலும் அந்த அந்த ஊர்ல உள்ளூர்காரனா இருந்தா இவர் மீது வழக்கு போடலாம். வழக்கு அன்னிக்கு முத ஆளா கோர்ட்டுக்கு வந்து வடை எனக்கே என கேட்க வாய்ப்பு இருப்பதால் மனுதாரர்கள் வடையுடன் அலையவும்.

வந்துட்டான்யா வந்துட்டான்:

18+ வயசு ஆனவர்களுக்கு மட்டும்னு சொல்லி மொக்கை பண்ணி என்னை மாதிரி யூத்களை ஏமாற்றியதால் என்னை மாதிரி யூத் எல்லோரும் இவர் மீது மானாவாரியாக வழக்கு போடலாம். கோர்ட்டில் பெயர் என்ன அப்டின்னு கேட்டால் "பெயர் சொல்ல விருப்பமில்லை" அப்டின்னு சொன்னால் முட்டிக்கு முட்டி தட்டவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி:

பிரபல பதிவர்கள் செய்த சில அண்டர்கிரவுண்டு வேலையை அம்பலப்படுத்தியதால் பிரபல பதிவர்கள் அனைவரும் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போறத பெருமையா "இது சரித்திரத்துல வரும். பாடத்துல படிப்பாங்க" அப்டின்னு கண்டபடி உளறிக்கிட்டு வருவாரு. கண்டுக்காதீங்க.

இம்சை பாபு:

1. ஒற்றுமைக்கு பேர் போனது காக்கா. அந்த காக்காவை ஆண் காக்காவா பெண் காக்காவா என சந்தேகம் எழுப்பி காக்காவின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததாக காக்கா இவர் மீது எச்சம் சீ வழக்கு போடலாம்.

2. ஆணா, பெண்ணா என கேள்வி கேட்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதால் பெண்ணாதிக்கவாதிகள் இவர் மீது வழக்கு போடலாம்.

கோர்ட்டுல வந்து கோர்ட் எப்ப கட்டினது எவ்ளோ செங்கல் செலவாச்சு அப்படின்னு கேள்வி கேட்டா மூஞ்சிலையே குத்துங்க.

வாரியர் தேவா:

வெறும் டிரைலரா ஓட்டிக்கிட்டு படத்தை கண்ணுலையே காட்டலைன்னு விநியோகஸ்தர்கள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும்போது பயப்பட தேவை இல்லை. ஏன்னா இவர் தமிழ்ல பேச மாட்டாரு.

சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு  நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்.

பொதுவானவை:

சில பதிவுகளை படித்தது இவ்ளோ மொக்கையா இருக்கே. இதை படிச்சு மன உளைச்சலுக்கு ஆளாகிட்டனேன்னு வழக்கு போடலாம். அந்த லிஸ்ட் நான் தரேன்.

சில பதிவுகளை படிச்சிட்டு இவ்ளோ சூப்பரா இருக்குன்னு ஆச்சரியத்தில் மூச்சு முட்ட வச்சாலும் வழக்கு போடலாம்.

என்னது என் நண்பன் டெரர் பேர் இல்லியா? அவர் மேல வழக்கு போடணுமா? பிச்சுபுடுவேன் ராஸ்கல்ஸ். அவர் மேலே எவனாவது வழக்கு போடுவீங்க? பதிவே எழுதாம நம்மளை காப்பாத்துறதுக்காக அவருக்கு பாராட்டு விழா வேணா எடுக்கலாம். மச்சி டெரர் சரிதான? நன்பேண்டா!!!!
......

புதன், டிசம்பர் 1

விருதகிரி சினிமா விமர்சனம்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த(வந்துடுமோன்னு பயந்து) புரட்சிக் கலைஞர் முதன் முதலாக இயக்கி நடித்த படம் விருதகிரி. மக்களின் அமோக வரவேற்புடேன். அதோட விமர்சனம் சுட சுட உங்களுக்காக.

விருதகிரி அந்த கிராமத்தின் பெயர். அங்க உள்ள மக்களுக்கு உதவி செய்து தமிழகத்தின் தாய்க்குலங்களுக்கு எல்லாம் செல்லப் பிள்ளையாக இருக்கும் இளைஞன் விருதகிரி(விஜயகாந்த்). இந்த படத்துல விஜயகாந்துக்கு வயசு 20. ஹீரோயினுக்கு வயசு 23.ஹீரோயின் மேக்ஸ் ஸ்டுடென்ட்டா வாராங்க.

படத்தோட ஒப்னிங்ல சில தீவிரவாதிங்க டாஸ்மாக்குல இருந்து லாரில சரக்க கடத்திட்டு வர்றாங்க. இதை கேள்விப்பட்ட விருதகிரி ஏழு மலை ஏழு கடல் தாண்டி வந்து அந்த லாரி முன்னாடி நிக்கிறாரு. வேகமா வந்த லாரி அவரு மேல மோதி அப்படியே ரெண்டு கிலோ மீட்டர் பின்னால பறந்து போகுது. அப்ப தலைவர் பேசுற பஞ்ச டயலாக்:

பனமரத்துல இருக்குடா நொங்கு..
2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..

நான் தண்ணி அடிக்க யார்கிட்டயும் இல்ல கூட்டணி
மக்கள் கூடத்தான் சரக்கடிக்க வைப்பேன் கூட்டணி...

உடனே அந்த தீவிரவாதி தலைவர பாத்து கேக்குறான்  "என்ன விருதகிரி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம உளறுற. தண்ணி அடிச்சிட்டு வந்தியா?". அதுக்கு தலைவர் செம நோஸ்கட் கொடுக்குறாரு பாருங்க "என்னடா வாசிம்கான் நீதான் ஊத்தி கொடுத்தியா?". இந்த வசனத்துக்கு தியேட்டர்ல கை தட்டு என்ன விசில் என்ன? கலக்கல். செம பஞ்ச் வசனம் இது.

அப்புறம் பத்து நிமிஷம் டயலாக் பேசுறாரு "ஏய் இந்தியாவுல மொத்தம் 1456789 சரக்கு கடை இருக்கு. அதுல தமிழ் நாட்டுல மட்டும்.....". இந்த டயலாக் ரைட்டருக்கு கண்டிப்பா சிறந்த வசனகர்த்தா அவார்டு நிச்சியம். வாசிம்கான் பயத்துல அப்படியே சரக்கை எல்லாம் விட்டுட்டு ஓடிடுறான்.

ஹீரோயின் மேக்ஸ் ஸ்டுடென்ட். இவரோட கணக்கு திறமையை பாத்து அவரை கணக்கு பண்ண ஆரமிச்சிடுறாங்க.  அப்பத்தான் ஒரு டூயட் வருது. கலக்கலான பாடல்.

தேவதை ஒன்று பிறந்திடும் நாளின்று..

வாசிம்கான் பாகிஸ்தான் தீவிரவாதியோட கை ஆள்ன்னு விருதகிரிக்கு தெரிய வருது. சரக்கு கடத்தலுக்கும் இந்தியாவோட முதலமைச்சருக்கும்(இந்தியாக்கு பிரதம மந்திரிதான், முதலமைச்சர் கிடையாதா?.அது எங்களுக்கும் தெரியும். நாங்க மாத்தி யோசிப்போம்ல) தொடர்பு இருக்குது. அவங்கதான் எல்லா சரக்கையும் பாகிஸ்தானுக்கு கடத்துறாங்க.

இத தட்டி கேக்குறதால விருதகிரிக்கு கொலை மிரட்டல் வருது. இதுக்கெலாம் ஆளும்கட்சிதான் காரணம். நான் ஆட்சிக்கு வந்தால் எங்கள் கொள்கை என்னன்னு உங்களுக்கு சொல்லுவேன்னு பகிரங்கமா அறிக்கை விடுறாரு. மக்களும் புது கொள்கையா இருக்கேன்னும் சரக்கை காப்பாத்தவும் எல்லோரும் சேர்ந்து விருதகிரியை இந்தியாவின் முதலமைச்சர் போட்டிக்கு நிற்க சொல்றாங்க.

அப்பத்தான்

"எங்கள் தோழா வாவா" பாட்டு வருது. அவரும் மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்று மக்கள் கூட்டணியில் எலக்சன்ல நிக்கிறாரு(ஏன் உக்காரலைன்னு கேட்க கூடாது). 

மக்களோட கிரகம் ச்சீ நல்ல நேரம் அவரு முதலமைச்சர் ஆயிடுறாரு. அப்பத்தான் தீயா ஒரு பாட்டு வருது:

மக்கள் ஒருபுறம் தெய்வம் ஒருபுறம்
....

கேட்கும் நம் முரசு(எப்படி கட்சி சின்னத்தை விளம்பரம் பண்ணினோம் பாத்தீங்களா?)

பாட்டு முடிஞ்சதும் கடத்தல் சரக்கு லாரிய நம்ம விருதகிரி ஹெலிகாப்டர்ல போய் பிடிக்கிறாரு. பார்த்தா சரக்கெல்லாம் பாகிஸ்தானுக்கு கடத்திக்கிட்டு இருக்காங்க. அப்ப வர்ற சண்டை காட்சி இருக்கே சார் செம செம. அப்புறம் யாருமே ஊகிக்க முடியாத கிளைமேக்ஸ் சார். நான் சொன்னா பாக்கும்போது ஒரு பீலிங் இருக்காது. செம போதையான கிளைமேக்ஸ். அதை வெண்திரையில் காண்க.

டிஸ்கி 1: ங்கொய்யால எங்க தலைவரு ரெண்டு வருசமா உக்காந்து, நின்னு, படுத்துக்கிட்டு யோசிச்சு கஷ்டப்படுத்தி சீ கஷ்டப்பட்டு படம் எடுப்பாரு. உங்களுக்கு நாங்க ஓசில விமர்சனம் எழுதணுமா. போய் எல்லோரும் ஒழுங்கா தியேட்டர்ல படம் பாருங்க. இல்லைனா விருதகிரி -பார்ட் 2 ,பார்ட் 3 அப்டின்னு எடுத்து ரிலீஸ் பண்ணுவோம் என்று தெரிவித்து கொல்லுகிறோம்.

டிஸ்கி 2: அப்பாடி இந்த படம் ரிலீஸ் ஆகிரதுக்குள்ள இத வச்சு எனக்கு பல பதிவு தேறும்போல..

கடைசியா ஒரு பஞ்ச்: என்னதான் கருப்பு எம்.ஜி.யாரா இருந்தாலும் அவரு கண்ணு சிவப்பாதாம்லே இருக்கும்..
...

செவ்வாய், நவம்பர் 30

கனிமொழி - காவியம்


கை கொடுங்க டைரக்டர் சார். இவ்ளோ அழகான அருமையான காவியத்தை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு அழகா மக்கள் ரசனைகேர்ப்ப படம் எடுக்கனும்னு உங்களுக்கு எப்படி சார் தோனுச்சு?

150 கொடி போட்டு எந்திரன் படம் எடுத்தாங்களாம். போங்க சார். அவ்ளோ செலவு பண்ணி என்ன பிரயோஜனம். செலவே இல்லாம எவ்ளோ அழகா படம் எடுத்திருக்கேங்க. ஜெய்யோட நடிப்பும் சரி அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்ஸும் சரி சூபெர்ப்.

கதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா?). சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். ஒவ்வொரு வசனங்களும் அவ்ளோ அருமை. வருங்கால சந்ததிகள் தெரிஞ்சு வச்சிக்க வேண்டிய வசனங்கள் சார்.

ஹீரோவின் நண்பனா வர்ற ஜோடி நம்பர் 1 மைக்கல் சூப்பர்(இத நம்பி பாவம் டிவி சான்ஸ் கூட மிஸ் பண்ணிருப்பாரே ).

ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். அவங்களை பாத்துக்கிட்டே இருக்கலாம்(இன்னும் உயிரோட இருக்கியாடா நீ).

அப்புறம்:

- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்?
- படத்துல நீங்க சொல்லவந்த கருத்து என்னவோ?(ஏன்யா மெசேஜ் மெசேஜ்ன்னு எல்லாத்துலையும் மெசேஜ் தேடுறீங்க)
- காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ?
- பாட்டை தவிர படத்துல எதாச்சும் கவனிக்கிற மாதிரி விஷயம் ஏதாச்சும் இருக்கா சார்?
- படத்துல அடிக்கடி டாய்லெட்ட குளோசப்ல காட்டுறீங்களே ஏன்? படம் பாக்குறதுக்கு பதிலா பேசாம அங்கே குந்த வச்சு உக்காந்திருக்கலாம்னா?
- எதுக்காக இந்த படம் எடுத்தீங்க சார்?
- போட்ட காசாவது வந்துச்சா சார்?
- அடுத்த காவியம் எப்போ சார்?

இப்படி எந்த பயலாவது உங்க கிட்ட வந்து கேட்டா சொல்லுங்க சார். பிச்சுபுடுவோம். பொறாமை பிடிச்ச பயலுக சார். இப்படி ஒரு படம் ச்சீ மகா காவியம் நான் பாத்ததும் இல்லை. பாக்க போறதும் இல்லை. மொத்தத்துல ஜெய்யின் கனிமொழி திரைப்படம் ஒரு மகா காவியம்.

# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.
.............

சர சர சரவெடி

இந்த வார வாழ்த்துக்கள்:

தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.


இந்த வார கோவம்:


எங்க ஆபீஸ் ஷிப்ட் பண்ணலாம்னு புரோக்கர் கிட்ட இடம் பாக்க சொன்னோம். இடமெல்லாம் பாத்து மமுடிஞ்சதும் புரோக்கர் கமிசன் ரெண்டு மாச வாடகை கேட்டாங்க. ஏன் ஒரு மாசம்தான வாடகை கேப்பீங்க. இப்ப என்ன ரெண்டு மாசம்ன்னு கேட்டா, வீடுன்னா ஒரு மாசம் கமர்சியல்ன்னா ரெண்டு மாச வாடகை அப்டின்னு சொல்றாங்க.
எனக்கு சரியான கோவம். அப்டின்னா முதல்லையே சொல்லிருக்கனுமே அப்டின்னு சண்டை போட்டு ஒரு மாச வாடகைதான் கொடுத்தேன். திட்டிகிட்டே வாங்கிட்டு போனாங்க.

இந்த வார காமெடி 1:


விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.

இந்த வார காமெடி 2:

நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.

இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம். செம தமாசு போங்கள்.

இந்த வார ஆடியோ:

விருதகிரி.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்(என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்).

"ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா"

இந்த பாடல் எல்லோருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்ட். நாட்டுப்பற்றை தூண்டும் பாடல் இது. சம்போ சிவா சம்போ மியூசிக்ல இன்னொரு பாட்டும் இருக்கு. மொத்தத்தில் விருதகிரி பாடல்கள் செம கிக். (தலைவா படம் எப்போ ரிலீஸ்?)

இந்த வார பலிகடா:

வேற யாரு நம்ம அருண் பிரசாத்தான். வலைச்சரத்துல நம்ம ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. கும்மி வேணுமா வேணாமானு ஒரு பட்டிமன்றம் வச்சிடலாம். என்ஜாய் பண்ணு ராசா. ...
...............

ஞாயிறு, நவம்பர் 28

எனக்கு விளம்பரம் வேணாம்னு சொன்னா யார் கேக்குறா?



எதிர்பார்க்காதது நடந்து போச்சு. நேத்துல இருந்து போன் மேல போன். இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை போன் பேசிப் பேசியே முடிஞ்சு போச்சு. நம்ம சிபி செந்தில் குமார் வேற போன் பண்ணி ட்ரீட் வேணும்ன்னு அடம். சரி சென்னை கிளம்பி வாங்க ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னா பேனா பென்சில் இல்ல அதனால ட்ரீட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.


யோவ் ட்ரீட்டுக்கு வர்றதுக்கு எதுக்கு பேனா பென்சில்ன்னு கேட்டா, ட்ரீட்னா சாப்டு மட்டும் வந்திட மாட்டேன். வந்துட்டு:



ட்ரீட்டின் ஹைலைட்ஸ் டிஷஷ் 
மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் சாப்பாடு
சாப்பாட்டின் பிளஸ் மைனஸ் 



அப்டின்னு ரெண்டு பக்கத்துக்கு பதிவு போடணும். அதனால வரலைன்னு சொல்லிட்டாரு. 


என்னால இப்போ வீட்டை விட்டு வெளில போக முடியலை(சத்தியமா கடன் தொல்லை எதுவும் இல்லை). எல்லோரும் என்கிட்டே ஆட்டோகிராப் கேட்டு ஒரே அன்புத் தொல்லை. ஆனா காபி வித் அனுவுல கூப்ட்டாங்க அப்டின்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்(ஏன்னா எனக்கு பொய் சொல்ல தெரியாது).


சரி சரி. நம்மளையும் மதிச்சு தமிழ் மணத்துல 14 வது இடம் கொடுத்துருக்காங்க(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?).
 
மங்குனி வேற நைட் ரெண்டு மணிக்கு போன் பண்ணி நீங்க பதிவரா இல்லை பிரபல பதிவரான்னு கேக்குறாரு(கலாய்க்கிறாராம். இந்தவாரம் பயபுள்ள பேரு தமிழ்மணத்துல  வரலைல. அந்த வயித்தெரிச்சல்).


டெரர் வேற போன் பண்ணி பின்னூட்டம் போடுறவங்களை, பின்னூட்டம் போட்டு தர்ம அடி வாங்குறவங்களை  மதிச்சு ஏதாச்சும் Top-20 List போடுவாங்களானு கேட்டு தொல்லை பண்றாரு. (மவனே உனக்குன்னு சொந்தமா ஒரு பிளாக் இருக்கு. காக்கா ஏதாச்சும் அங்க போய் கக்கா போயிடப் போகுது. போய் ஏதாச்சும் பதிவை எழுது. உன் கூட்டாளி அருண் வலைச்சரத்துல எழுதுற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டாரு. நீ இன்னும் உன் சொந்த பிளாக்குல எழுதுறதுக்கு யோசிக்கிற. போ அந்த  புள்ளைகிட்ட சீக்கிரம் நல்லா நல்லா பதிவு எழுதுறது எப்படின்னு கத்துக்கோ). 


அருண் தம்பி வலைச்சரத்துல நல்லா எழுதி நம்ம குரூப் பேர காப்பத்தனும். அங்க போய் டீ போடுவது எப்படின்னு பதிவு போட்டே மவனே நாங்க உன்னை போட்டு தள்ள வேண்டிதிருக்கும்.


இந்த நேரத்துல என்னை Follow பண்ற 211 பேருக்கும் என் பதிவை படிக்கும் எல்லோருக்கும் நன்றிகள். உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்(அய்யய்யோ எல்லா பாலோயரும்  போயிட்டா புதுசா ஆள் செக்கனுமே. அவ்வ்வ்வ்)..
.....

வெள்ளி, நவம்பர் 26

ஜோக்ஸ்

பன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!

===============================================
என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?

என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.

எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி 
===============================================
உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.

உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.
===============================================
ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க:
உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா. உங்க மனைவி
அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்
===============================================
கண்டக்டர்: எங்க போகணும்?
டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.
===============================================
செல்வா: நண்பா எனக்கு சாப்பிட பிடிக்கலை, தூங்க பிடிக்கலை எனக்கு காதல் வந்திடுச்சோ
சௌந்தர்: சனியனே செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு போய் படி
=============================
ஜில் தண்ணி: ஊர்ல பஸ் டிக்கெட், டிரைன் டிக்கட், சினிமா டிக்கெட் வச்சிருக்குறவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க. ஒரே ஒரு ஹால் டிக்கெட்ட வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. அய்யய்யையோ
===============================================
மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்.
ஆனால் study லீவ் என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். படிக்கவும் முடியாமா என்ஜாய் பண்ணவும் முடியாம ... அந்த அவஸ்தை அனுபவிச்சு பாத்தாதான் தெரியும்
===============================================
டெரர் அவர்களின் இதயத்தையும் உடைக்கவோ காயப்படுத்தவோ வேண்டாம். ஏன்னா அவருக்கு இதயம் ஒண்ணுதான. வேணும்னா அவரோட எலும்ப உடைங்க. அதுதான் 206 இருக்கே.
===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:

தப்பிச்சன்டா
சாமீ!!!
===============================================
பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...
===============================================
டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான்.  இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். 
......

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது