என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

Hunt For Hint-2

செவ்வாய், ஏப்ரல் 27

வெண்ணிறாடை மூர்த்தியின் தத்துவங்கள்

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
======================================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
======================================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
======================================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
======================================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
======================================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
======================================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
======================================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
======================================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
======================================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
======================================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.
======================================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
======================================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
======================================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
======================================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
======================================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.

நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது.

12 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

போட்டு தாக்கு நண்பா. கலக்கு.

வெங்கட் சொன்னது…

அருமையான் தொகுப்பு..
Note பண்ணி வெச்சுக்கிட்டேன்..
பிட் அடிக்க Use ஆகும்ல..

Mugilan சொன்னது…

:-)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகல,
அதுக்குள்ளே இப்படியா?

வடிவேலன் ஆர். சொன்னது…

மிகவும் அருமையாக தொகுத்திருக்கிறீர்கள் நண்பரே வாழ்த்துக்கள்

Velsankar சொன்னது…

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாதா?

டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ் வழக்கம் போல நன்றி

@வெங்கட் இது நீங்க சொல்லித்தான் தெரியனுமா. நீங்க இப்படிதான்னு அனு சொல்லிருக்காங்க.

@ முகிலன் நன்றி

@ கே.ஆர்.பி.செந்தில் எல்லாம் உங்களை மாதிரி அனுபவசாலிங்க கிட்ட கத்துகிட்டதுதான்.

@ வடிவேலன் ஆர். நன்றி

@ வேல்சங்கர் ஏன் பிட்டை எனக்கே போடுறீங்களே?

அனு சொன்னது…

//டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார். //

டாப்பு..

பழைய form-க்கு வந்துட்டீங்க போல இருக்கே.. கலக்குங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ anu thanks

Prasanna சொன்னது…

Suberabu :)

பலே பாண்டியா சொன்னது…

கலக்கல்ங்க.இனிமே உங்கள follow பண்றோம் பாஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பலே பாண்டியா சொன்னது… 11

கலக்கல்ங்க.இனிமே உங்கள follow பண்றோம் பாஸ்.
//

Thanks