Horoscope

ஞாயிறு, ஜூலை 4

பூக்காரி-குறும்படம்

இது என் தங்கை தனது காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காக இயக்கிய குறும்படம். அதில் நடித்தது என் இன்னொரு தங்கை.

ஒரு பூக்காரியின் மனதை சொல்லும் அழகிய குறும்படம் இது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். 


44 கருத்துகள்:

தேசாந்திரி-பழமை விரும்பி சொன்னது…

குறும்படம் நன்றாக இருந்தது நண்பரே !
பங்கெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !

ManA சொன்னது…

நல்லா இருக்கு வாழ்த்துக்கள் .

ஜெயந்தி சொன்னது…

உங்கள் தங்கை அருமையா படத்தை எடுத்திருக்காங்க. சொல்ல வந்த கருத்தை சுருக்கமா அழுத்தமா சொல்லியிருக்காங்க. என்ன படிக்கிறாங்க. அவங்களுக்கு என் பாராட்டைச் சொன்னேன்னு சொல்லுங்க.

Karthick Chidambaram சொன்னது…

சரிப்பா பதிவு போடாம சீரியஸா பதிவு போட்டு இருக்கீங்க.
நல்ல பதிவு. மறுமணங்கள் இன்னும் முழுமையாய் வரவேற்க படவில்லை என்று சொல்கிறதோ படம் ?

ஜில்தண்ணி சொன்னது…

குறும்படம் பார்த்தேன்

அருமையான் முயற்சி
பூக்காரி-தத்ரூபம்

இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

dheva சொன்னது…

தம்பி...ரமேஸ்......ரொம்ப விளையாட்டா வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன்பா....பாராமாய்...மனிதில் வலியோடு...கலங்கிய கண்ணீரோடு....முடித்தேன்.....

உணர்வுகளை அப்பட்டமாக கொண்டு வந்திருக்கும் தங்கைக்கும், படம் எடுத்த தங்கைக்கும்....பின்னனி இசையும் அபாரம் தம்பி...!


அன்பான வாழ்த்துக்களை இந்த அண்ணன் தெரிவிச்சதா ..தங்கச்சிகிட சொல்லிடுப்பா!

Swengnr சொன்னது…

போலீஸ் அண்ணே,
நம்ம தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அருமையா பண்ணி இருக்காங்க! வாழ்த்துக்கள்!
அப்படின்னு எழுத வந்தேன். ஆனால் அது உண்மை இல்லை. கீழே எழுதி இருக்கிறேன் உண்மையை..
இவள் விற்கும் பூவிற்கு உயிருண்டு! ஆனால்.. எனக்கு எழுத மனமில்லை ... ஏன் இந்த கொடுமை பெண்ணிற்கு மட்டும்? இது நியாயம் இல்லை. இதை எழுதவும் படிக்கவும் படைக்கவும் படிக்கவுமா நாம் இருக்கிறோம்! வேண்டாம். எனக்கு திருமணமாகி விட்டது ஆனால் நண்பர்களே, இது போன்ற பூக்களுக்கு வாசம் அளிக்க வேண்டாமா என்று சிந்திக்க வைக்கும் இந்த பதிவு என்று நம்புகிறேன்.

பனித்துளி சங்கர் சொன்னது…

ஒரு சில வார்த்தைகளில் இழந்த உயிரை , உறவை , உணர்வுகளை முழுதாய் இதயம் முழுவதும், நிரப்பி சென்றது இந்த குறும்படம் . மிகவும் எதார்த்தம் . இந்த இழந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Madumitha சொன்னது…

நாலேகால் நிமிடத்தில்
ஒரு கண்ணீர்த்துளி.
உங்களின் இரு சகோதரிகளுக்கும்
என் வாழ்த்துக்களைத்
தெரிவியுங்கள்.

Chitra சொன்னது…

குறும்படம் பார்த்து முடித்ததும், மனம் கனத்து விட்டது.... அருமையாக இருந்தது. உங்கள் சகோதரிகளிடம் என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்ல முயற்சி...
நன்றாக எடுத்திருக்கிறார்கள்..

வாழ்த்துக்கள்...

க ரா சொன்னது…

நண்பா இயக்கியவருக்கும், நடித்தவருக்கும் என் வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

சீமான்கனி சொன்னது…

என்னால் படத்தை பார்க்க முடியவில்லையே ஏன்...???
இருந்தாலும் சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி தேசாந்திரி-பழமை விரும்பி

@ நன்றி ManA

@ ஜெயந்தி நன்றி. அதில் நடித்த தங்கை B.Tech 3rd year. இயக்கியவர் Vis.com முடிச்சிட்டு CTS ல வொர்க் பண்றாங்க.

@ நன்றி Karthick Chidambaram. //மறுமணங்கள் இன்னும் முழுமையாய் வரவேற்க படவில்லை என்று சொல்கிறதோ படம் ?//

ஆம் நண்பரே.,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்

@ நன்றி தேவா அண்ணா. கண்டிப்பா தங்கச்சிங்ககிட்ட சொல்றேன்.

@ Software Engineer நன்றி.

//இது போன்ற பூக்களுக்கு வாசம் அளிக்க வேண்டாமா என்று சிந்திக்க வைக்கும் இந்த பதிவு என்று நம்புகிறேன்.//

உங்கள் கருத்துக்கு நன்றி. கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விஷயம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪

@ நன்றி Madumitha

@ நன்றி Chitra

@ நன்றி பட்டாபட்டி..

@ தேங்க்ஸ் ராம்ஸ்

@ seemangani நன்றி. ப்ளீஸ் கண்டிப்பாக இந்த படத்தைப் பாருங்கள்.

Kousalya Raj சொன்னது…

சகோதரிகளுக்கு வாழ்த்துகள். குறும்படம் அருமை

சீமான்கனி சொன்னது…

படம் பார்த்தேன்...நிஜமாவே சிறப்பான ஒரு படம்...:"பறித்த பூக்களுக்கு தினமும் உயிரூட்டும் தேவதை இவள்..."

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அருமையா நல்லா எடுத்துருக்காங்க..

வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி Kousalya

@ உங்கள் அன்புக்கு மிக்க நன்றி seemangani

@ நன்றி ப்ரியமுடன் வசந்த் மாப்ள

நாடோடி சொன்னது…

குறும்ப‌ட‌ம் ந‌ல்லா இருந்த‌து ர‌மேஷ்... த‌ங்கைக‌ளுக்கு என்னுடைய‌ வாழ்த்தையும் தெரிவித்து விடுங்க‌ள்..

வடுவூர் குமார் சொன்னது…

பட‌ம் ஆர‌ம்ப‌ பின்னிசை காலை வேளையை ஒத்திருந்தால் ஒரு பிடிப்பு இருந்திருக்கும்.பின்னிசையில் இன்னும் செய்திருக்க‌லாம்.வ‌ச‌ன‌ம் எல்லாம் அப்ப‌டியே விழுகிற‌து,ஒரு ஓட்ட‌ம் இல்லாம‌ல் இருக்கிற‌து.
வீட்டை பாத்துக்க‌ ‍ இத‌ற்கு அடுத்து அந்த‌ சின்ன‌ பெண்ணை காண்பித்திருந்தால் கொஞ்ச‌ம் ஸ்கோர் செய்திருக்க‌லாம்.
முடிவில் வ‌ரும் க‌விதை‍- என‌க்கு அதெல்லாம் அவ்வ‌ள‌வாக‌ வ‌ராது இருந்தாலும் இர‌ண்டாவ‌து முறை ஓட்டிப்பார்த்தால் தான் புரிகிற‌து.
முத‌ல் குரும்ப‌ட‌ம் தானே செய்ய‌ச்செய்ய‌ புரியும் ம‌ற்றும் மேம்ப‌டும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி நாடோடி சார், கண்டிப்பா சொல்றேன்

//முத‌ல் குரும்ப‌ட‌ம் தானே செய்ய‌ச்செய்ய‌ புரியும் ம‌ற்றும் மேம்ப‌டும். //

@ வடுவூர் குமார் நன்றி. கண்டிப்பா அடுத்த படங்களில் சரி செய்து விடுகிறோம். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

அண்ணாச்சி சொன்னா... சொன்னது…

அருமையாக இருந்தது. அதிலும் கடைசி காட்சிகள் கண்கலங்க வைத்தன. வாழ்த்துகள்

vasan சொன்னது…

'பூக்காரி' த‌லைப்பை பார்த்த‌தும் வேறு நினைவில் அதிர்ச்சியும் அய‌ர்ச்சியும்.
த‌ங்கையின் ப‌ட‌ம் கைம்பெண்ணின் கைய‌று நிலையை நான்கு நிமிட‌த்தில்
முழுமையாய். பாதுகாப்பிற்காய், பூ, பொட்டு அணியும் இப்பெண்க‌ளை
சமுதாயம் சக‌ச‌மாய் எடுத்துக் கொள்கிற‌து.ஆனால் அவ‌ர்க‌ள் ம‌ன‌நிலை?
துணை பாத்திர‌ங்க‌ளின் வ‌ச‌ன‌மும் உட‌ல்மொழியும் கொஞ்ச‌ம், புது வாச‌ம்.
`பூ முடிப்ப‌தும், பொட்டு வைப்ப‌தும் யாருக்காக‌' இந்த‌ பாட‌ல் வரிக‌ள்
ம‌று ப‌ரிசீலனை செய்ய‌ ப‌ட‌வேண்டும் தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருமையாக இருந்தது. அதிலும் கடைசி காட்சிகள் கண்கலங்க வைத்தன. வாழ்த்துகள்//
நன்றி அண்ணாச்சி சொன்னா...

@ உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி vasan

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ரொம்ப அருமையா இருக்குங்க..

தங்கை பேர் போடாதீங்க பொதுவில்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி சாந்தி மாத்திட்டேன்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ரொம்ப அருமையா இருக்குங்க..

தங்கை பேர் போடாதீங்க பொதுவில்...

rajasundararajan சொன்னது…

இசை நன்றாக இருக்கிறதே என்று படம் தொடங்கியவுடனே உணர்ந்தேன். (வடுவூரார் இசையைக் குறை சொல்லி இருப்பதையும் வாசித்தேன். தளர வேண்டாம்). காட்டப்படும் காட்சிக்கு அல்ல, மன உணர்வுகளுக்கே இசைசேர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செய்யப்பட்டு இருக்கிறது. பூச்சூடும் தம்பதியர்க்கு அடுத்த காட்சியில் பூக்காரி திரும்பிப் பார்ப்பதோடு இசையிலும் திருப்பம் வருவதும் அருமை.

பூக்காரிக்கு என்று ஒரு பெயர் இல்லாமல் 'பூ' என்று விளிக்கப் படுவது நல்ல கவனிப்பு. திரைக்கதை, காட்சிப் படுத்தல், பூச்சூடிவிடும் தம்பதியரை யோசித்தது எல்லாம் பாராட்டுதற்குரியன. பூக்காரிக்கு நடித்தவரும் நன்றாக நடித்திருக்கிறார் (கூடையில் கூடக் கொஞ்சம் பூ இட்டு இருக்கலாம்).

இக் கதை முழுக்க முழுக்க இதனை ஆக்கியவருடையதுதான் என்று புரிந்தாலும், கருத்தீட்டம் (idea) பாக்கியராஜ் அவர்களுடையதாய்ப் படுகிறது (புதிய வார்ப்புகள்). அதனால் என்ன, வளர வளர இயக்குநர்க்கே புதிய கருத்துகள் தோன்றலாம். அல்லது இதுவரை சொல்லப்படாத கருத்துகளைத் தேடிப் படமாக்குவார் ஆகலாம். வாழ்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ rajasundararajan உங்கள் விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி. இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக எடுக்க முயற்சி செய்கிறோம்....

Jey சொன்னது…

படம் , ரொம்பவும் டச்சிங்கா இருக்குப்பா.
20 வருஷத்துக்கு முன்னாடிக்கு, இப்போ கொஞ்சம் மாறுதல் இருக்குது இல்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Jey மிக்க நன்றி..

பிரேமா மகள் சொன்னது…

உங்க தங்கச்சி நல்ல கருத்தை சொல்லியிருக்காங்க..

சில குறைகளை சொன்னால் அவங்க இன்னும் வளர வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்..

ஏற்கனவே உங்கள் நண்பர் கூறியது போல வீட்டை பார்த்துக்கோ என சின்னப் பெண்னிடன் சொல்வது ரியலாக இல்லை. அதுவும் வீட்டை பத்திரமா பார்த்துக்கோ என்று சொல்லாமல் நல்லா பார்த்துக்கோ என்பது ஒட்டவில்லை.

பூக்காரியாக நடிக்கும் பெண்னின் கையில் உள்ள தட்டில் இன்னும் நிறைய பூ இருந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கேட்டவுடன் அப்படியே பூவை எடுத்து தருவது செட்டிங் மாதிரி இருக்கு..ரியலா இல்லை..

அடுத்து வீட்டிற்கு வந்து பூவை வீசும் போது, கோபமாக இருப்பது போல இருக்கிறது.. அப்படி இல்லாமல் வருத்தப்படுவது போல இருந்தால் டச்சிங்காக இருக்கும்.\


உங்கள் தங்கை பெரிய படைப்பாளியாய் வர வாழ்த்துக்கள்..

அனு சொன்னது…

ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க, ரமேஷ்.. சிறு தவறுகள் இருந்தாலும் முதல் படம்-ன்றதால பிரச்சனை இல்லை.. பின்னால் தானாக மெருகு ஏறிவிடும்...

convey my wishes to your sisters.. keep up the good work..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி பிரேமா மகள். என் நண்பர்களுக்கும் இந்த கருத்து உண்டு. குறைகளை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. முதல் படம் என்பதால் இந்த குறைகள். உங்கள் எல்லோருடைய கருத்துகளும் அடுத்தடுத்த படங்களுக்கு மெருகேற்றிக்கொள்ள உதவும். மீண்டும் நன்றி.

@ நன்றி அனு. கண்டிப்பாக உங்கள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் என் தங்கையிடம் சொல்லி விடுகிறேன்.

அருண் பிரசாத் சொன்னது…

நன்றாக வந்திருக்கிறது ரமெஷ். சகோதரிக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லிவிடுங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி அருண் பிரசாத்

செல்வா சொன்னது…

உண்மைலேயே நான் 3 :41 வரைக்கும் எதுக்கு இந்த குறும்படம் , உங்களை விட மொக்க போடுறாங்க அப்படின்னு கமெண்ட் போடலாம்னு நினைச்சேன். ஆனா கடைசில, சத்தியமா அருமையான படம்க .. கண் கலங்க வச்சிட்டாங்க ..!! வாழ்த்துக்கள் ..!!
(என்னால் இசையையோ மற்ற வசனங்களையோ கேட்க இயலவில்லை , காரணம் எனது அலுவலகத்தில் Speaker கிடையாது)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks ப.செல்வக்குமார்

Jayadev Das சொன்னது…

படத்த கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டுபோய் இறுதி பத்து செகண்டுல அதை உடைச்சிருக்கீங்க, சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks Jayadeva

Meerapriyan சொன்னது…

pookkari kurumbadam arumai. sirippu police vazhangiya serious idugai.padaippazi thangaikazukku vazhthukal.-meerapriyan.blogspot.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Meerapriyan thanks

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது