Horoscope

சனி, ஜூலை 31

கடவுள் என்னும் தொழிலாளி

ஒரு வாரம் கொஞ்சம் ஆணி அதிகம்ன்னு லீவ் லெட்டர் கொடுத்துட்டு போனாலும் அருண் என்னடான்னா Biodata போடுறேன்னு மிரட்டுறார். நம்ம ஜெய் அண்ணன் அரச மரத்தடில பூக்குழி இறங்குவேன்னு மிரட்டுறார். வெங்கட் VAS சங்கத்தை கலைச்சிடுவேன்னு அடம் பிடிக்கிறார். சரி இவ்ளோ பேர் கூப்பிட்டும் வரலைன்னா என்ன ஆகுறது அப்டின்னு முடிவு பண்ணி வந்து சேந்துட்டேன்.

போன வாரம் முழுவதும் டாக்ஸி பயணம்தான். நிறைய மனிதர்களை சந்திக்க நேரிட்டது. நான் இன்று சந்தித்த டாக்ஸி டிரைவரை வாழ்க்கைல என்னால் மறக்க முடியாது. இன்னிக்கு காலைல ஏழு மணிக்கு டாக்ஸி புக் பண்ணி இருந்தோம். அந்த டிரைவருக்கு 74 வயது ஆகிறதாம்.

இந்த வயதிலும் உழைக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட். ஆனால் பயணத்தின் போது அவருடன் பேசும்பொழுது மனதுக்கு சந்தோசம் இல்லை என்பதுதான் உண்மை.

அந்த டிரைவரிடம் எப்படி இந்த வயசில் உழைக்க முடிகிறது எத்தனை குழந்தைகள் என்று கேட்ட போது அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இருவரும் இறந்து விட்டதாகவும் தன மனைவியுடன் தனியாக வாடகை வீட்டில் இருப்பதாகவும் கூறினார். அதற்க்கப்புறம் சில நிமிடங்களுக்கு அவருடன் எதுவும் பேச முடியவில்லை.

அவருக்கு குழந்தை பிறந்த புதிதில் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து நிறையா சம்பாதித்ததாகவும் கூறினார். அப்புறம் என்ன வாடைகை வீட்டில் இருக்குறீர்கள் சொந்தமா ஒரு வீடு வாங்கிருக்கலாமே என்று கேட்டோம். அதற்க்கு அவரிடம் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் தான் பதில். அதற்க்கு அப்புறம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

அதற்க்கு அப்புறம் அவரே பேச ஆரமித்தார். வெளிநாட்டில் சம்பாதித்த  பணத்தில் அவரது பொண்ணையும்,பையனையும் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து நல்ல வீடு கட்டி ஆளுக்கு ஒன்னும் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த நன்றி கேட்ட ஜென்மங்கள் சொந்த அப்பா அம்மா என்று கூட பாக்காமல் அவர்களிடம் இருந்த எல்லாத்தையும் பிடிங்கி விட்டு அவரை சரமாரியாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டுருக்கிறார்கள். சொந்த அப்பாவை அடிக்கிற அளவுக்கு அவர்களுக்கு இந்த மனநிலை எப்படி வந்தது?

ஆனாலும் வேற எந்த வழியிலும் போகாமல் இந்த 74 வயதில் மனம் தளராமல் தனக்காகவும், தன மனைவிக்காகவும் உழைக்கும் இந்த கடவுள் என்னும் தொழிலாளியை நாம் வாழ்த்தி வணங்குவோம்.

இரவு ஏழு மணிக்கி பயணம் முடிந்து எங்களை இறக்கி விட்டு விட்டார். பயணத்தில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை.

33 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

திரும்பி வந்தாலும், ஒரு கருத்துடன் வந்திருக்கிறீர். வாழ்த்துக்கள் உங்களுக்கு, சல்யூட் அந்த பெரியவருக்கு

வெங்கட் சொன்னது…

Welcome Back..

நீங்க எழுதி இருக்கறதை
படிக்கும் போது மனசுக்கு
சங்கடமா இருக்கு...!!

74 வயதிலும் உழைக்கும்
அவருக்கு ஒரு சல்யூட்..

ஆனா எல்லா முதியவர்களாலும்
இவரை மாதிரி உழைக்க முடியாதே..
அவர்களின் கதி..??

முதியோர் இல்லம் தானா..??
என்ன கொடுமை...

எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு
வருகிறது..


முதியோர் இல்லம்
------------------

இது மனித காட்சிசாலை.,
பால் குடித்த விலங்குகள்
வந்து பார்த்து செல்லும்..!!

Jey சொன்னது…

டேமேஜரு, ஊருக்குள்ள இப்ப , இதுமாதிரி கொல்லப்பேரு அப்ப,ஆத்தாவ தனியா விட்டுட்டு வாழ்ராய்ங்க.இவய்ங்க விலா எலும்ப ஒடைக்க சட்டம் வர்ரதா கேள்விபட்டேன். அப்படியாவது குறயுமானு தெரியல. மொத்தத்துல மனுசப் பயபுள்ள்களோட மனசு கேட்டுப்போச்சு வெற என்னத்த சொல்ல..., ஒரு சைடு படிப்பு கூடக்கூட அடிப்படை அறிவும், மனுசத்தன்மையும் குறையுது...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

///பயணத்தில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை.///

இப்போது என் மனதிலும் பாரம் ஏறி விட்டது ரமேஷ்....

Swengnr சொன்னது…

இந்த மாதிரி பசங்களை கொன்னாலும் தகும்! போலீஸ் சார், அந்த பேரெண்ட்ஸ் பாவம். இப்படி எல்லாம் செய்ய எப்படி தான் மனசு வருமோ? என்னால் முடியாது.

சீமான்கனி சொன்னது…

அவர்களுக்கு எப்படிதான் அடித்து விரட்ட மணசு வந்ததோ மனிதர்களாய் இருக்க அருகதை இல்லாத ஜென்மங்கள்...

க ரா சொன்னது…

(: என்னத்த சொல்றது. 74 வயதிலும் உழைக்கும் அவரை பாராட்டுவதா அல்லது அவரின் அந்த நிலைக்கு காரணமான அந்த விலங்குகளை ஏசுவதா என்ன செய்ய

ஜில்தண்ணி சொன்னது…

வாங்கண்ணே

ஒன்னும் சொல்றதுக்கில்ல

இப்ப தெருவுக்கு ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்க கிளம்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க???

அந்த பெரியவரின் தன்னம்பிக்கை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//இரண்டு குழந்தைகள் என்றும் இருவரும் இறந்து விட்டதாகவும் //

உண்மையில் இறந்து விட்டார்களா அல்லது இறந்ததுக்கு சமம் என்று கூறினார?

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//அவர்களிடம் இருந்த எல்லாத்தையும் பிடிங்கி விட்டு அவரை சரமாரியாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டுருக்கிறார்கள். //

ஒரு வேலை அந்த ஜென்மங்கள் இன்னும் உயிர்ரோட இருந்த..... அதான் டாக்ஸி இருக்கு இல்ல விட்டு ஏத்த சொல்லுங்க தல... பூமிக்கு பாரம் குறையும்.

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//ஆனாலும் வேற எந்த வழியிலும் போகாமல் இந்த 74 வயதில் மனம் தளராமல் தனக்காகவும், தன மனைவிக்காகவும் உழைக்கும் இந்த கடவுள் என்னும் தொழிலாளியை நாம் வாழ்த்தி வணங்குவோம்.//

சத்தியமாக கடவுள்தான். தன் பாரத்தை சுமக்க முடியாத வயதில் தன் மனைவியை சேர்த்து சுமக்கும் அந்த மனித தெய்வத்துக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கருடன் சொன்னது…

இளம் வயதில் சொந்த பந்தங்களை விட்டு வெளிநாட்டில் உழைத்து இந்த வயதிலும் உழைத்துகொண்டு இருக்கும் அவருக்கு உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் கொடுக்க இறைவனை பிராத்திக்கிறேன். அவரு பெத்ததுங்க (ரமேஷ் மற்றும் படிப்பவர்கள் மன்னிக்க) நாசமாக போக மனம்யுருகி பிராத்திக்கிறேன்.

சுசி சொன்னது…

//ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை.//

:((((

அவர் நல்லபடியா வாழட்டும்.

பனித்துளி சங்கர் சொன்னது…

அந்த உழைப்பின் சிகரத்திற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே . இதுபோன்று சிறந்த தன்னம்பிக்கை பதிவுகளை தரும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி சொன்னது…

///பயணத்தில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை.///

படிக்கும் போதே கஷ்டமா இருக்கு...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உண்மையில் இறந்து விட்டார்களா அல்லது இறந்ததுக்கு சமம் என்று கூறினார?//

டெர்ரர் ரெண்டும் உயிரோடுதான் இருக்குது. இறந்ததுக்கு சமம் என்றுதான் அவர் கூறினார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி அருண் பிரசாத்

@ வெங்கட் அவரோட கதையை கேட்டதும் மனசு கேட்டகவே இல்லை. ஏதாவது உதவி அவருக்கு செய்யனும்னு தோணிச்சு..

@ Jey இதுகெல்லாம் நாட்டுக்கு தேவையா?

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)
@ Software Engineer
@ சீமான்கனி

முடிந்தவரை இந்த மாதிரி ஆளுங்களுக்கு தோள் கொடுப்போம்.

@ ராம்ஸ்,ஜில்தண்ணி - யோகேஷ் இதுக்கெல்லாம் ஒரு கடுமையான சட்டம் கொண்டு வரணும்.

//ஒரு வேலை அந்த ஜென்மங்கள் இன்னும் உயிர்ரோட இருந்த..... அதான் டாக்ஸி இருக்கு இல்ல விட்டு ஏத்த சொல்லுங்க தல... பூமிக்கு பாரம் குறையும்.//

கண்டிப்பா பண்ணனும்.இதுக நாட்டுக்கு தேவையா? இந்த பெரியவர் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துவோம்...

@ சுசி,ஜெய்லானி ஆமாங்க இந்த பெரியவர் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துவோம்...

Unknown சொன்னது…

74 வயதிலும் உழைக்கும்
அவருக்கு ஒரு சல்யூட்..

Unknown சொன்னது…

நாம ரொம்ப சாகிரதாய இருக்கணும் போல.. இப்பவே ஒரு ரகசியா கணக்கு ஆரம்பிக்கணும்..

என்னால் அம்பது கூட வயசில டாக்சி ஓட்ட முடியாது

NADESAN சொன்னது…

வாழ்க வளமுடன்
நல்ல பதிவு கண்களில் நீர்

நெல்லை நடேசன்
துபாய்
அமீரகம்

ஜெயந்தி சொன்னது…

//நாம ரொம்ப சாகிரதாய இருக்கணும் போல.. இப்பவே ஒரு ரகசியா கணக்கு ஆரம்பிக்கணும்..//
இதுல சந்தேகம் வேறயா? அவசியம் ரகசிய சேமிப்பு இருக்கணும்.

ஜெயந்தி சொன்னது…

பிள்ளைகள் துன்புறுத்தினால் போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதற்கு இப்போது தனிச்சட்டம் வந்திருக்கிறது.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

74 வயது பெரியவரின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்..

அவரின் அந்த இரண்டு பிள்ளைகளும் இருந்தாலும் இறந்ததற்கு சமமே..

பெயரில்லா சொன்னது…

//பயணத்தில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை//
வலி மிகுந்த வார்த்தைகள்..
தன்னம்பிக்கைப் பதிவு.. வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி கலாநேசன்

@ கே.ஆர்.பி.செந்தில் ஆமான்னா உஷாரு...

@ நடேசன் நன்றி

@ ஜெயந்தி ஆமாங்க போன வாரம் கூட செய்தி படிச்சேன்.

@ வெறும்பய கரக்டா சொன்னீங்க

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இறந்துபோய்ட்டதா அவர் சொன்ன பதில் மிகச்சரி...!

மங்குனி அமைச்சர் சொன்னது…

தன்னம்பிக்கை = அந்த பெரியவர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மங்குனி அமைசர் & ப்ரியமுடன் வசந்த் thanks

செல்வா சொன்னது…

///என்று கேட்ட போது அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இருவரும் இறந்து விட்டதாகவும் தன மனைவியுடன் தனியாக வாடகை வீட்டில் இருப்பதாகவும் கூறினார். ///
இது போதும் அந்த நன்றிகெட்ட நாய்ங்களுக்கு ...!!

Unknown சொன்னது…

வெங்கட் சொன்னதுபொல் விலங்குகளுடன்கூட அவர்களை ஒப்பிடகூடது விலங்குகள்தங்கலது இயல்புடன் வாழ்கிறது ஈனப்பிரவிகள் என்றுதான் சொல்லவேண்டும் அன்புடன் அ.மாணீக்கவேலு

Unknown சொன்னது…

வெங்கட் சொன்னதுபொல் விலங்குகளுடன்கூட அவர்களை ஒப்பிடகூடது விலங்குகள்தங்கலது இயல்புடன் வாழ்கிறது ஈனப்பிரவிகள் என்றுதான் சொல்லவேண்டும் அன்புடன் அ.மாணீக்கவேலு

Unknown சொன்னது…

வெங்கட் சொன்னதுபொல் விலங்குகளுடன்கூட அவர்களை ஒப்பிடகூடது விலங்குகள்தங்கலது இயல்புடன் வாழ்கிறது ஈனப்பிரவிகள் என்றுதான் சொல்லவேண்டும் அன்புடன் அ.மாணீக்கவேலு

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் /r

74 வயதிலும் உழைத்துப் பிழைக்கும் அவர் வாழ்க ! பிள்ளைகள் பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டினராம்.. என்ன செய்வது ... இப்படிப்பட்ட பிள்ளைகள் நம் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். ம்ம்ம் - இப்பொழுதுதான் சட்டம் போட்டிருக்கிறோம். /r

நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள் ரமேஷ் = நட்புடன் சீனா

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது