Horoscope

ஞாயிறு, அக்டோபர் 31

பதிவர் மாப்பிள்ளை ஓகே வா?

ஒரு அழகான பொண்ணு(ஏய் யாருப்பா இது இடிச்சிக்கிட்டு உள்ள வாறது. ஓ பன்னிக்குட்டி சார் நீங்களா. பொண்ணுன்னு சொல்லிட்டா போதுமே உடனே இடிச்சிக்கிட்டு வந்துடுறதா. போங்க சார்). அதுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க. அந்த பொண்ணு எந்த மாப்பிள்ளையை செலக்ட் பண்ணியதுன்னு பாப்போம்.

வாத்தியார்:

அப்பா இந்த மாப்பிள்ளை வேணாம். சமையல் சரி இல்லைனா அதே சமயல இம்போசிசனா நூறு தடவ பண்ண சொல்லுவாரு.

நடிகன்:

வேணாம். I Love You உண்மைலயே என்கிட்டே சொல்லுறாரா, இல்ல அவரோட படத்துக்கு ஒத்திகை பக்குறாரான்னு தெரியாது.

போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். எது வேணும்னாலும் மாமூல் கொடுக்கணும்.

சாப்ட்வேர் இஞ்சினியர்: 

வேணாம். ஒரு சமையல் பண்றதுக்கு Group மீட்டிங் போட்டு அனலைஸ் பண்ணி ஒரு வாரம் ஆக்கிடுவாரு.

பதிவர்: 

அப்பா இந்த மாப்பிள்ளைய வர சொல்லுங்க நான் பேசணும்.

பொண்ணு: வாங்க. உங்களை பத்தி கேள்விப் பட்டிருக்கேன். நீங்க பிரபல பதிவராமே?

பதிவர்: ஆமா.

பொண்ணு: உங்க ப்ளாக் நேம் என்ன?

பதிவர்: பதிவுலக பலாமேதை கள்ளிக்காட்டு காக்கா.

பொண்ணு: அதென்ன பதிவுலக பலாமேதை?

பதிவர்: பதிவுலக மாமேதைன்னு சொல்லிக்கிட்டு சில பேரு அலையும்போது இருக்கும்போது பதிவுலக பலாமேதை இருக்க கூடாதா? 

பொண்ணு: உங்களைப் பத்தி சொல்லுங்க.

பதிவர்: இந்த லிங்க்க கிளிக் பண்ணினீங்கன்னா அங்க "என் சுய விவரம் காண்க" அப்டின்னு இருக்கும். இத பாத்து தெரிஞ்சிக்கோங்க.


பொண்ணு: ஷ். யாப்பா. உங்களுக்கு சமைக்க தெரியும்மா?

பதிவர்: தெரியும். இந்த லிங்க் பாருங்க. அதுல சமையல் குறிப்பு எழுதிருக்கேன்.(டீ போடுறது எப்படிங்கிறது சமையல் குறிப்புதான?)

பொண்ணு: என்னை பத்தி சொல்றேன். எனக்கு கோவம் அதிகமா வரும்.

பதிவர்: பரவா இல்லை. நான் பதிவர்தான. எனக்கு சூடு சுரனை எல்லாம் கிடையாது.

பொண்ணு: நீங்க என்ன ஜாதி?

பதிவர்: இந்த லிங்க் போய் பாருங்க. என்னை ஜாதிய சொல்லி ஒருத்தர் திட்டிருக்கார். அத பாத்துதான் என்னோட ஜாதியை நான் தெரிஞ்சிக்கிட்டேன்.

பொண்ணு: எனக்கு கோவம் வந்தால் காறி துப்புவேன். அப்புறம் அடிப்பேன்.

பதிவர்: பரவா இல்லை. இந்த லிங்க் போய் பாருங்க. என்னை பத்தி அசிங்க அசிங்கமா எழுதிருப்பாங்க. இந்த லிங்க்ல என்னை சாவடி அடிச்சிருப்பாங்க. நான் அங்கெல்லாம் போய் :)) அப்டின்னுதான் போட்டுட்டு வருவேன்.

பொண்ணு: (ரொம்ப மானம் கேட்டவன் போல). சரி அப்ப உனக்கு சண்டை போட தெரியாதா?

பதிவர்: எவன் சொன்னான். இந்த லிங்க் ல போய் பாருங்க. ஒருத்தன திட்டி புனைவு எழுதிருப்பேன். அனானி பேர்ல கமென்ட் போட்டிருப்பேன்.இந்த லிங்க்ல ஒருத்தன் என்கூட பண்ணின சாட்- டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டிருப்பேன்.

பொண்ணு: பொது அறிவெல்லாம் எப்படி?

பதிவர்: இந்த லிங்க்ல போய் பாருங்க. அறிவுப்போட்டி -1,சினிமா புதிர்கள் -35 அப்டின்னு நிறைய அறிவு(????) சம்மந்தமான கேள்விகள் இருக்கும்.

பொண்ணு: என்னை லவ் பண்ணும்போது கவிதை எழுதுவியா?

பதிவர்: இந்த லிங்க்ல கவிதை எழுதிருக்கேன். நமக்கு குழந்தை பிறந்தா கதை கூட சொல்லுவேன். வேணும்னா இந்த லிங்க்ல போய் பாருங்க. 18+ லிங்க்ல போய் பாருங்க. நம்ம ஹனிமூன் பத்தி எழுதிருப்பேன்.

பொண்ணு: நம்ம கல்யாணத்தை எங்க வச்சுக்கலாம்?

பதிவர்: எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?

மணப்பெண் மயங்கி சரிகிறார்.,

......

வெள்ளி, அக்டோபர் 29

பதிவுலக யோகா

மறுபடியும் பதிவுலகில் சண்டை ஆரமிச்சுடுச்சு.  நான் பதிவெழுத ஆரமித்த புதிதில் ஒரே கலவரம். சரி பதிவே எழுத வேண்டாம் என நினைத்தேன்(யாருப்பா அது கை தட்டுறது). மக்கள் எல்லாம் கெஞ்சி கேட்டதால எழுத ஆரமித்தேன். என்னதான் இருந்தாலும் கலவர பூமில ஜாலியா விளையாடிட்டு போறது நம்ம குரூப் தான்னு நினைக்கிறேன். உலகமே அழிஞ்சாலும் நாம வழக்கம்போல கும்மி அடிச்சிக்கிட்டே இருப்போம். சண்டைகளை ஓரம் கட்டுவோம்.

சொந்தமா சரக்கு இல்லாததால இந்த சரக்கு மெயில  போஸ்ட்டா போட்டு உங்களுக்கு டார்ச்சர் கொடுக்குறேன். ஹிஹி..

பலாசனா:
இது பதிவு எழுதுவதற்கு உக்காந்து யோசிக்கும்போது பண்ணவேண்டிய ஆசனம். அப்படியும் ஐடியா தோணலைன்னா சுவரில் முட்டிக்கொள்ளவும்.

சேது பந்த சரவான்காசனா:
இது மொக்கை பதிவை படித்தவுடன் அனிச்சையாக நடைபெறும் ஆசனம். நாம செய்யவேண்டிய அவசியம் இல்லை.

மர்ஜயாசனா:
மொக்கை பதிவுக்கு  ஓட்டு,கமெண்ட் கெஞ்சி கேட்கும் ஆசனம்.

ஹாலாசனா:
மொக்கை பதிவு எழுதியவரை தலைகீழாக தொங்கவிடும்போது நடக்கும் ஆசனம் இது.


டால்பின்:
நம் பதிவை படித்துவிட்டு நம்மை கொலை வெறியுடன் தேடும் போது  செய்ய வேண்டிய ஆசனம்.


சலம்பாசனா:
18+ பதிவு படிக்கும்போது அந்தரத்தில் மிதக்கும் பீலிங் வர செய்ய வேண்டிய ஆசனம்.


ஆனந்த பலாசனா:
புனைவு எழுதுவதெப்படி என மல்லாக்கப் படுத்து யோசிக்கும் போது செய்ய வேண்டிய ஆசனம்.
மலாசனா:
மொக்கை பதிவுக்கும் ஓட்டும், கமெண்டும் போட்டவங்களுக்கு நன்றி சொல்லும் ஆசனம்.


சவாசனா:
அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.

ஹலோ எங்க ஓடுறீங்க. ஆசனம் பண்ணவா. ஓகே. All the Best...
..

செவ்வாய், அக்டோபர் 26

என் ஜீவன் பாடுது

என் ஜீவன் பாடுது. நம்ம நவரச நாயகன் கார்த்திக், சரண்யா நடித்த படம். இதுல என்ன கதைன்னா நம்ம கார்த்திக் செத்து போய் ஆவியா அலைவாரு. ஆவிய சரண்யா லவ் பண்ணுவாங்க.  கடைசில சரண்யாவும் செத்துப் போய் ஆவியாயிடுவாங்க.(உயிரோட இருக்குற நம்மள யாரும் லவ் பண்ண மாட்டேங்குறாங்களே #வயித்த்ரிச்சல்)


எங்கிருந்தோ அழைக்கும் என்ற சூப்பர் ஹிட் பாடல் இந்ந்த படத்துல உண்டு. சரி காந்தி செத்துட்டாரான்னு கேக்காதீங்க. அது மேட்டர் கிடையாது. நேத்து ராஜ் டிஜிட்டல் டிவில இந்த படம் பார்த்தேன்(முதல்ல உன் வீட்டுல ராஜ் டிவிய  கட் பண்ணனும்).

கார்த்திக் ஆவியா வருவாரு. ஆனா படம் முழுவதும் அவரோட டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். பிளைன் ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அப்டின்னு கலக்குவாரு. எனக்கு என்ன சந்தேகம்னா ஆவிகளுக்கு இவ்ளோ அழகழா டிரஸ் எங்க கிடைக்கும்.ஆவிங்க எங்க போய் டிரஸ் எடுக்கும்.

போத்திஸ்?
சென்னை சில்க்ஸ்?
சரவணா ஸ்டோர்ஸ்?

யாராவது என்னோட சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் - இப்படிக்கு ஆபீஸ்ல வேலை செய்யாம வெட்டியா இருப்போர் சங்கம்.

ஞாயிறு, அக்டோபர் 24

பதிவர்களின் பெயர்க்காரணம்

நம்ம பதிவர்கள் எதுக்காக தங்களது ப்ளாக்கில் புனை பெயர்களை தேர்ந்தெடுத்தனர் என்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு என் மூளையை உபயோகப் படுத்தி அது என்னவென்று கண்டுபிடிச்சிட்டேன்.

அட்ராசக்கை - ஸ்கூல் படிக்கும்போது ஓவர் சேட்டை. அவரோட வாத்தியார் அடி அடின்னு அடிச்சு அவரை சக்கையாக பிழிந்ததால் இந்த பெயர் வந்தது.

வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.

பன்னிக்குட்டி ராம்சாமி - இவர் பிறந்த போது அழகா இருந்ததாக ஒரு பாட்டி சொல்ல, குழந்தையில் பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும் என்று ராம்சாமி தாத்தா ஜோக் அடிக்க அதுவே பெயராகிப் போனது.

ப்ரியமுடன் வசந்த் - விஜய் நடித்த(???) ப்ரியமுடன் படத்தை பலதடவை பார்த்ததால் அதுவே பெயருடன் அடைமொழி ஆயிற்று.

வந்துட்டான்யா வந்துட்டான்யா- இவர் ஒரு இடத்துக்கு போகும்போது இவரது மொக்கை தாங்காமல் வந்துட்டான்யா வந்துட்டான்யா என்று மக்கள் அலறி அடித்து ஓடுவதால் இதுவே பெயரானது என தகவல்கள் கசிகின்றன.

மங்குனி அமைச்சர் - சின்ன வயசில் மங்கி மாதிரி அங்கும் இங்கும் அமச்சூர் தனமாக தாவியதால் மங்கி அமச்சூர் என்று பேர் ஆனது. அது நாளடைவில் மங்குனி அமைச்சர் என்று அவரது பெயர் மருவியது.

கோமாளி - எப்பவும் கோமாளி மாதிரி சேட்டை செய்து VAS சை மகிழ்விப்பதால் அந்த பேர் வந்தது.

இம்சை அரசன் பாபு - பெண்களிடம் போய் ஒரு இம்(முத்தம்) கொடு என்று கேட்டு அந்த பெண்கள் சை என்று திட்டியதால் இம்சை அரசன் பாபு என்ற பேர் வந்தது.

டெரர் - இவர் பிறந்ததும் அந்த ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர், நர்ஸ், ஆயா எல்லோரும் வேலையை விட்டுட்டு சாமியாரா போயிட்டாங்க. அந்த ஹாஸ்பிட்டலையே டெரர் ஆக்கியதால் இந்த பேர் வந்தது.

சூரியனின் வலை வாசல் - சூரியனுக்கு டார்ச் அடிக்கிரவங்களுக்கே சூரியனின் வாசலில் நின்னுக்கிட்டு டார்ச்சர் கொடுப்பதால் இந்த பேரு(யோவ் ரொம்ப புகழ்ந்திருக்கேன். பாத்து ஏதாவது பண்ணுங்க)

ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.

எங்கே செல்லும் இந்த பாதை - வீட்டிலிருந்து வரும்போது வீட்டு விலாசத்தை மறந்து விட்டதால் ரொம்ப காலமா வீட்டு விலாசத்தை தேடியதால் இந்த பேர் வந்தது.

டிஸ்கி 1: இந்த பதிவை படித்துவிட்டு பட்டபட்டி பதிவர் இல்லியா? அவரது பெயர்க்காரணம் ஏன் இல்லை என்று கேட்பவர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். தேன் பாட்டில் மீது சத்தியமா பட்டாப்பட்டி பதிவரே இல்ல. ஆமா.

பதிவுலகின் விடிவெள்ளி, பதிவுலகின் மக்கள் திலகம், பதிவுலகின் வெற்றி தளபதி, வீராதி வீரன், பராக்கிரமசாலி பட்டாப்பட்டி அவர்கள் பதிவர் அல்ல. அவர் ஒரு பிரபல பதிவர்.(ஹிஹி).

இனிமேல் யாராவது அவரை பட்டாப்பட்டி என்றோ பதிவர் என்றோ அழைத்தால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும். அப்புறம் நியூ வாட்டர் கொடுக்கப்படும். அவரை  பிரபல பதிவர் பட்டாப்பட்டி என்றே அழைக்க வேண்டும்.

டிஸ்கி 2: பதிவர் இல்லை என்று கூறியதால் யாருடைய மனதாவது புண் பட்டிருந்தால் புண் மீது தேன் தடவி தீபாவளிக்கு முன் புண்ணை ஆற்றிவிடவும். தீபாவளிக்கு சிங்கையில் வெள்ளைக்கொடி பறக்கும் என்ற ஆசையில் பறக்கத்துடிக்கும் ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா)!!

வியாழன், அக்டோபர் 21

மூளைக்கு வேலை - விடைகள்

டெரர் & பன்னிக்குட்டி சார் எங்க ஓடுறீங்க. மூளை இல்லாட்டியும் பரவாயில்லை. என்னை மாதிரி அறிவாளிங்ககிட்ட கேட்டுகூட நீங்க பதில் சொல்லலாம். அதனால பயப்படாம வாங்க.



கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன கண்டு பிடியுங்கள்.

1. இன்று முதல்
2. இந்தியன்
3. வானத்தை போல
4. மின்னலே
5. தெனாலி
6. சிதம்பர ரகசியம்
7. குரு சிஷ்யன்(ரஜினி, பிரபு நடித்தது)

சரியான விடை சொன்னால் உங்களுக்கு தீபாவளி கிரீட்டிங்க்ஸ் மெயிலில் அனுப்பப்படும்.

விடை: எல்லோரும் ஆவலா எதிர் பாத்திருப்பீங்க. அந்த சிதம்பர ரகசியம் என்ன? தெரியனுமா?

அட ஒன்னும் இல்லைங்க. இது எல்லாம் ராஜ் டிவில அடிக்கடி(ரொம்ப தடவ) போட்டு உயிரை எடுக்கும் படங்கள். படத்தை விட விளம்பரம் அதிகமா போடுற சின்னத்திரையில் வண்ணக் கோலங்கள் படைக்கும் ராஜ் டிவி. இதுதான் விடை. 

ஓகே இப்ப காறி துப்புரவுங்க அருணை துப்பலாம். அவர் ஏடா கூடமா சினிமா புதிர் போட்டதால்தான் இப்படி. எப்பூடி?

புதன், அக்டோபர் 20

பதிவர் ராஜன் & ரேவதி அவர்களுக்கு திருமண வாழ்த்துகள்


இன்னிக்கு(Oct-20) சாயந்தரம் ஆபீஸ் முடிஞ்சு கிளம்பும்போது சரியான பசி. கைல காசு வேற இல்லை. சரி யார்கிட்டயாவது கடன் கேப்போம்னு பாத்தா நம்ம மங்குனி அமைச்சர் நியாபகம் வந்தது. அவருக்கு போன் பண்ணி நைட் சாப்புடனும் செலவுக்கு பணம் கொடுங்க அப்டின்னு கேட்டேன்.

அமைச்சரும் பணக் கஷ்டத்தில்தான் இருந்தார் போல. யோவ், பதிவர் ராஜன், பதிவர் ரேவதி கல்யாணம் நாளைக்கு. இன்னிக்கு ரிசப்சன். அங்க போனா ஓசில சாப்பாடு கிடைக்கும் அப்டின்னார். சரி நமக்குதான் அந்த ரெண்டு பேரையும் தெரியாதே அப்டின்னேன்.

மங்குனி: யோவ் அவங்க ப்ளோக்ல போய் கடைசி ரெண்டு பதிவ படி. பதிவு போட்ட தேதிய நியாபகம் வச்சுக்கோ. அங்க மாப்பிளைய பாத்ததும் ஹலோ Mr ராஜன், உங்க பதிவுகள் எல்லாம் சூப்பர். அதுவும் கடைசி ரெண்டு பதிவு ரொம்ப நல்லா இருக்கு அப்டின்னு பதிவு பேரோட சொல்லு. முடிஞ்சது. 

என்ன இருந்தாலும் நம்ம அமைச்சர் ராஜ தந்திரங்களை கரைத்து குடித்தவராச்சே. சரின்னு கிளம்பி மண்டபத்துக்கு போயாச்சு. வால்பையனுக்கு போன் பண்ணினா அவர் ரூம்க்கு வர சொன்னார். அங்கே நம்ம பலா பட்டறை ஷங்கர், தமிழ் அமுதன், வால்பையன் இருந்தனர்.

அங்கிருந்து மண்டபத்துக்கு(சாப்பிட அப்டின்னு  சொல்லு) போனோம். அங்கே ஜாக்கி சேகர், டோண்டு,யுவகிருஷ்ணா, உண்மைத் தமிழன். அப்துல்லா வந்திருந்தனர். மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிட போனோம்(ம் வந்த வேலை முடிந்தது)

சாப்பிட்டதும் மங்குனி அமைச்சரை காணவில்லை. சரி வந்த வேலை முடிந்ததும் அமைச்சர் ஓய்வெடுக்க அரண்மனைக்கு போயிருப்பார். இரவு 10 மணிக்கு கே.ஆர்.பி.செந்தில் அண்ணா,கேபிள் ஷங்கர்,விந்தை மனிதன் வந்து சேர்ந்தனர். (அவங்களுக்கு சாப்பாடு கிடைச்சிருக்குமா?. சரி விடு நமக்கென்ன கவலை. நாமதான் சாப்டாச்சே).

ஒரு மினி பதிவர் சந்திப்பு நடந்தேறியது(பதிவர் சந்திப்புன்னாலே மழை வந்திடுது. சென்னைல இன்னிக்கும் காலைல நல்ல மழை. பதிவர் ஜானகிராமன் சொன்னது போல வருணபகவானும் ஒரு பதிவரா இருப்பாரோ? அவர் பதிவை கண்டு பிடிச்சு கும்முறோம்) என்ன பேசினோம்னு யாராச்சும் எழுதுவாங்க.

முக்கிய குறிப்பு:  இல்லற வாழ்வில் இணையும் நண்பர்கள் இருவருக்கும் என் அன்பான திருமண வாழ்த்துகள்

டிஸ்கி: காதை கொடுங்க. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என்கிட்டே யாரும் மொய் கேக்கல. எங்க மொய் கேட்டுருவாங்கன்னு பயந்து மங்குனி எஸ்கேப் ஆயிருபாரோ? இல்லை பார்சல் தரலைன்னு கோவமா? 
.
.

திங்கள், அக்டோபர் 18

எட்றா அருவாள

காலை 11 மணி:

டேய் பொருளை எடுங்கடா. அவ எங்க இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்குள்ள இங்க வந்தாகணும்.

காலை 11.30 மணி:

அடியாள்: பொண்ணு எங்க தேடியும் கிடைக்கலை.
பாஸ்: அந்த பையன் வீடு எங்கன்னு சொல்லு. நான் போறேன்.

மதியம் 12 மணி:

இடம்: பையன் வீடு.

பாஸ்: இங்க யாரடா ராஜுவோட அப்பா.
அப்பா: நான்தான்
பாஸ்: உன் பையன் என் பொண்ண இழுத்துட்டு ஓடிட்டான். தூக்குறேன். அவன உயிரோட விட மாட்டேன். டேய் அவனை கொன்னுட்டு என் பொண்ணை இழுத்துட்டு வாங்கடா.

மதியம் 12.30 மணி:

கண்ணனோட wife எனக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்குறா. அவ இருக்குற வரைக்கும் எங்க கல்யாணம் நடக்காது. இந்த பாட்டில்ல விஷம் இருக்கு. இதை அவளுக்கு கொடுத்து அவளை கொல்லுறேன் பாரு.

மதியம் 1.30 மணி: 

அந்த குடும்பம் உருப்படக் கூடாது. நாசமாப் போகணும். ஏதாச்சும் பண்ணி அந்த குடும்பத்தைப் பிரிக்கிறேன் பாரு.

மதியம் 2.30 மணி:

என்னை காதலிச்சுட்டு வேற கல்யாணம் பண்ணினா அவன விட்ருவனா? கல்யாணத்த நிறுத்துறேன். அவன நடுத்தெருவுக்கு கொண்டுவரேன்.

மாலை 6 மணி:

பாஸ்: என்னடா பொண்ணு கிடைச்சாளா?
அடியாள்: ஆமா. அவங்க கோயில்ல கல்யாணம் பண்ணிகிட்டாங்க. போலீஸ் வேற இருக்காங்க.
பாஸ்: சரி ஆனா அவங்களுக்குள்ள எதுவும் நடக்க கூடாது. அவன் கைய காலை உடைக்க பாருங்க.

மாலை 7 மணி:

இனிமே உன்னை என் புருஷன் கூட பார்த்தேன் மூஞ்சில ஆசிட் ஊத்திடிவேன்.

இரவு 8 மணி:

மாமியாரா அவ. கொடுமைக்காரி. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் அவ தலைல கல்லை தூக்கி போட்டுதான் கொல்லப் போறேன்.

இரவு 9 மணி:

என் மருமக சரியில்ல. அவல நடத்த கெட்டவ அப்டின்னு சொல்லி என் பையனுக்கு வேற கல்யாணம் பண்ணனும். அவ பொண்ணா. அவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

இரவு 10 மணி:

தம்பி: எங்க அண்ணனையும் அண்ணியையும் பிரிக்கணும். நல்ல ஐடியா குடேன்.
நண்பன்: ஏண்டா?
தம்பி: ஏன்னா நான் எங்க அண்ணிய லவ் பண்றேன்


டிஸ்கி: இருங்க, என்ன சொல்றீங்க. பொண்ணுங்க பயப்பட போறாங்களா? நீங்க வேற. மேல உள்ள நிறைய வசனங்கள் பொண்ணுங்க பேசுறதுதான். புரியலையா. காலைல இருந்து இரவு வரைக்கும் ஓடுற சீரியல்ல maximum இந்த வசனங்கள் மட்டும்தான் இருக்கும்.

எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல விஷயம் கூட பாத்ததில்லை. எவளாவது எவளையாவது பழி வாங்கிக்கிட்டுதான் இருக்கிறாள். எப்படித்தான் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பாக்குறாங்களோ. என்ன கொடுமை சரவணன் இது.....

சனி, அக்டோபர் 16

பிரபல பதிவர் ஜெட்லியின் அராஜகம்




நம்ம பிரபல பதிவர் ஜெட்லி பத்தி எல்லோருக்கும் தெரியும். படம் பார்க்க தியேட்டருக்கு போறாரோ இல்லியோ ஆனா பக்கத்து சீட்டுல எச்சி துப்பினவன், தியேட்டர் பாத்ரூம்ல தண்ணி ஊத்தாதவன் ,பாப்கார்ன் விக்கிறவன பத்தி விமர்சனத்துல கண்டிப்பா எழுதுறவரு.  ஆனால் அவர் தமிழ் பதிவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை ஏற்படுத்தி விட்டார். இதற்க்கு அவருக்கு மன்னிப்பே கிடையாது.


உலகமே ஆவலோடு எதிர்பார்த்த ஒரு மெகா ஹிட் திரைப்படம். பல வருடங்களாக எடுக்கப்பட்ட(எந்திரன் கூட ரெண்டு வருடம் தான். ஆனால் இந்தப் படம் கிட்டத்தட்ட பல வருடங்களாக எடுக்கப் பட்டது) உலகத் திரைப்படம்.


இந்தப் படத்தின் ஹீரோ சூப்பர் பாக்கு என்ற சிறப்பு அடைமொழி கொண்டவர். நாடே எதிர்பார்த்து காத்திருந்த அந்த மெஹா ஹிட் படம் மக்களின்  பேராதரவில் நேத்து உலகமெங்கும்(!@!@!@!@) வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட ஏப்பிரல் மாதத்திலிருந்து முன்னுரை, முதலுரை எழுதி மக்களுக்கு அந்த படத்தை பத்தின விழுப்புணர்வு ஏற்றிய ஜெட்லி அவர்கள் அந்த படத்தின் விமர்சனம் எழுதாமல் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். 


அந்த படம் மிகவும் மரியாதைக்குரிய படம். பெரியவங்க அந்த படம் பேர் என்ன என்று உங்ககிட்ட கேட்டா அந்த படம் பேரு சொன்னீங்கன்னா மிகவும் மரியாதையாக இருக்கும். ஆமாம்.அந்த படத்தின் பெயர் வாடா. சூப்பர் பாக்கு தல சுந்தர் சி நடித்த(%%%^^) மெஹா ஹிட் திரைப்படம். 


அந்த படத்தை பற்றின விழிப்புணர்வுக்கு இந்த பதிவுகளை படியுங்கள்:  

வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!

 

வாடா....!! <--GET READY FOLKS -->

 

தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம். ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்(ஒரு வேளை  படம் பாக்க வந்தவங்க யாருன்னு தெரிஞ்சிக்க வந்திருப்பாங்களோ). இவ்வளவு ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதற்க்கு விமர்சனம் கூட எழுதாத ஜெட்லி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்(ஒரு வேலை டிக்கெட் கிடைச்சிருக்காதோ). இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிறை குறைகளை(குறைகளா அப்டி ஏதும் இந்த படத்துல இல்லியே) இந்த பதிவில் போய் படித்து சுவற்றில் முட்டிக் கொள்ளலாம்(பதிவை படித்து இல்லப்பா, படத்தப் பத்தி தெரிஞ்சிகிட்டு)

 

இந்த படத்தின் விமர்சனம் எழுதும் வரை அவரது ப்ளாக்கில் வேறு பதிவு போடக்கூடாது என பகிரங்கமாக எச்சரிக்கிறேன். மீறி வேறு ஏதாவது பதிவு  போட்டால் அவரது ப்ளாக்கில் வாடா பட போஸ்டர்கள் தாறுமாறாக ஒட்டப்படும் என மிரட்டல் விடுக்கிறேன். மேலும் அவர் என்னிடம் பேசிய சாட் ரெகார்டை போரமிலும் வெளியிடுவேன் என்று கூறிக் கொல்கிறேன். ஜெட்லியின் அராஜகம் ஒழிக.

..............

 

 

வியாழன், அக்டோபர் 14

எதிரொலி - சிவாஜி தி பாஸ்

நேத்து நைட் வீட்டுல low voltage . அதனால கம்ப்யூட்டர் வேலை செய்யலை. சரின்னு ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப நேரம் டிவி பாக்க வேண்டிதாப் போச்சு.  அம்மா சீரியல் பாத்துக்கிட்டு இருந்தாங்க. நீங்க நாளைக்கு நெட்டில பாருங்கன்னு சொல்லிட்டு(என்ன ஒரு ஆணாதிக்கம்) டிவி பார்க்க ஆரமித்தேன்.

சிரிப்பொலி சேனலில் எதிரொலி அப்டின்னு ஒரு பழைய படம் போட்டாங்க. படம் நல்லாத்தான் இருந்தது. அதுல சிவாஜி ஒரு ஏழு கட்டளைகள் அடங்கிய போர்டு ஒன்னை அவர் குழந்தைக்கு கொடுப்பார். அவர் அதை எப்படி மீறுகிறார் என்பதுதான் கதை.

1. பொய் சொல்லாதே
2. கயவர்கள் சகவாசம் கூடாது
3. ஆத்திரம் கொல்லாதே
4. திருடாதே
5. கடமை தவறாதே
6. கடவுளை வெறுக்காதே 
7. கொலை செயாதே

இதெல்லாம் நம்ம பதிவர்களுக்கு எப்படி செட் ஆகும்ன்னு பாக்கலாம்.

1. பொய் சொல்லாதே:

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும்.


2. கயவர்கள் சகவாசம் கூடாது


பன்னிக்குட்டி, மோகன், முத்து, டெரர், இம்சை  - இவங்களோட சகவாசம் இல்லன்னா நம்ம பதிவு எப்படி பிரபலம் ஆகும். இவங்களே பிரபலம் ஆக்கிடுவாங்க.


3. ஆத்திரம் கொல்லாதே


அப்டின்னா இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு கொல்றவங்க, டாக்டர் விஜய் பத்தி தப்பா பேசுறவங்க, புனைவு எழுதுறவங்க, மீள் பதிவு போட்டு மறுபடியும் அதே பதிவை படிக்க சொல்றவங்க எல்லாரையும் லவ்வா பண்ண முடியும். 


4. திருடாதே


இந்த மாதிரி பண்றவங்க, இந்த மாதிரி  பண்றவங்க இவங்களை எல்லாம் என்ன பண்றது. என்னை மாதிரி அறிவாளிங்க சுயமா சிந்திச்சு(!!!!@) எழுதினா அதை திருடி வேற எங்கயாவது எழுதிடுறாங்க.


5. கடமை தவறாதே


ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு எங்க வேலை பாக்க விடுறானுக. வேலை  பாக்கும்போதுதான் போன் பண்ணி புது போஸ்ட் போட்டிருக்கேன், சீக்கிரம் படி அப்டிங்கிராங்க. இல்லைன்னா இங்க வா போய் கும்மலாம்ன்னு கூப்டு போயிடுறாங்க. வோட்டு, கமெண்ட் போட சொல்லி மிரட்டுறாங்க அய்யா(அஜித் ஸ்டைல்ல படிங்க)


6. கடவுளை வெறுக்காதே


டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும்.



7. கொலை செய்யாதே 

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும்.  சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.

டிஸ்கி: அதனால இந்த ஏழு கட்டளைகள் பதிவர்களுக்கு சத்தியமா பொருந்தாது. அதனால் போய் வேற வேலையைப் பாருங்க. இது முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

புதன், அக்டோபர் 13

IT Engineer-ரின் கோபமான இரவு


grrrrrrrrrrrrrrrrrr. ஹலோ ஹலோ . என்கிட்டே பேசு. ஏன் போன் எடுக்க மாட்டேங்குற? எத்தன தடவ போன் பண்றது.

“everything is alright?”

என்னத்த alright. மணி நைட் 11 ஆகுது. இப்பத்தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன். இன்னும் சாப்பிடலை. இனிமேதான் சமைக்கணும். மூணு வாரமா மேகி மட்டும்தான் சாப்புடுறேன். இப்படியே போனா ஸ்பைடர் மேன் மாதிரி உடம்பெல்லாம் நூலா மாறிடும். மேகி வேற ரெண்டு ரூபாய் விலை ஏறிடுச்சு. சம்பளம் மட்டும் கூடவே இல்லை. என்னோட ஆபீஸ் வாசல்ல பிச்சை எடுக்குறவன் கூட நிறைய சம்பாதிப்பான். 

“wat happen.. wat r u talking”

What I am talking.  மேனேஜர் யாரையம் கிளையன்ட் கிட்ட பேச விடுறதே இல்லை. மூணு மாசமா எனக்கு லீவும் கிடைக்கலை. லீவ் கேட்டு மேனேஜர் கிட்ட பிச்சை எடுக்குறேன். அவன்கிட்ட இருந்து ஒரு பதிலும் இல்லை. ஏன் என்னோட டைம் வேஸ்ட் பண்றீங்க. I m gonna quit this project… but, i cant. no, i can.. but i wont..

“ok.. now Relax…”


ங்கொய்யால என்னத்த ரிலாக்ஸ் பண்றது. எல்லாரும் ரிலாக்ஸ் பண்ண யோகா போவாங்க. நைட் 11 மணிக்கு ஆபீஸ் விட்டு வந்து எங்க யோகா பண்றது. டிவி பாக்கலாம்னு பாத்தா நைட் 11 மணிக்கு "சேலம் சித்த வைத்தியர்", "ராசிக்கல் மோதிரம்", "அரோகரா", மாரியாத்தா", "பொய்யான நியூஸ்" இதான் ஓடுது. இல்லைனா KTV ல மொக்கை படம் போடுரானுக. 


எந்திரன்ல ரஜினிக்கு opening பாட்டு வைக்கவே இல்லை. சந்தானம் கருணாஸ் காமெடி வேஸ்ட். ரோபோ லோ பேட்டரில மயங்கி விழுந்துடும். சார்ஜ் இல்லைனா அதுவா எழுந்து எப்படி சார்ஜ் போட்டுக்கும்.3 Idiots படத்துல .......


“hey stop it now..”

நான் என்ன ட்ரெயினா ? செயின் பிடிச்சி நிப்பாட்ட போறியா? oh Train!!!பாத்து மூணு மாசம் ஆகுது. எப்படி பாக்க முடியும். என் முன்னாடி எப்பவும் கம்ப்யூட்டர் மானிடர் தான் இருக்கு. கண்ணை மூடினா "Username & Password" தான் வருது. எப்பபாத்தாலும் இங்க வீட்டுல கரண்ட் போயிடுது. நான் வீட்டுல இல்லைன்னா மட்டும் கரண்ட் இருக்குது.எப்படித்தான் இவனுகளுக்கு தெரியுமோ?


எனக்கு ஒரு girl friend வேணும். ப்ரீத்தி, சமிதா, ரேஷ்மி, ஸ்வேதா இவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு. ஏன் தெரியுமா. அவங்க boy Friends எல்லாம் IT ல இல்லை. வேற பொண்ணுங்களும் என்கூட சாட் பண்றதில்லை(சம்பள நாளை தவிர). நான் 31 முறை ரிஜக்ட் ஆனவன். ஏன் தெரியுமா. நீ எங்க தங்கிருக்கன்னு கேட்டா "நான் என்னோட ஆபீஸ்ல என்னோட cabin ல தங்கிருக்கேன்னு சொல்லுவேன்". ஏன்னா என்னோட வாழ்க்கைல முக்கால்வாசி நேரம் அங்கதான இருக்கேன். மேனேஜர் நாயி என்னை வீட்டுக்கு போக விட்டாதான. 


“hey man, u better take rest, we will talk in Morning”

morning??? இந்த சூரியன் எல்லாம் உதிக்குமே? சேவல் கூவுமே. குயில்கள் பாடுமே. அதுவா? மூணு வருஷம் ஆச்சு சூரியனை பாத்து. நைட் 11 மணிக்கு வீட்டுக்கு வரேன். காலைல 4 மணிக்கு மேனேஜர் ஆபீஸ்-க்கு வர சொல்லிடுறான். பின்ன எங்க பாக்குறது?

கூட வொர்க் பண்றவன்கிட்ட என் வேலையை  சேர்த்து பாருடான்னு சொன்னா "மச்சி என் தங்கச்சி கல்யாணம். கொஞ்சம் பிஸி" அப்டிங்கிறான்.

என் கூட வேலை பாக்குறவனோட 9 தங்கச்சிங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. எட்டு தடவை தாத்தா செத்துட்டாரு. பத்து தடவை அவன் நண்பனை ICU-ல அட்மிட் பண்ணிட்டாங்க. ஆனா அவனுக்கு மட்டும் ஒன்னும் ஆகமாட்டேங்குது. 

அவனோட Favorite Dialog "என் பிரண்ட இப்பதான் ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு வந்தேன். அவனுக்கு உடம்பு சரி இல்லை". ஆனா அவன் பர்சுல movie டிக்கெட் இருக்கும்.

என்னோட மேனேஜரோட motivation speech என்னன்னா   "u will work.. u will grow". இதுக்கு அர்த்தம் என்னனா ஒழுங்கா வேலை செய்யலைன்னா பிச்சிபுடுவேன் பிச்சு. Hike வேணுன்னு கேட்டா நீ ஜூனியர், கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு அப்டின்னு சொல்லுவான். ஏதாச்சும் தப்பு பண்ணிட்டா நீ சீனியர் ஒழுங்கா பாத்து பண்ண வேண்டாமா அப்டின்னு கேப்பான். 
மேனேஜர் மனச புரிஞ்சிக்க உலகத்துல எவனும் கிடையாது. அதுக்கு கடவுள் கிட்ட தனி பவர் கேட்கணும். 


“ok enough now, i m disconnecting”

நான்தான் உனக்கு போன் பண்ணினேன். இன்னிக்காவது பேச விடு. எனக்கு பேசுறதே மறந்திடுச்சு. நான் தினமும் பேசுற வார்த்தைகள் "‘yaa its done’, ‘e-cube is filled’, ”Please..’, ‘good morning’, ‘lunch’,'tea’,’snaks’, அவ்ளோதான். 

உனக்கு  ஒண்ணு தெரியுமா. 2020 ல உலகம் அழியுமாம். ஆனா என்னோட cabin மட்டும் அழியவே அழியாது. ஏன்னா  "that’s not part of earth.. and we are employees not human beings… we are aliens "."I will again start my day tomorrow like i m starting everyday.. good night ".

மறுநாள் ஆபீஸில்:

மேனேஜர்: டெரர்  இங்க வா..

டெரர்: சொல்லுங்க சார்

மேனேஜர்: உனக்கு ஒரு வாரம் லீவ் அப்ரூவ் பண்ணிருக்கேன். என்ஜாய் பண்ணு. "have a fun".

டெரர்: (தனது Dialled call list பாத்துட்டு) Oh My God. நேத்து தண்ணிய போட்டுட்டு மேனேஜர்க்கா கால் பண்ணினேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... 

டிஸ்கி : இந்த பதிவை பாத்துட்டு டெரர் IT Engineer , புத்திசாலி அப்படின்னு யாராவது ஏமாந்தா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.





செவ்வாய், அக்டோபர் 12

போரமா! போர் நடக்கிற இடமா? - Tamilbloggers Forum

Tamilbloggers Forum. தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் இதை பத்தி தெரியும் என நினைக்கிறேன். நல்ல விசயங்களை பதிவர்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காக நண்பர்களால் ஆரமிக்கப் பட்டது. ஆரம்ப காலங்களில் சில நல்ல தகவல் பரிமாற்றங்கள் நடந்தது.

அப்புறம் அதுவே கும்மி அடிக்கும் இடமாக மாறியது(இதில் நானும் ஒருவன்). இதனால் சிலர் மனம் வருத்தப் பட்டனர். மூத்த பதிவர்களின் அன்பு தம்பி, நம் எல்லோரையும் வழி நடத்தி செல்லும் அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார். அவர் போரமிலிருந்து  வெளியில் போக நானும் ஒரு காரணம் என்பதில் வெட்கப் படுகிறேன்.

யாரும் கேட்கவில்லை. கும்மி தொடர்ந்தது. கடுப்பான அவர் போங்கடா நீங்களும், உங்க போரமும் அப்டின்னு சொல்லி "தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்" அப்படின்னு ஒரு பதிவை போட்டு விட்டு போரமை விட்டு வெளியேறி விட்டார்.

அப்புறம் சில பதிவர்களும் கிளம்பி விட்டனர். தகவல் பரிமாற்றம், கும்மியை தொடர்ந்து இப்போது போரம் வந்து நிற்கும் இடம் போர்க்களம். தினம் தினம் சண்டைகள். எதுக்கு சண்டை,ஏன் அப்டின்னெல்லாம் கேட்கக்கூடாது(யாருக்கு தெரியும்). இவன் என்னை அடிச்சிட்டான், இவன் என்னை கிள்ளிட்டான். முதல்ல அவன்தான் என்னை கெட்ட வார்த்தைல திட்டினான் அதற்க்கு என்கிட்டே ஆதாரம் இருக்கு(அவனவன் ஆகாரம் இல்லாமல் இருக்கிறான்).

முதலில் நண்பர்களாக இருக்கும் இருவர் சாட்டில்  தகவல்களை பரிமாறிக்கிறாங்க. அப்புறம் சண்டை வந்ததும் அவனோட சாட் ரெகார்ட் என்கிட்டே இருக்குன்னு சொல்லி அவரோட சாட்டை(மானம் மரியாதையும்தான்) போரம் என்கிற கப்பலில் ஏத்தி விடுகின்றனர்.

அவர் பதிலுக்கு வேற ஒரு புனைவு கதை எழுதுகிறார். நாம உலகத்த திருத்தவா பதிவு எழுதுறோம். வந்தோமா ஜாலியா கும்மி அடிச்சமா, போனமான்னு இல்லாம ஏன் ஸ்கூல் பசங்க மாதிரி இவ்ளோ சண்டை.

எனக்கு நிறைய நண்பர்கள் இந்த ப்ளாக் மூலமாகத்தான் கிடைத்தார்கள். எவ்வளவோ உதவிகளை ஒரு பிளாக்கர் இன்னொரு பிளாக்கர்க்கு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த போரமில் தினமும் 50-100 mails கண்டிப்பாக வரும். அனைத்தும் சண்டை போட்டுதான். ஒரு சில mails விதிவிலக்கு.

ஒரு ஜோக் உண்டு. "இங்கு சுவற்றில் எழுதாதே" அப்டின்னு ஒருத்தன் போர்டு வச்சானாம். அங்க வந்த ஒருத்தன் "சரி இனிமே எழுத மாட்டோம்" அப்டின்னு பெருசா எழுதிட்டு போனானாம்.

அது மாதிரி, நான் ஒரு மெயில் போரமில் அனுப்பினேன் "இது போரமா! போர் நடக்கிற இடமா?" அப்டின்னு. அங்கு வந்தும் அவன்தானா முதல்ல அடிச்சான். அவன நிப்பாட்ட சொல்லுங்கன்னு, நான் நிறுத்துறேன் அப்டின்னு reply மெயில் வருது. எங்க போய் முட்டிக்கிறது.

சண்டைய நிறுத்துங்கன்னு கேட்டா, முடியாது வேணும்னா உங்க மெயில் option மாத்திக்கோங்க அப்டின்னு சொல்றாங்க. அது என் விருப்பம். அப்டின்னா சண்டை போடுவது எங்கள் விருப்பம்ன்னு சொல்றீங்களா? போரம் நீங்க சண்டை போட ஆரமிச்சதில்லைங்கோ. உருப்படியா சில தகவல்களை பரிமாறிக்கத்தான்.

எல்லோரும் வந்துபோகுமிடம் அது. நீங்க சண்டை மட்டும் போடும் இடம் இல்லை.வேணும்னா தனி மடலில் போய் சண்டை போடுங்கள். யார் கேக்க போறா?

சரி ஏதாவது பண்ணுவோம்னு நானும், மங்குனியும் பேசி, மச்சி நீ என்னை திட்டுற மாதிரி திட்டு, நான் அழுவுற மாதிரி அழுவுறேன் அப்டின்னு போரம்ல போய் சண்டை போட்டோம். அதுக்கப்புறமும் போரமில் 5-10 சண்டை மைல்ஸ் வந்து விட்டது. மச்சி விடு இது வேலைக்ககாதுன்னு நிப்பாட்டிடோம்.

எனக்கு சில கேள்விகள்:

- அப்படி என்னதான் பிரச்சனை  உங்களுக்கு? நாங்களும்தான் ப்ளாக் எழுதுறோம். நண்பர்களை பயங்கரமா கலாய்க்கிறோம். நாங்களும் புனைவு எழுதுறோம்(ஜாலியா). பிரச்சனை தானா வர்றதில்லை. நாமதான் தேடிக்கிறோம்.

- எப்பதான் உங்க சண்டைய முடிப்பீங்க? அடுத்த election குள்ள? உலகம் அழியுரதுக்குள்ள?

- பெண் பதிவர்கள் கிட்ட தப்பா பேசினான், போட்டோவ எல்லோருக்கும் கொடுத்துட்டான் அப்டின்னு நிறைய மெயில் வருது. எவ்ளோ கட்டுரைகள் படிக்கிறோம். முன் பின் தெரியாத இடத்துல உங்க informations-ச பரிமாறிக்காதீங்கன்னு. நம்ம வீட்டு குழந்தைகளுக்கும்  நாம அட்வைஸ் பண்றோம். பின்ன நாம ஏன் எச்சரிக்கையா இருக்க கூடாது?

- போரமில் எப்பதான் இந்த சண்டை முடிந்து நல்ல விசயங்களை பரிமாறிக் கொள்வீர்கள்?

- தயவு செய்து மெயில் Option மாத்திகோன்னு சில்லியா பதில் சொல்ல வேண்டாம். 

பின் குறிப்பு: என்னால் இன்னும் இந்த போரமில் நீடிக்க முடியாது. Moderator யாராக இருந்தாலும் போரமில் இருந்து எனது பேரை வெட்டி பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். அங்காவது நிம்மதியாக இருப்பேன். இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்சநாளில்யாருமே இல்லாத டீக்கடையில்தான் நீங்க டீ ஆத்த வேண்டிதிருக்கும்.

டிஸ்கி1: எனக்கு உங்கள் யார் மீதும் கோபமில்லை. எனது பதிவை ரெண்டு நாளாக படிக்காத டெரர் அண்ணன், புரியாத மாதிரி எழுதும் தேவா அண்ணன், என்னை கலாய்க்கும் வெங்கட், மொக்கை போடும் செல்வா,லேட்டாக கமெண்ட் போடும் சௌந்தர்,அருண் மற்றும் இம்சை  அவர்கள் மீது கோவப்பட்டு எழுதிய பதிவுதான் இது. என் கோவம் அவர்கள் மீதுதான்.

டிஸ்கி2:இந்த பதிவை பார்த்து என்னை பத்தி யாராவது புனைவு எழுதினால் நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி, மங்குனி அமைச்சர் அவர்கள் தலைமையில் தினமும் மூணு வேளை அஞ்சப்பரில் பிரியாணி தின்னுவிட்டு சாகும் வரை வீராசாமி மற்றும் மேதை படம் பார்ப்பேன் என கூறிக் கொல்கிறேன்.

டிஸ்கி2: டெரர்,தேவா,பன்னிகுட்டி,சௌந்தர்,இம்சை,அருண்,மங்குனி, வெங்கட் மற்றும் செல்வா- மாட்டுனீங்களா. உங்களையும் கோர்த்துவிட்டுடேன். ஐ.

ஞாயிறு, அக்டோபர் 10

அறிவுப் போட்டி - 1

ராணி முத்து அப்டிங்கிற புத்தகத்துல அறிவுப் போட்டி அப்டின்னு ஒரு பகுதியப் பார்த்தேன். ரொம்ப புத்திசாலித்தனமான கேள்விகள் எல்லாம் அதுல இருக்கு. IAS, IPS படிக்கிறவங்க கூட அதுக்கு விடை சொல்றது ரொம்ப கஷ்டம். ஆனா நம்ம பதிவுலக நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள்(???!!!$). அதனால இனிமேல் உங்களுக்காக இந்த மாதிரி அறிவுப் போட்டி நடத்தலாம்னு இருக்கேன்.



சரியாக பதில் சொல்லுபவர்கள் சில்வர் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். பதில் சொல்லும்போது அதுக்கான காரணமும் சொன்னால் கோல்டன் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். முதல் போட்டி என்பதால் இது பதிவர்கள் ஸ்பெஷல்.

1. பதிவு எழுத தேவையானது..................................இன்டர்நெட்/ப்ளாக் 

2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை
 
3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்
 
4. பதிவுகளில் கும்முவது..................................................ஆஹா அருமையான வாய்ப்பு/அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?

5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது........சின்னப்புள்ள தனமா இருக்கு/பிச்சுபுடுவேன் ராஸ்கல்
 
6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது.

7. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்......................................ஆபீஸில்  வேலைகளுக்கு நடுவே/வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.
 
8.போரமில் இவன் என்னை அடிச்சிட்டான்னு, என்னை கிள்ளிட்டான்னு சண்டை போடுவது .......................... அடுத்தவன் இன்பாக்ஸ் நாசமா போனா நமக்கென்ன/வேலை வெட்டிய விட்டுட்டு நானும் போரமில்  சண்டை போட்டு புனைவு எழுதுவேன்.


9. நிறைய ஓட்டு வாங்க ................................ fake id / அடுத்தவங்கள டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொல்வது.

வெள்ளி, அக்டோபர் 8

சூப்பர் ஹீரோ


ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்(யாருப்பா அங்க சிரிக்கிறது). அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே.

- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார். நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.

- தேவா படத்துல கூட பிறந்தவன் தப்பு பண்ணினா கூட தட்டி கேக்கனும்னு சொன்னவர். நீதி: மக்களுக்கு முன் குடும்பம் கால் தூசி.

- ரசிகன் படத்துல ப்ளாக் டிக்கெட் விக்கிறவன் கூட ஏழைதான். அவனையும் ஆதரிக்கனும்ன்னு ப்ளாக் டிக்கெட் வாங்கி காதலியோட படத்துக்கு போவார். நீதி: ஏழைகளுக்கு உதவ வேண்டும்.

- விஷ்ணு படத்துல சங்கவிய பத்திரமா அவங்க வீட்டுல போய் சேர்ப்பார். நீதி: பெண்கள் நம் நாட்டின் கண்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்.(கில்லி கூட)

- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார். நீதி: வேலை இல்லைனா நண்பன் பீல் பன்னுவானேன்னு நண்பனுக்காக உண்மையை மறைத்தவர்.

- நினைத்தேன் வந்தாய் படத்துல அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் கொள்கையை அப்பவே கடை பிடித்தவர். நீதி:  ஜனாதிபதி  சொன்னதை அப்பவே கேட்டிருக்கார்.

- புதியகீதை. நீதி: பைக் சைடு stand போட்டு ஓட்டினால் ஆபத்து.

- புதியகீதை. நீதி:ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.

- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.

- தமிழன். நீதி: ஐந்து பைசாவானாலும் நம்ம காசானால் திரும்பி கேட்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டிய படம்.

 - யூத்: நீதி: செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வலியுறித்திய படம்.

- சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர்.

இன்னும் நிறைய இருக்கு. இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் அப்பாலிக்கா வரேன்.இனிமே யாராவது அவரை கலாய்த்தால் அப்புறம் நானும்............................

 

வியாழன், அக்டோபர் 7

ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு

எந்திரன் படம் மெஹா ஹிட்டாகி ஓடிக்கிட்டு இருக்கு. மக்கள் அனைவரும் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. ஆனா டிக்கெட் காசு அதிகம் கொடுத்து பாத்திருப்பீங்க. அதனால செலவுக்கு காசு கம்மியாத்தான் இருக்கும். அதனால உங்களுக்கு குறைந்த விலையில ஒரு offer கொடுக்குறோம்.

எந்திரன் பட போஸ்டர் (10,15,20,25......1000 ) வது நாள்கள் வரை ஒட்டுவதற்காக நம்ம ஜெய் அண்ணன் அவர்கள் பிஸி. அதுக்கப்புறம் அடுத்த சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் ஒட்ட போய் விடுவார். அதனால் அவரது ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு  வருகிறது.


Offers :

- இலவச கீரிப்பிள்ளை ஷோ.
- உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார்  
- பன்னிகுட்டியின் டான்ஸ்
- ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..
- மங்குனியின் கவிதை(மவனே இனிமே கவிதை எழுதுவ)
- மொரிசியசில் எந்திரன் படம் பார்க்க டிக்கெட்(விமான செலவு, தங்குமிடம் அருண் கொடுப்பார்)
- தேவாவின் தமிழ் கருத்தரங்கம்
-இம்சை அரசன் பாபுவின் இம்சைகள்

முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்.

புதன், அக்டோபர் 6

புரியாத புதிர்

அமெ காசு வரெஉ படல ந்மேர்ட்
அட ப்க்ப் எருஅ
ச்ட்ப்க் ரெட் பிட்ச்க்ப்
சர்ட் பாப் யுவர் வ்வேர்ர்ட்
சா சீ சூ வர்ட் நடுக்
அப்ப ள்ளிக்கு வாஎ மார்தட்
கண் ஏச்ட்ச்ப் தசப் பாப்
சடப் ஊப் ப்பசச்த்
க்ப்ஜயுக் அட்ச்த் அசாஸ்

என்னது ஒண்ணுமே புரியலையா. பிச்சுபுடுவேன். அப்டின்னா  கீழே உள்ள இந்த பதிவுகளுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சுதான் கமெண்ட் போட்டீங்களா. இந்த பதிவுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க பாப்போம்!!!


இதுக்கெல்லாம் அர்த்தம் கேக்காம ஓட்டு & கமெண்ட் போடுவீங்க. ஆனா நான் எழுதினா மட்டும் அர்த்தம் கேப்பீங்களா?சின்னப்புள்ளதனமா இல்லை?  நம்ம பதிவுலக பிரம்மா அண்ணன் தேவா அவர்களின் பதிவுக்கு இதுவரைக்கும் யாராவது கோனார் நோட்ஸ் கேட்டுருக்கீங்களா?

சரி விடுங்க. இன்னிக்கு(7th October) பிறந்தநாள் காணும் புரியாத புதிர், தமிழ் காவலன், பதிவுலக தமிழ் மேதை, செம்மொழி புலவர் தேவா அண்ணன் மென்மேலும் புரியாத பதிவுகளை எழுதி நம்மை கொல்லுமாறு,சீ நம்மை சந்தோசப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!!!(07-oct-1900)





செவ்வாய், அக்டோபர் 5

தமிழ் வாத்தியார் மக்கள் நாயகன் ராமராஜன்


நம்ம மக்கள் நாயகன் "தர்மன்" அப்டின்னு ஒரு படம் ஆரமிச்சார். படம் பாதிலயே நின்னு போச்சு. அப்புறம் மேதை படம் முடிஞ்சது. ரிலீஸ் பணலாம்னு பாத்தா திடீர்ன்னு ரஜினி சார் வந்து ராமராஜன் உங்க படம் ரிலீஸ் ஆனா எந்திரன் படத்துக்கு கூட்டம் வராது. அதனால நீங்க கொஞ்சம் லேட்டா ரிலீஸ் பண்ணுங்க அப்டின்னு சொல்லிட்டார்.

சரி மேதை காவியம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் நாம போய் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கலாம்னு நம்ம மக்கள் நாயகன் ஸ்கூல்ல தமிழ் வாத்தியாரா சேந்துட்டாரு. அவர் எப்படி தமிழ் சொல்லி கொடுத்தாருன்னு பாக்கலாமா?


அ- அம்மா. மாடு இப்படித்தான் கத்தும்.

ஆ- ஆடு. மாடு மாதிரியே ஆடும் பால் கொடுக்கும். புல்லு தின்னும்.

இ- இலை. மாடு இலை தழைகளை நன்றாக உண்ணும்.

ஈ- ஈ. மாட்டு மேல உன்னி வந்துட்டா அது உடம்புல ஈ முய்க்க ஆரமித்து விடும்.

உ- உடுக்கை. பூம் பூம் மாட்டுக்காரன் உடுக்கை அடித்து மாட்டை வைத்து வித்தை காட்டுவான்.

ஊ- ஊரு விட்டு ஊரு வந்து படத்துல எனக்கு மாட்டோட ஒரு காம்பினேசனும் இல்லை. ஏன்னு டைரக்டர் கிட்ட கேட்டா நீங்களே மாடு மாதிரிதான இருக்கீங்க. அது வேற எதுக்குன்னு சொல்லிட்டார்.

எ- எருமை மாடு. இது சோம்பேறியான மாடு. மிகவும் மெதுவாக நடக்கும்.

ஏ- ஏலக்காய். பசு மாட்டு பால்ல ஏலக்காய் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

ஐ- ஐயம். ஐயம்னா சந்தேகம். உங்களுக்கு மாடுகளை பத்தி ஏதாச்சும் சந்தேகம்னா என்கிட்டே கேளுங்க.

ஒ- ஒட்டகம். இதுவும் மாடு மாதிரியே ஒருவகையான விலங்கு.

ஓ- ஓட்டம். மாட்டு வண்டி ஓட்டம்னா (பந்தயம்) என்னை ஜெயிக்க எவனுமே இல்லை.

ஓள -ஓளவயார். இவர் கைல ஒரு கம்பு வச்சிருப்பார். மாடு மேய்க்கும்போது அந்த மாதிரி கம்பு இருந்தாதான் சரியா மாடு மேய்க்க முடியும்.

சரி குழந்தைகளே இன்னிக்கு உயிர் எழுத்து பத்தி சொல்லி கொடுத்தேன். நாளைக்கு மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்துகள் பத்தி பாப்போம். ஓகே?

உங்களை கெஞ்சி கேட்டுகிறேன். நாளைக்கும் கிளாஸ்க்கு  வந்துடுங்க. ப்ளீஸ்

சனி, அக்டோபர் 2

எந்திரன் சலுகைகளும் தண்டனைகளும்


எந்திரன் படம் ரிலீஸ் ஆகி பரபரப்பா ஓடிகிட்டு இருக்கு. ஆனாலும் சில பேரு படம் பாக்க மாட்டேன்னும், சிலர் திருட்டு டீவீடி லதான் பாப்பேன்னும் சொல்லிக்கிட்டு அலையுறாங்க. அதனால நம்ம அரசாங்கம் எந்திரம் படம் பாத்தவங்களுக்கு சில சலுகைகளும் பாக்காதவங்களுக்கு சில தண்டனைகளும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க.

சலுகைகள்:

1. டாஸ்மாக்கில் ஒரு குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம். (ரெண்டு தடவை பார்த்தால் ஆப் இலவசம்)
2. உங்களுக்கு மட்டும் சன் டிவில சன் picture படத்தோட tailor தெரியாம நிம்மதியா இருக்கலாம்.
3. 10th, +2 மாணவர்களுக்கு பப்ளிக் எக்ஸாம் கிடையாது. +2 மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துக்கலாம்.
4. Employment Office  ல வேலைக்கு பதிவு பண்ண தேவை இல்லை. எந்திரன் டிக்கெட் date priority படிதான் இனிமே வேலை கிடைக்கும். சீக்கிரம் போய் படத்த பாருங்க.
5. Election டைம் ல ஒரு ஓட்டுக்கு டபுள் அமௌன்ட்.
6. பதிவர்களுக்கு பதிவெழுத இலவச இன்டர்நெட்.
7. 50 தடவை படம் பார்த்தவர்களுக்கு நமீதா தலைமையில் பாராட்டு விழா.
8. டாக்ஸ் கட்டும் கனவான்களுக்கு வரி விலக்கு.
9. அரசாங்க வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
10. நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் பதிவுக்கு கள்ள ஓட்டு போட்டு உங்கள் பதிவு பிரபலம் ஆக்கப்படும்.


தண்டனைகள்:

1. ரேசன் கார்டு கிடையாது.
2. டாஸ்மாக்கில் சரக்கு தரப்பட மாட்டாது.(பன்னிகுட்டி ராம்சாமி கவனிக்கவும்)
3. டாக்ஸ் கட்டும் கனவான்களுக்குஇரட்டை வரி வசூலிக்கப் படும்.
4. விஜய் நடித்த அடுத்த படம் ஹிட் ஆகும் வரை அவர் நடித்த படங்களின் டீவீடி  வழங்கப்படும்(கண்டிப்பா பார்த்தே ஆகணும்).
5. பறவை முனியம்மா தலைமையில் பாராட்டு விழா எடுக்கப்படும்.
6. பதிவர்களாக இருந்தால் மைனஸ் ஓட்டு போட்டு உங்கள் பதிவு முடக்கப் படும்.
7. அரசாங்க வேலை வாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை.
8. இனி வரும் சன் பிக்சர்ஸ் படம் அனைத்துக்கும் உங்க சொந்த செலவில் போஸ்டர் ஒட்ட வேண்டும்.
9. டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்.
10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்.

இனி யாராவது எந்திரன் பாக்காம இருப்பீங்க...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது