Horoscope

புதன், டிசம்பர் 15

நந்தினி-பாகம் 1

இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல்லலாம்னு இருக்கேன். யாராச்சும் என் கதைன்னு கேஸ் போட வேண்டாம். எனக்கு கோர்ட்டுக்கு வர நேரம் இல்லை(சிபி மன்னிக்க).

பாகம் 1 : 

அதிகாலை நாலு மணி. ஊரெல்லாம் அமைதி. பஞ்சு மில்லின் மிசின் சத்தமும், மழை பெய்த குட்டையிலிருந்து தவளையின் சத்தமும் இரவின் அமைதியை குறைத்துக் கொண்டிருந்தது. ஆற்காட்டாரின் புண்ணியத்தில் நான்கு நாட்களாக எரியாமல் இருந்த மின் விளக்குகள் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிய ஆரமித்திருந்தது.

அந்த ஏரியா முழுவதும் அபார்ட்மென்ட் வீடுகளாலும், கார்களாலும் நிறைந்து அந்த ஏரியாவை பணக்காரர்கள் வாழும் ஏரியா என அடையாள படுத்தி இருந்தது. குப்பை மேட்டில் படுத்திருந்த சேவல் எழுந்து எதிரில் உள்ள மணிக்கூண்டை பார்த்து விட்டு இன்னும் கூவ நேரம் வரவில்லை என நினைத்து மறுபடியும் படுத்துக் கொண்டது.

இந்த இரவை கலைப்பதுபோல வீல் என ஒரு அலறல் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு வந்தது. மின்மினிப் பூச்சிகள் போல ஒவ்வொரு வீடாக விளக்குகள் எரிய ஆரமித்தது. இரண்டு பேர் சேர்ந்து ஒருவனை தரதரவென இழுத்து வந்தனர். பொது ஏரியாவில் உள்ள விளக்கினடியில் அவனை கொண்டு வந்தனர்.

எவனோ திருடன் போல என இரண்டு கிழவிகள் பேசிக் கொண்டனர். விளக்கு வெளிச்சத்தில் பிடிபட்டவனின் முகம் நன்றாக தெரிந்தது. ஷேவ் செய்யாத முகம். கிழிந்த பேன்ட். உடம்பு முழுவதும் சுற்றிய சால்வை. அப்படியே செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரியான தோற்றம்.

ஒருவர் வந்து அவனை யாரடா நீ என கேட்க ஆரமித்தார். பின்னல் இருந்து இளசுகள் ஆர்வகோளாரில் அடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் இது C Block-கில் உள்ள நந்தினியின் கணவர் செல்வாவாச்சே என கூற கூட்டத்தில் சலசலப்பு. சரி யாராவது போய் நந்தினியை கூட்டி வாங்க என சொல்ல நந்தினியை கூப்பிட ஒரு கூட்டம் போயிற்று.

நந்தினி. இந்த கதையின் நாயகி. தூங்கி எழுந்ததால் முகம் வாடி போய் அவள் அழகியா இல்லையா என கணிக்க முடியாதது போல இருந்தது. வயது ஒரு 30 இருக்கும். அங்கிருந்த பெருசு ஒண்ணு "ஏம்மா உன் பைத்தியகார புருசனால எவ்ளோ தொல்லை. நாங்கெல்லாம் தூங்க வேணாமா. ஒழுங்கா உன் புருஷனை மெண்டல் ஹாஸ்பிடல்ல சேரு. இல்லைனா வீட்ட காலி பண்ணிட்டு போங்க" என நந்தினியை மிரட்ட ஆரமித்தது.

நாய் வேறு சம்மந்தம் இல்லாமல் குரைத்துக் கொண்டிருந்தது. 

நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.
....

199 கருத்துகள்:

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது