Horoscope

வெள்ளி, டிசம்பர் 30

நியூ இயர்-2012

2011 வருஷம் முடிஞ்சு 2012 ஆரமிக்க போகுது. எல்லோரும் சந்தோசமா நியூ இயர் கொண்டாடுங்க.



Wish you a
Happy New Year


 இந்த நியூ இயரில் எடுக்க வேண்டிய முடிவுகள்:

- ஆனந்த தொல்லை முதல் நாள் முதல் நாளே பார்க்க வேண்டும்.
- டெரர் கும்மி பசங்களோட சாகவாசத்தை குறைக்கணும்.
- காதல் பண்ணனும்(லவ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்)

அன்புடன் ரமேஷ்....

வெள்ளி, டிசம்பர் 16

மார்கழி 1 : மலரும் நினைவுகள்


இன்று மார்கழி மாதம் ஆரமிக்கிறது. மார்கழி மாதம் என்றாலே மெல்லிய குளிர், சுப்ரபாதம், கோலங்கள் எல்லாம் நியாபகத்துக்கு வருகிறது.

சின்ன வயதில் ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் முதல் நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் போடணும்ன்னு கூடி பேசுவாங்க. அம்மா,அக்கா ரெண்டு பேர் கிட்டயும் இந்த கோலம் போடுங்க நான்தான் கலர் கொடுப்பேன்னு அடம் பிடித்த கதையெல்லாம் நியாபகத்திற்கு வருகிறது.

விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து விடுவோம். காதில் ஒரு மப்ளரை கட்டிக்கொண்டு வீட்டு வாசலில் உற்கார்ந்து கொண்டு அம்மா, அக்காவுக்கு கோலபொடி எடுத்து கொடுக்கிறது, கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.

காலை நாலு மணிக்கெல்லாம் எங்க ஊர் கோவில்ல சுப்ரபாதம் போட்டிடுவாங்க. மார்கழி மாதம் தவிர மத்த மாதம் கோவில்ல பாட்டு போடுறதில்லை. அந்த அதிகாலை குளிரில் சுப்ரபாதத்துக்கேர்ப்ப எங்கள் பல்லும் குளிரில் தாளம் போடும், டைப்படிக்கும். அதிகாலை சுப்ரபாதம் கேட்கும் பீலிங்கே தனி.

சில நேரம் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் எங்கள் வீடு மட்டுமல்லாமல் அந்த குளிரிலும் எல்லோர் வீட்டு வாசலுக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஒவ்வொரு வீட்டு கோலத்தையும் கலாய்த்து பக்கத்து வீட்டு அக்காக்களிடம் திட்டு வாங்கி வந்த அனுபவமும் உண்டு.

கோலம் போட்டு முடிந்ததும் மாட்டு சாணியை பிள்ளையார் போல பிடித்து அதை கோலத்துக்கு நடுவில் வைத்து அதில் பூசணிப்பூ சொருவி வைப்போம். மாட்டுச்சாணியில் விதவிதமான பிள்ளையார்கள் செய்து வைப்போம். கோலத்துக்கு கலர் பண்ணுவது நான்தான்.

பொங்கலுக்கு கோல போட்டி எல்லாம் நடக்கும். அப்போ எல்லாம் விடிய விடிய கோலம் போடுவாங்க. யாருக்கும் போரடிக்க கூடாதுன்னு ஒவ்வொரு தெருவிலும் டிவி, டெக் வச்சு படம் போட்டு விட்டிடுவாங்க. எப்படியும் நாலு மணி நேரம் கோலம் ஓடும். பக்கத்து வீட்டுக்காரங்க வந்து உங்க வீட்ல கோலம் நல்லா இருக்குன்னு சொன்னா கிடைக்கிற சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஆனா இப்பெல்லாம் இந்த அனுபவம் கிடைக்கிறதே இல்லை. முதநாள் இரவே கோலம் போட்டுட்டு படுத்து தூங்கிடுராங்க. காலைல குளிருதாம், கோலம் போட முடியலையாம். சில நல்ல அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

டிஸ்கி: இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கோவிலில் சுப்ரபாதம் போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து இன்று மிக நல்ல பீலிங்.

செவ்வாய், டிசம்பர் 13

டெரர் கும்மியோட பரிசுப்போட்டி

டெரர் கும்மியோட பரிசுப்போட்டி நடக்கபோகுது. அதான் பிரபலங்களிடம் போய் சில கருத்துக்கள் கேட்டோம். அவங்க இந்த போட்டிய பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு போய் கேக்கலாம் வாங்க.


http://www.terrorkummi.com/2011/12/rs10000.html

டெரர் கும்மி: சார் இந்த போட்டிய பத்தி என்ன நினைக்கிறீங்க?

பவர் ஸ்டார்: ரொம்ப சந்தோசம் தம்பி. கவலை படாதீங்க. போட்டிய மகாலட்சுமி தியேட்டர்ல வச்சிக்கலாம். எப்படியும் ஒரு வருஷம் போட்டி நடத்தலாம். அவங்க அஞ்சு வருஷம் நடத்தலாம்ன்னு தான் சொல்லுவாங்க. நாம அடுத்த போட்டிய ரிலீஸ் பண்ணணும்ல அதான் ஒரு வருஷம் போதும்ன்னு சொல்லிடுவோம்.
================================================
ஜெயம் ரவி: சொல்லுங்க பாஸ். இந்த போட்டி தெலுங்குல வந்திருக்கா?

டெரர் கும்மி: இல்லைங்க

ஜெயம் ரவி: முதல்ல தெலுங்குல நடத்துங்க பாஸ். அப்புறம் எங்க அண்ணன் ஜெயம் ராஜாகிட்ட சொல்லி தமிழ்ல டப் பண்ணி உங்க பரிசுப்போட்டிய ஹிட் ஆக்கிடலாம்.
================================================
விஜய்: ஆங் சொல்லுங்க்னா. பரிசுபோட்டிய மதுரைல ஒரு மாநாடா வச்சிகலான்னா. கவலைய விடுங்க. உங்க பரிசுப்போட்டிக்கு நான் அணிலா இருந்து அதை ஹிட் பண்றேன்.
================================================
அஜித்: எவ்ளோ பரிசு கொடுக்க போறீங்க?

டெரர் கும்மி: பத்தாயிரம் ரூபாய்.

அஜித்: மணி மணி Ding Ding(கெட்ட வார்த்தை!!) மணி மணி

டெரர் கும்மி:
மணி 12 ஆகுதுன்னு நான் சொன்னா, இத ஏற்கனவே சந்தானம் லண்டன்ல சொல்லிட்டாருன்னு சொல்லிடுவாங்க. அதனால ROFL மட்டும் சொல்லிக்கிறேன்.
================================================
சத்யராஜ்: என்னாம்மா கண்ணு வாழ்கையின் முதல் படி விளையாட ஆர் யு ரெடி?

டெரர் கும்மி: சார் சார் இது Home sweet Home Game இல்லைங்க. இது டெரர் கும்மியோட பரிசுப்போட்டி.

சத்யராஜ்:
அப்டினா. முதல்லையே சொல்ல கூடாதா. ஜெயிச்சா அல்வா கொடுப்பீங்களா?

டெரர் கும்மி: இன்னும் இவரு அல்வாவை விட்டு வரலை போல.
================================================
சூர்யா: தம்பி போதி தர்மர் கூட ஒரு பதிவர்தான். நீங்கெல்லாம் ப்ளாக்ல எழுதுறீங்க. ஆனா அவரு ஓலைச்சுவடில எழுதினாரு. உங்களுக்குள்ளயும் அவரோட DNA இருக்கும். அதை தூண்டிவிட்டா நீங்களும் நல்ல பதிவு எழுதி பரிசு போட்டில கலந்துக்கலாம்.

டெரர் கும்மி: நாங்க கலந்துக்க முடியாது பாஸ்.

சூர்யா: அப்போ போட்டில கந்துக்குரவங்க DNA வை தூண்டி விடலாம். விடுங்க.
================================================
சரி அவங்க சொன்னது இருக்கட்டும். நீங்கள் போட்டிக்கு ரெடி ஆகுங்க. பதிவை எப்படி இணைப்பது அப்டிங்கிற டீடைல்ஸ்சோட சீக்கிரமே உங்களை சந்திக்கிறோம்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது