Horoscope

சனி, ஜனவரி 19

அலெக்ஸ் பாண்டியன்

சகுனி படத்துல கார்த்தி ஒரு டயலாக் சொல்லுவார். முடிச்ச அவுக்குறது ஒரு சுவாரஷ்யம்ன்னா அவுக்க முடியாத முடிச்ச போடுறது அதவிட சுவாரஷ்யம்ன்னு. ஆனா அந்த முடிச்ச நம்ம கழுத்துல ஏன் போட்டாங்கன்னு தெரியலை. படம் பார்க்க வர்ற ஒவ்வொருத்தர் கழுத்துலையும் அந்த முடிச்ச போடுறாங்க. இதுல அவருக்கு என்ன சுவாரஷ்யம்ன்னு தெரியலை.

ஆனா ஒன்னு. நம்ம வாழ்க்கைல நாம நினைச்சதெல்லாம் வரிசையா நடந்தா எப்படி இருக்கும்? சந்தோசமா இருக்கும்ல. உங்களுக்கு அந்த சந்தோசத்தை கொடுக்க அலெக்ஸ் பாண்டியம் டீமே கஷ்டப்பட்டிருக்கு. நீங்க படத்துல அடுத்த சீன என்ன அப்படின்னு நினைச்சாலே போதும் அதே சீனை டைரெக்டர் உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவார். ஐ நான் நினைச்ச சீனே வருதேன்னு நீங்க பெருமை பட்டுக்கலாம். இதுக்காகவே இந்த டீமை நாம  பாராட்டனும்.

நீங்கள் நினைக்கும் பொக்கிஷ காவியங்கள் சில :

1. முதல் காட்சிலையே அனுஷ்காவ ரவுடிங்க விரட்டிட்டு வரும்போது இப்ப பாரு கார்த்தி பின்னாடியே வந்து காப்பாத்துவாருன்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

2. கடத்த வந்த ஹீரோ மனசு மாறுவார்,அனுஷ்கா அவரை லவ் பண்ணுவார்ந்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

3. ஹீரோவை கட்டிப்போட்டு அடிக்கும்போது நீங்கெல்லாம் தைரியமான ஆம்பளையா இருந்தா கட்ட அவுத்து விட்டு அடிங்கடான்னு நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

4. அப்போ வில்லன் ஆளு பத்து கிலோமீட்டர் போயி தள்ளி விழுவாண்டான்னு  நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

4. சந்தானத்தோட மூணு தங்கச்சிகளையும் கார்த்தி உஷார் பண்ணும்போது மூணு பேர் கூடையும் ஒரே பாட்டில் ஆடுவாருன்னு  நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

5. ஹீரோ கடைசி வரை திருந்தாம வில்லன் இடத்துல போயி ஹீரோயினை ஒப்படைச்சிட்டு அப்புறம் திருந்துவாருன்னு  நீ சரியா சொன்னா நீ சினிமா ரசிகன்டா.

இப்படி நீங்கள் தமிழ் சினிமாவில் ரசித்த பல காட்சிகளை உள்ளே புகுத்தி உங்களுக்குள் முழித்திருந்த கஜினியை தூங்க வைத்த இந்த டீமை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கார்த்திக்களே,சூர்யாக்களே,தனுஷ்களே தயவு செஞ்சு ரிட்டயர்டு ஆகிடுங்க.இல்லைன்னா ஒழுங்கா படம் கொடுங்க. இல்லைன்னா எங்களுக்கு பவர் ஸ்டார்கள்,விஜய்  சேதுபதிகள்  போதும்ன்னு ரசிகர்கள் நினைச்சிடுவாங்க.

அலெக்ஸ் பாண்டியன் - போண்டியன்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது